Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, July 1, 2017

The Handmaiden (2016) - ஒரு பார்வை





பார்த்ததில் மிகவும் ரசித்தது :114.

த்ரில்லர் கதைக்கான அடிப்படை சூத்திரமே அதன் பரபரப்பான திரைக்கதை. அதிவேக சேஸிங் காட்சிகள். ஆயுதங்களின் பெரும் இரைச்சல். குறிப்பாக ஒரே இடத்தில் நில்லாமல் அனைத்திலும் வேகமாக சுழலும் கேமரா. அதற்கேற்ற எடிட்டிங். 


ஆனால், மிக நிதானமாக நின்று பயணிக்கும் ஒரு திரைக்கதையில், மிகயதார்த்தமான ஒரு மெலோ டிராமாவில், சேஸிங், ஆயுதங்கள் ஒலி எதுவுமே கேட்க்காத ஒரு கதையில், துவக்கம் முதல் இறுதிக்கு முந்திய காட்சிவரை வரை நூலிழை அளவு மட்டுமே தெரியும் பெரும் திர்ல்லருக்கு உண்டான அறிகுறிகள். மிகஅடக்கமாக இறுதிகாட்சி வரை எந்தவித ஆர்ப்பாட்டமும் மின்னல்வேக சுழலும் காமெராக்கள் மற்றும் சேஸிங்கும் இல்லாமல் கொண்டுவந்து இறுதிகாட்சியுடன் இணைத்தது. மேலும் இக்கதைக்கு பீரியட் (193௦)யை கதைகளமாக பயன்படுத்தியது என இப்படம் பார்வையாளனுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. 


இங்கு கொரியாவில் இருந்து ஜப்பானில் பெரும் செல்வந்தர் வீட்டிற்கு வேலைக்கு செல்லும் #பணிப்பெண்_HANDMAIDEN பிரதான பாத்திரம். இங்கு வரும்பொழுதே அவள் அங்கு ரகசியமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒப்புக்கொண்டே வருகிறார். ஊருக்கு சற்று தள்ளி அமைந்துள்ள அந்த பெரும் மாளிகையினுள் SOKEE எனும் அப்பனிப்பெண்னுடனே நுழைகிறது அந்த நூலிழை அளவு திர்ல்லிங்கும். எந்த இடத்திலும் அந்த நூல் முடிச்சிட்டு பார்வையாளரை குழப்பாமலும். அதே நேரம் அங்கு நம்மால் இனம் கண்டுகொள்ளப்படாத ஏதோ ஓர் நிகழ்வு நடந்துவருவதை ஹாரர் கதைகளை போல ஒலி மூலம் நமக்கு உணர்த்தாமல். யதார்த்த காட்சி அமைப்பின் மூலமே உணரச்செய்யும் உருவாக்கல் அசாத்தியம். 


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு பணத்தை பிரதானமாக கொண்டு நடைபெறும் விதங்களில் ஒன்றை எவ்வாறு யுத்தம் செய் வெளிச்சமிட்டு காட்டியது. அதனினும் பலமடங்கு முதிர்ச்சி பெற்றவராலும் யூகிக்க இயலா வகையில் அங்கு நடைபெறும் சம்பவ(ம்)ங்கள் நமக்கு மிகபெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. திட்டத்துடன் நுழையும் அந்த பெண்ணின் பாத்திரம் வழக்கமான வெகுளியாக சித்தரிக்கப்பட்டாலும், அவளின் பிடிவாதமும்,          விடாமுயற்சியுமே இக்கதையை வெறும் முடிவுக்கு கொண்டுவராமல் சுபமாக முடிவுற செய்கிறது.


இப்படத்தின் இயக்கம் CHAN_WOOK_PARK. இவர் OLDBOY படத்தின் திரைக்கதை இயற்றியவர். SYMPATHY FOR MR. VENGEANCE, LADY VENGEANCE, THIRST படங்களின் இயக்குனர். கதையின் போக்கில் காட்டப்படும் காட்சிகளுக்கும் அது செல்லும் முடிவும் உண்மையல்ல என்று சால்ஜாப்பு காட்சிகளின் மூலம் ஒப்பேற்றிவிடாமல் அதற்க்கு தரப்பட்ட டீடைலிங்க் இந்த மேதையின் திரைக்கதைக்கான மிகபெரும் சான்று. “SARAH WATERSன் “FINGERSMITH” நாவலை அடிப்படையாக கொண்டே இக்கதை உருவாக்கப்பட்டாலும் இவரை விட யாராலும் இதன் மூலம் கெடாமல் அதை மேலும் சிறப்பிக்கும்படி உருவாக்க முடியாது என இந்நூலின் ஆசிரியர் கூறியதே இவருக்கான மிகப்பெரும் சான்று.

TRAILER LINK: உங்களுக்கு தில் இருந்தா இந்த ட்ரைலர் மட்டும் பார்த்திட்டு படத்தை பார்க்காமல் இருக்கவும்.

https://www.youtube.com/watch?v=IkvHtfRAKNk 

இதில் அதிர்ச்சியளிக்கும் பல சம்பவங்களும், நாம் அறிந்திடாத பல பாத்திரபடைப்புக்களும் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

No comments:

Post a Comment

Search This Blog