பார்த்ததில் மிகவும் ரசித்தது : 083.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை அச்சு அசல் பிரதிபலிப்பவர்கள், அதர பழைய கதையை புது பாணியில் கொடுத்து அசத்துபவர்கள் இந்த முறை அதிரி புதிரியாக அசத்தியது கேங்ஸ்டர் களத்தில்.
கேங்ஸ்டர் கதை தான். ஆனால் கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாமல். வெறி தீர துரத்தும் பழிவாங்கல் இல்லாமல்.சீறி பாயும் வாகனங்களின் பேரிரைச்சல் இல்லாமல். மிரட்டும் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் இவர்கள் தந்தது வழக்கத்தைவிட மிரட்டல் சினிமா.
மும்பை ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணன். ஒருநாள் தனது பால்ய நண்பன் கங்கா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறும் நொடியில் பெரும் சப்தத்துடன் அவரது அலைபேசி மறுமுனையில் விழுந்து நொறுங்குகிறது. நண்பனை தேடி தனது சொந்த ஊரான கம்மட்டிபாடதிற்கு கிளம்புகிறான் கிருஷ்ணன் தனது பால்ய நினைவுகளுடன்.
அங்கு ஆசான்தான் பெரிய மனிதர். அவர் நினைப்பதை செய்து முடிக்கும் எதுவாயினும் செய்து முடிப்பவன் பாலன். அவனுக்கு கீழ் அவனது தம்பி கங்கா, அவனது நண்பர்கள் கிருஷ்ணன் மற்றும் அவர்களது என சில பதின்பருவத்து பசங்க. பாலனோட சேந்து ஒரு பெருமைக்கு, கெத்து காட்ட கங்கா & கிருஷ்ணா நண்பர்கள் குழு செய்யும் சிறு சிறு தவறுகள் மேல் இவர்களுக்கு ஏற்படும் அதீத ஈடுபாட்டால் அடுத்த முப்பது வருடங்களில் இவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே.!!
குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டியது திரைக்கதை மட்டுமே. நிறைய பாத்திரங்கள் உள்ள கதையை மூன்று கிளை திரைக்கதைகளாக நகர்த்தி சென்ற விதம் மகா துல்லியம். சுமாரான கதையை அசாத்திய பாத்திரங்களை கொண்டு அவர்களையும் மொக்கையாக்குவதும். அசாதரணமான கதையை சுமாரான பாத்திரங்களை கொண்டு அக்கதையையும் சுமாராக மாற்றுவது எல்லாம் நிறைய நாம் இங்கு பார்த்தது.
அனைவரின் பங்களிப்பும் நிறைவாக இருப்பினும் இக்கதையின் உயிர்நாடியான இந்த இரு பாத்திரங்களின் பங்களிப்பு.!!
ஒவ்வொரு பாத்திரதிற்க்கும் மூன்று மூன்று நடிகர்கள். குழந்தைபருவம், பதின்பருவம், 40+ வயதிற்கான பருவம் என இவர்களின் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு.!! இதுப்போல பத்து பொருத்தமும் கூடி வரும் ஜாதகத்தை மிக சமீபத்தில் பார்த்ததாக நிச்சயம் நினைவில் இல்லை.
1.இவர்கள் வாழ்க்கையில் ஜாலிக்கு தொடங்கி பணத்திற்காக இந்த அடிதடியை தொடரும் தருணம்.!!
2.படத்தின் துவக்கத்தில் இவர்கள் பயன்படுத்திய பாதையும் நிலஆக்ரமிப்புக்கு பின் மிககுறுகிய பாதையின் வழியே இவர்கள் பிணத்தை தூக்கி செல்லும் காட்சி .!!
வசனங்கள் ஏதுமற்று திரைக்கதையின் உழைப்பிற்கு இந்த இரு காட்சிகளே சான்று.
https://www.youtube.com/watch?v=B-m13AJMxW4
No comments:
Post a Comment