பார்த்ததில் மிகவும் ரசித்தது : 076.
சவுண்ட் மிக்சிங்... நம்ம பக்கத்து மாநிலத்துல இருந்து ஆஸ்கார் வரை சென்று இந்த பிரிவில் விருது வாங்கியவர் கூட உண்டு. ஆனால், என(நம)க்கு இந்த துறை பற்றி பெரிய பரிட்சயமேதுமில்லை. சவுண்ட் மிக்சிங் ஒரு படத்தின் வெற்றிக்கு எவ்வளவு தூரம் துணை புரியும் அல்லது ஒரு படம் முழுமையடைய இந்த துறையின் பங்களிப்பு என்ன?
இந்திய அளவில்! ஏன் உலகளவில்!! வெற்றிபெற்ற பெரும் பட்ஜெட் படங்களில் கூட உணரமுடியாத இந்த துறையின் மதிப்பை. வெறும் நான்கு பாத்திரங்கள் அதிலும்.. இரு பாத்திரங்கள் மட்டுமே பெரும்பான்மை வகிக்கும் ஒரு ஒன்றரை மணிநேர கதையில் உணரமுடிந்தது. திரையில் மைக்ரோ செகண்ட் வந்து போகும் காட்சிகளில் கூட, இவர்களது உழைப்பும் நுண்ணிய செயல்பாடுகளும் பெரிதும் ஈர்த்தது.
திடும்... என பெரும் சப்தத்துடன் டைட்டில் கார்ட். ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த வனத்தின் உள்ள சிறிய வீட்டில் துவங்குகிறது. முதல் நான்கு நிமிட படம்... அடுத்த ஒன்றரை மணிநேர கதைக்கான அடித்தளம். காது கேளாத ஒரு பெண் எழுத்தாளர் தனது எழுத்து பணிக்காக தனிமை வேண்டி தங்கியுள்ள வீட்டில் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் தனிமையில் சிக்கி கொள்கிறார்.
இதே பாணியில் ரத்தமும் சதையுமாக நிறைய கதைகளை பார்த்திருந்தாலும் எழுத்தாளர் & கொலைகாரன். என இரண்டே பாத்திரங்கள் மட்டுமே கொண்டு சிறிதும் பார்வையாளருக்கு சலிப்பும் ஏற்படுத்தாமல் பெரும் எதிர்பார்பையும் ஏற்படுத்தும் அதிவேக திரைக்கதை.
கதைக்களமாக ஓரே வீடு, பாத்திரங்களாக இருவர், காலம் ஓரே இரவு. என அனைத்தும் மிக எளிமையாக எடுத்துக்கொண்டு. மிக பிரமாண்டமான திரைக்கதையும், சுவாரசிய சம்பவங்களை கொண்டு காண்போரை சிறிதும் நகரா வண்ணம் அமைந்த செம்ம திர்ல்லர் வகையறா சினிமா.
https://www.youtube.com/watch?v=Q_P8WCbhC6s
No comments:
Post a Comment