Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, December 18, 2018

ROMA (2018) – SPANISH – பேரனுபவம்.





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 140.

ROMA  (2018) – SPANISH – பேரனுபவம்.

அதிகமா வலுவான கதையும், அதிக வசனங்களும் கொண்ட படங்களை பார்த்து பழகிய நமக்கு. காட்சிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து பெருசா எந்த அதிரடி திருப்பங்களும் இல்லாத ஏதாவது ஒரு எளிய மனுசனோட வாழ்க்கையின் சில பக்கங்கள மட்டும் ஒரு படமாக்குவது இவர்களின் பாணி.. அவங்களோட நிதானமான கதை நகர்த்தும் யுக்தி காட்சிகளின் மேல அவங்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான். என்ன ஒரு மழையை, ஒரு பாத்திரம் நடந்து போவதை கூட ஒரே ஷாட்டில் ரொம்ப மெதுவா நீட்டி சொல்லிருப்பாங்க. எதனால இவ்ளோ DETAILING ஒவ்வொரு காட்சிக்கும். இது பார்வையாளருக்கு சலிப்பை ஏற்ப்படுத்தாதா? இல்ல அது நம்ம அந்த காட்சிகளோட ஒன்ற செய்ய யுக்திதான்.

 எப்படினா..!

இந்த படம் போலவே ஒரு வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை பற்றிய கதையில் நம்ம சினிமாவில் அந்த வீட்டோட முக்கிய பெண் பாத்திரம். இந்த பெண்ணோட தலையை ஆறுதலா தடவியபடி அவங்க வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் “இவளும் எங்க வீட்ல ஒருத்தி மாறிதானு” சொல்றபோல ஒரு காட்சி கண்டிப்பா வரும். அதுலயே நாம அந்த பாத்திரத்தோட தன்மை, குணாதிசியம்னு ரொம்ப எளிமையா புரிஞ்சிக்கலாம். ஆனா இதே இந்த படத்தோட ஒரு காட்சியில இரவு பணி முடிஞ்சி தன்னோட அறைக்கு அந்த பெண் போவாங்க அப்ப அந்த வீட்டோட லைட் எல்லாம் OFF பண்ணிட்டே போவாங்க. அதும் ஒரே ஷாட்டில் ஒரு நிமிஷம் வரை போகும். இது காட்சிவழியே அந்த பொண்ணோட வேலையின் சுமையை அவங்க அக்கறையை புரியவைக்கும் ஒரு யுக்திதான். அந்த காட்சிக்கு இடையே சில வினாடிகள் வரும் ஒரு காட்சியும் இருக்கும்.


இரவு வீட்டிற்கு வந்த அந்த வீட்டோட தலைவரு ரூம்ல மனைவிட்ட சத்தம் போட்டுட்டு இருப்பாரு. வீட்டுக்கு வெளில நம்ம நாய் நெறைய இடத்துல அசிங்கம் பண்ணி வெச்சிருக்கு. என்ன வேலை பாக்கறாங்க. இதெல்லாம் நீ கேக்கமாட்டியானு. இந்த பொண்ணு ஒவ்வொரு லைட்டா அமிச்சிட்டே வரும் சத்தம் கேட்டதும். அந்த பெண்மணி ரூமோட கதவ வேகமா சாத்துவாங்க அவளுக்கு கேட்டுடகூடாதுனு. இதெல்லாம் இயக்குனரோட அசாத்திய திறமைதான். அந்த ஒரு ஷாட்லையே அந்த பெண் எப்படி தன்னோட வேலைல கவனமா இருக்கறாங்கன்னு மட்டுமில்லாம. அந்த வீட்டோட தலைவி இவங்கமேல என்ன அபிப்பிராயதுல இருக்காங்கனும் தெரியபடுத்தி இருப்பாங்க. நம்ம அதிகமா வசனத்தை வெச்சி புரியவைக்க முயற்சிக்கறோம். இவங்க காட்சிவழியா இப்படி உணர்த்தறாங்க அவ்ளோதான்.

ரொம்ப சாதாரணமா ஆரமிச்சி போய்டே இருக்கற கதைல நாப்பதாவது நிமிசத்துல தான் நமக்கு ஒரு பிடிப்புவரும். அதாவது நமக்கு சினிமான்னா எதாவது திருப்பம் காட்சிகள்ல இருந்துட்டே இருக்கனும்ல. அப்படி கொஞ்சமா ஒரு குட்டி திருப்பம் அந்த வேலை பாக்கும் பொண்ணு தான் கர்ப்பமா இருக்கறத தெரிஞ்சி. அந்த வீட்டு தலைவிட்ட அத சொல்லவர காட்சி. அதுவரைக்கும் ரெண்டுபேருக்கும் பெருசா எந்த வசனமும் இருக்காது. ஆனா இதுக்குள்ளவே அந்த பொண்ணு இந்த வீட்டு குழந்தைங்கள்ல இருந்து அந்த வீட்டு நாய்வரை எவ்ளோ அந்நியோனியமா இருக்காங்கனு பல காட்சிகள்ல சொல்லியிருப்பாங்க.


அந்த பொண்ணு இந்த விசயத்த கொஞ்சம் பதட்டமாவே சொல்லி முடிச்சிட்டு. “என்ன வேலைய விட்டு தூக்கிடுவிங்களானு” கேக்கும். அப்படில்லாம் இல்லவே இல்லன்னு அதுவரை ஆறுதலா அந்த பொண்ணோட கையை மட்டும் நீவிவிட்டுடு இருந்த அந்த பெண்மணி அவங்களோட சேர்த்து அணைச்சி ஆறுதல் சொல்ற அந்த காட்சி அப்படியே நம்மள நெகிழவெச்சிடும். காரணம் என்னதான் நமக்கு அவங்க பாத்திரத்தோட தன்மைய பலகாட்சிகள் மூலமா நமக்கு புரியவெச்சாலும். இப்படியான நிகழ்வுகள் மூலமாதான அந்த பொண்ணு இதஉணரும். இங்கயும் முன்ன சொன்ன காட்சிபோலவே இயக்குனர் அவரோட ஒரு EXTRA BIT சேர்த்து இருப்பாரு. ஆனா அது நூல்அளவு கூட தெரியாது. அந்த வீட்டு பெண்மணி அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கும் போதே அவங்க சின்ன பையன் வரைஞ்ச படத்த அவங்க அம்மாகிட்ட கொண்டுவருவான்.

WHY IS CLEO CRYING?

SHE HAS A TUMMY ACHE. னு அந்த பெண்மணி சொன்னதும். அந்த குட்டி பையன் அந்த பொண்ணோட மடியில் அமர்ந்து. ஆறுதலா அவங்க தோள்ல சாஞ்சிகிட்டு. அவங்க வயிற்றை நீவியபடியே

PAIN PAIN GO AWAYனு பாடும்போது ஏற்கனவே கொஞ்சம் கலக்கமா இருந்த மனசு, இந்த சிலவிநாடி நிகழ்வு கண்கலங்க வெச்சிடுது. அப்படி யார்தான் இதனோட இயக்குனர்னு பார்த்தா நமக்கு ஏற்கனவே நல்ல அறிமுகமான GRAVITY, Y TU TAMBIEN படங்களோட இயக்குனர் ALFONSO CUARON.

என்ன இருந்தாலும் நம்ம பாணிதான் காட்சிவழி கதை சொல்றதவிட பலம்னு நெனச்சாலும். இதுல ஒரு பிரசவ காட்சி ஒன்னு இருக்கு. அது ஒன்னு போதும். அந்த சில நிமிட காட்சிக்கு கண்டிப்பா அவங்க சில வார உழைப்பை போட்டு இருப்பாங்க. நிறைய படங்கள் நம்மள கலங்க வெச்சி இருந்தாலும். ரொம்ப நேரம் கண்ணீர்விட்டு அழவைக்க இப்படியான சில அபூர்வ படைப்புகளாலதான் முடியும்.

TRALIER LINK:
https://www.youtube.com/watch?v=UspdGO-XBi8

No comments:

Post a Comment

Search This Blog