பார்த்ததில் மிகவும் ரசித்தது: 139.
அமானுஷ்ய கதைகளோட பெரிய பலமே முதல்
பதினைந்து நிமிசம்தான். அந்த கொஞ்சநேரத்துல அவங்க ரசிகர்களோட நாடித்துடிப்பை
வெறும் SOUND EFFECT ல மட்டுமில்லாம கதையில நடக்கபோற ஏதோ ஒரு சம்பவத்தின் மேல கொஞ்சம் எதிர்பார்பாவது ஏற்படுத்தனும்.
அந்த மாறி படங்கள்தான் நம்மை ஆரம்பம்ல இருந்து கதை மேல ஒரு ஈர்ப்பை
ஏற்படுத்தும்.
பூர்த்தி தேவி அளவில்லா செல்வமும்
தானியமும் கொண்டவள். இந்த பூமி அவளோட வயிற்றிலதான் அமைஞ்சி இருக்கு. இந்த
பிரமாண்டம் உருவானப்பதான் தேவி இந்த வயிற்றில இருந்துதான் 16 கோடி தேவாதி தேவர்கள
உருவாக்குனா. தேவிக்கு தன்னோட முதல் குழந்தை மேல அளவில்லா அன்பு இருந்தது. அவன்
பேர் HASTAR. எந்த மதபுத்தகத்துல தேடினாலும் இந்த பெயர் உங்களுக்கு கிடைக்காது
‘’ஏன்னா?’ அவன் தேவியோட தங்கத்தையும், தானியத்தையும் அடைய நெனச்சான். தங்கம்
மொத்தத்தையும் சொந்தமாக்கிட்டான். ஆனா தாணியத்த அடைய நெனச்சப்பதான் மத்த
தேவர்கள்ளாம் அவன தாக்கினாங்க. தேவிதான் அவன காப்பாத்தினாங்க ஒரு நிபந்தனையோட.
அதாவது இனி HASTAR யாரும் வணங்கமாட்டங்க. அவன எல்லோரும் மறந்துடுவாங்க. பல
யூகங்கள் கடந்துச்சி. HASTAR தேவியோட வயத்துகுள்ளவே தூங்கிட்டு இருந்தான். இந்த
நேரத்துலதான் நம்ம முன்னோர்கள் HASTAR பேர்ல ஒரு கோயில கட்டுனாங்க. அதிலிருந்தே மொத்த
தேவர்களோட கோவமும் நம்ம ஊர் (அது தான் இந்த படத்தோட தலைப்பு) மேல திரும்பி மழையா
பெய்ய ஆரமிச்சது. இப்ப நாம அவன எழுப்பனும். ஏன்னா அவனோட சாபம். நமக்கெல்லாம் வரம்.
‘’புரியலையே.
“உள்ள போனதும் புரிஞ்சிப்ப.’
“உள்ளனா? ‘எங்க’.
தேவியோட வயித்துகுள்ள’’.
படம் துவங்கிய முதல் ஷாட்டே ஒரு கையில்
தானியமும் ஒரு கையில் தங்கமும் நிற்காமல் கொட்டிகொண்டே இருக்கும் சிற்பமும். அதன்
பின்னே VOICE OVER ல வரும் வசனங்கள்தான் மேல சொன்னது. எந்த பெரிய
ஆர்ப்பாட்டங்களும் இல்லாம வெறும் உரையாடல் மூலமே கதையோட ஆரம்பத்துல ஏற்படுத்துன
இந்த எதிர்பார்ப்ப கடைசிவரை கொண்டுவந்து. CLIMAX ல எதிர்பார்ப்புக்கும் மேலயும்
பூர்த்தி பண்ணி இருக்காங்க.
1918 களில் கதை ஆரமிக்குது. அதாவது
மொத்த தேவர்களோட சாபத்தால எப்பவும் மழையோடே இருக்கும் TUMBBADங்கற அந்த கிராமத்துல.
கிட்டத்தட்ட மொத்த பேருமே அந்த ஊர காலிபண்ணிட. தேவர்களோட சாபத்துக்கு காரணமானமானவங்களோட
இந்த தலைமுறைய சேர்ந்த ரெண்டு பசங்களும்
அவங்களோட அம்மா + இன்னொன்னும் அந்த ஊர்ல இருக்கு.முதல் அந்த சில நிமிடங்களில்
அவங்க கூட தங்கியிருக்கும் அந்த வயதான பாத்திரம் நமக்குள் நிச்சயமாக சிறு
பயத்தையும் சிதிலமடைஞ்சி போன அந்த அரண்மனையின் உள்ளே ஒளிந்திருக்கும் பெரும்
புதையல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திடுது.
“ஆனாலும் நீ ரொம்ப பேராசைகாரன்டா”
என்கிட்டே இருக்கறதுலையே எனக்கு
ரொம்ப பிடிச்சதே இது ஒன்னுதான்.
அந்த புதையலை எடுக்க முயற்சி பண்ணி
தன்னோட முன்னோர்கள் மொத்த பேரும் இறந்தாங்கங்கற வரலாறு தெரிஞ்ச அப்பறமா வரும்
உரையாடல்தான் மேல சொன்னது. அந்த தங்க நாணயங்களை மொத்தமாக எடுக்க முடியாது. சில
வழிமுறைபடி முயற்சி பண்ணா சில நாணயங்கள் கிடைக்கும். ஆனால் உயிருக்கு
உத்திரவாதமில்லை. இப்படியே கிடைக்கும் சில நாணயங்களை கொண்டு தனது குடும்பத்தை
நடத்தி வரும் நாயகன் .
தனது காலத்திற்கு பின்னாடியும்
தன்னோட பையனும் அந்த நாணயங்கள எப்படி எடுக்கணும்னு அவனுக்கு வீட்டிலேயே பயிற்சி
கொடுக்கறாரு. இந்த சூழல்ல இந்தியா சுதந்திரத்திற்கு பின்னால யாருமே இல்லாதே அந்த கிராமத்தை
மாதிரி கிராமமாக்க சட்டம் கொண்டு வராங்க. திரும்ப முன்ன போல எப்பவேணா அந்த
கிராமத்துக்கு போய் தங்ககாசு எடுக்கும் வாய்ப்பு. கிடைக்காம போகலாங்கற சூழ்நிலை
உருவாகுது. ரொம்ப பேராசைகாரனாலதான் இத்தனை காலம் உயிரை பணயம் வெச்சி இப்படியான
வேலைய செய்ய முடியும். இந்த சூழல்ல அவனோட பையன் அந்த தங்கத்த மொத்தமா எடுக்க ஒரு
யோசனை சொல்றான். அந்த பையன் வர ஆரமிக்கும் காட்சிகள்ல இருந்துதான் படம் இன்னும் பெரிய
பரபரப்பு கட்டத்துக்கு வருது. சில தங்கக்காசுகளை எடுக்கவே உயிரை பணயம் வெக்கும் சூழல்ல
மொத்தமா எடுக்கும் யோசனையே வேணாம்னு சொல்ல முடியாத சூழல். அரசாங்கம் அவங்க
திட்டத்த செயல்படுத்த ஆரமிச்சி திரும்ப அங்க போகவே முடியாத நிலை வந்துட்டா என்ன
பண்றதுன்னு அவனும் பையனோட திட்டத்துக்கு சம்மதிக்கறாரு அந்த தேவியோட வயித்துக்கு
உள்ள போற காட்சிகள் எல்லாமே நம்மள ரொம்ப படபடக்க வெச்சிடுது.
இது சாமி பூதம் கதை மாறி தெரிஞ்சாலும்
கதைல எங்கேயும் பூஜை, விரதம் மாறி சமாச்சாரம்லாம் எதுமே இல்லாம ரொம்ப கவனமா
திரைக்கதை பண்ணிருக்காங்க. PERIOD கதைகள்ள ரொம்ப முக்கியமான ART DEPT வேலைய ரொம்ப
பிரமாதமா பண்ணியிருக்காங்க. அதும் அவன் சின்ன பையனா இருக்கும் துவக்க காட்சிகள்ல
அவங்க தங்கியிருக்கும் வீடும் அந்த GASTHARட்ட சாபம் வாங்குன பாட்டி இருக்கும்
அறையும் செம்ம. அந்த கால் ஊனமான சின்ன பையனோட தேவி வயித்துக்குள்ள போற இறுதிகாட்சிலாம்
விவரிக்கவே முடியாது.
No comments:
Post a Comment