Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, December 28, 2018

SANJU (2018) – HINDI – ரன்பீர் எனும் அசுரன்



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 141.
. 
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதும். படைப்பாளிகள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் சில நொடிகளேனும் இப்படத்தை பற்றிய ஏதேனும் சில நிகழ்வுகளை மனதிரையில் உருவகபடுத்தி இருப்போம். அவை பெரும்பாலும் சஞ்சயின் தீவிரவாத பக்கங்களை சார்ந்ததாகவே இருக்கும். காரணம் இந்த நடிகனின் கதையில் பெரும் சூவாரசியம் ஒளிந்திருக்கும் பக்கங்கள் அவை. இதற்க்கு முன் வந்த அனைத்து BIOGRAPHY கதைகளைகாட்டிலும் அதிக ஆர்வம் இந்த படத்தின் மீது ஏற்பட மிகமுக்கிய காரணம். இவரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு முன்பே பரிட்சயம் என்ற எண்ணமே. பெரும்பாலானோர் இப்படத்தை தவறவிட்டதற்கும் இதுவே மூலகாரணியாகும்.


இந்த கதையை எடுக்க இவர்கள் முன் இருந்த மிகபெரும் சவால் மொத்த பார்வையாளருக்கும் இப்படத்தின் கதை தெரியும் என்பதே. தெரிந்த கதையையே மீண்டும் திரையில் ஒருமுறை பார்க்க வேண்டுமா என்ற எண்ணமும் பெரும்பாலோருக்கு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. நாம் அனைவரும் இக்கதையை எந்தெந்த கோணத்தில் காட்சிபடுத்தி இருப்பார்கள் என்று கணித்திருந்தாலும். நம் அனைவரின் யூகங்களையும் பொய்யாக்கி SANTHOSHKUMAR HIRAANI இக்கதையை தொடுத்த விதமே இவரின் தனித்துவம். இவரின் முந்தைய எந்த கதைக்கும் தேவைபடாத அளவு எடிட்டிங் துறைக்கு பெரும்பங்கு பொறுப்பு கொடுக்கும் கதை. 


படத்தின் துவக்க நிமிடத்தில் இருந்து இறுதி ஷாட்வரை நம்மை அதே ஆர்வத்தில் சற்றே குழைந்து படம் நெடுகிலும் உருக வைக்க இப்படியான வெகுசில நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். நம் நினைத்ததும் சட்டென நம் நினைவில் வரும் சஞ்சயின் அந்த நான்கைந்து தோற்றங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்தது மட்டுமின்றி அந்த இடப்பக்கம் சற்றே திரும்பிய வாக்கிலே இருக்கும் அவரின் கழுத்தும். கால் பாகம் இடுங்கிய பார்வையையும். உடற்பயிற்சியின் காரணமாக அகன்ற தோள்களால் உடலோடு ஒட்டாமல் சற்றே விலகியேயிருக்கும் அவரின் கைகளும் மற்றும் தோள்கள் சற்றே சாய்ந்தபடியே நடக்கும் அந்த எகத்தாள நடையையும் இந்தஅளவு வேறு எந்த நடிகனாலும் உள்வாங்கி சாத்தியபடுத்தி இருக்க இயலுமா என்பது கேள்விக்குறி.


ஒருவேளை இவர்மீது பதிந்த அந்த தீவிரவாதி கரை உண்மையாக இருக்குமோ என முன்னாபாய் படத்தைகூட இன்றுவரை பார்க்காமல் தவிர்த்து வரும் என்னை போன்றவர்களுக்கு. இந்த படத்தின் மூலம் மிக தெளிவான ஒரு பார்வையை நம் மக்கள் உடனே ஏற்றுகொள்ளும் வகையில் மிக நெகிழ்ச்சியாகவே தொடுத்திருக்கிறார் இயக்குனர். அப்பா, அம்மா, காதலி, மற்றும் நண்பர் என மிக சில பாத்திரங்கள் மட்டுமே முழு கதையையும் ஆக்கரமித்திருப்பினும்  அவை நமக்கு முழு கதையிலும் பெரும் ஆர்வத்தை மட்டுமே ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை. அதிலும் சஞ்சயின் நண்பன் பாத்திரம் ஏற்றிருக்கும் MASAAN மற்றும் RAAZI புகழ் VICKYKAUSHAL படம் நெடுகிலும் நம்மை நெகிழ செய்ததில் பெரும்பங்கு.


இப்படியான கதையை எங்கிருந்து துவங்குவது என்பதில் துவங்கி பெரும் சர்ச்சையான இவரின் தீவிரவாத முகத்தை எவ்வாறு நியாயபடுத்த அல்லது எவ்வாறு கூறினால் அது நம்மை சமாதானபடுத்துமோ அந்த வகையில் வடிவமைத்த திரைக்கதை. இது PK படத்தின் திரைக்கதை உழைப்பிற்கு சற்றும் சளைத்ததல்ல. ரன்பீர் எனும் மஹா அசுரனின் பெரும் பாய்ச்சல் இப்படம். குழந்தையின் கண்களில் சட்டென அரும்பும் கண்ணீரில் அது செய்த தவறுகள் அனைத்தையும் மறந்து வாரியணைக்கும் தாயை போல். சஞ்சயின் அனைத்து தவறுகளையும் மறந்து மன்னித்தே ஆகவேண்டிய சூழலுக்கு நம்மை ஆட்படுத்திறார் ரன்பீர்.


1.இவரின் துவக்க காலம். அதிலேயே போதைக்கு அடிமையாகி   அதிலிருந்து மீண்டுவருவது.
2. 12 வருடங்களுக்கு மேல் முன்னணி நாயகர்களில் ஒருவராக வளம் வரும் பகுதி.
3. ஆயுதம் வைத்திருந்த சர்ச்சையில் முதன்முதலில் சிக்கியது.. 
4.  தீவிரவாதி பழியுடன் இறுதியில்சிறை சென்று மீண்டு வருவது



இதில் சர்ச்சையான இவரின் மூன்று காலகட்டங்களை மட்டுமே எடுத்துகொண்டு அதற்க்கு மிக தெளிவாக இவர் பக்கத்து நியாயங்களையும். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் அதிகபிரசிங்கி தனங்களையும். சஞ்சயின் வாக்குமூலம் மற்றும் தீர்ப்பின் முழு விவரங்கள் அனைத்தையும் RKH தனக்கே உரிய அதே சுவாரசியம் குறையாத பாணியில் முந்தைய படங்களை போலே வழங்கி உள்ளார். சஞ்சய்தத் காலத்திற்கும் கடமைபட்டிக்க வேண்டுமெனில் அது ரன்பீர் மற்றும் RKHக்கே..

TRAILER LINK:

https://www.youtube.com/watch?reload=9&v=rRr1qiJRsXk

No comments:

Post a Comment

Search This Blog