Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, December 28, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 141.
. 
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதும். படைப்பாளிகள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் சில நொடிகளேனும் இப்படத்தை பற்றிய ஏதேனும் சில நிகழ்வுகளை மனதிரையில் உருவகபடுத்தி இருப்போம். அவை பெரும்பாலும் சஞ்சயின் தீவிரவாத பக்கங்களை சார்ந்ததாகவே இருக்கும். காரணம் இந்த நடிகனின் கதையில் பெரும் சூவாரசியம் ஒளிந்திருக்கும் பக்கங்கள் அவை. இதற்க்கு முன் வந்த அனைத்து BIOGRAPHY கதைகளைகாட்டிலும் அதிக ஆர்வம் இந்த படத்தின் மீது ஏற்பட மிகமுக்கிய காரணம். இவரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு முன்பே பரிட்சயம் என்ற எண்ணமே. பெரும்பாலானோர் இப்படத்தை தவறவிட்டதற்கும் இதுவே மூலகாரணியாகும்.


இந்த கதையை எடுக்க இவர்கள் முன் இருந்த மிகபெரும் சவால் மொத்த பார்வையாளருக்கும் இப்படத்தின் கதை தெரியும் என்பதே. தெரிந்த கதையையே மீண்டும் திரையில் ஒருமுறை பார்க்க வேண்டுமா என்ற எண்ணமும் பெரும்பாலோருக்கு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. நாம் அனைவரும் இக்கதையை எந்தெந்த கோணத்தில் காட்சிபடுத்தி இருப்பார்கள் என்று கணித்திருந்தாலும். நம் அனைவரின் யூகங்களையும் பொய்யாக்கி SANTHOSHKUMAR HIRAANI இக்கதையை தொடுத்த விதமே இவரின் தனித்துவம். இவரின் முந்தைய எந்த கதைக்கும் தேவைபடாத அளவு எடிட்டிங் துறைக்கு பெரும்பங்கு பொறுப்பு கொடுக்கும் கதை. 


படத்தின் துவக்க நிமிடத்தில் இருந்து இறுதி ஷாட்வரை நம்மை அதே ஆர்வத்தில் சற்றே குழைந்து படம் நெடுகிலும் உருக வைக்க இப்படியான வெகுசில நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். நம் நினைத்ததும் சட்டென நம் நினைவில் வரும் சஞ்சயின் அந்த நான்கைந்து தோற்றங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்தது மட்டுமின்றி அந்த இடப்பக்கம் சற்றே திரும்பிய வாக்கிலே இருக்கும் அவரின் கழுத்தும். கால் பாகம் இடுங்கிய பார்வையையும். உடற்பயிற்சியின் காரணமாக அகன்ற தோள்களால் உடலோடு ஒட்டாமல் சற்றே விலகியேயிருக்கும் அவரின் கைகளும் மற்றும் தோள்கள் சற்றே சாய்ந்தபடியே நடக்கும் அந்த எகத்தாள நடையையும் இந்தஅளவு வேறு எந்த நடிகனாலும் உள்வாங்கி சாத்தியபடுத்தி இருக்க இயலுமா என்பது கேள்விக்குறி.


ஒருவேளை இவர்மீது பதிந்த அந்த தீவிரவாதி கரை உண்மையாக இருக்குமோ என முன்னாபாய் படத்தைகூட இன்றுவரை பார்க்காமல் தவிர்த்து வரும் என்னை போன்றவர்களுக்கு. இந்த படத்தின் மூலம் மிக தெளிவான ஒரு பார்வையை நம் மக்கள் உடனே ஏற்றுகொள்ளும் வகையில் மிக நெகிழ்ச்சியாகவே தொடுத்திருக்கிறார் இயக்குனர். அப்பா, அம்மா, காதலி, மற்றும் நண்பர் என மிக சில பாத்திரங்கள் மட்டுமே முழு கதையையும் ஆக்கரமித்திருப்பினும்  அவை நமக்கு முழு கதையிலும் பெரும் ஆர்வத்தை மட்டுமே ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை. அதிலும் சஞ்சயின் நண்பன் பாத்திரம் ஏற்றிருக்கும் MASAAN மற்றும் RAAZI புகழ் VICKYKAUSHAL படம் நெடுகிலும் நம்மை நெகிழ செய்ததில் பெரும்பங்கு.


இப்படியான கதையை எங்கிருந்து துவங்குவது என்பதில் துவங்கி பெரும் சர்ச்சையான இவரின் தீவிரவாத முகத்தை எவ்வாறு நியாயபடுத்த அல்லது எவ்வாறு கூறினால் அது நம்மை சமாதானபடுத்துமோ அந்த வகையில் வடிவமைத்த திரைக்கதை. இது PK படத்தின் திரைக்கதை உழைப்பிற்கு சற்றும் சளைத்ததல்ல. ரன்பீர் எனும் மஹா அசுரனின் பெரும் பாய்ச்சல் இப்படம். குழந்தையின் கண்களில் சட்டென அரும்பும் கண்ணீரில் அது செய்த தவறுகள் அனைத்தையும் மறந்து வாரியணைக்கும் தாயை போல். சஞ்சயின் அனைத்து தவறுகளையும் மறந்து மன்னித்தே ஆகவேண்டிய சூழலுக்கு நம்மை ஆட்படுத்திறார் ரன்பீர்.


1.இவரின் துவக்க காலம். அதிலேயே போதைக்கு அடிமையாகி   அதிலிருந்து மீண்டுவருவது.
2. 12 வருடங்களுக்கு மேல் முன்னணி நாயகர்களில் ஒருவராக வளம் வரும் பகுதி.
3. ஆயுதம் வைத்திருந்த சர்ச்சையில் முதன்முதலில் சிக்கியது.. 
4.  தீவிரவாதி பழியுடன் இறுதியில்சிறை சென்று மீண்டு வருவது



இதில் சர்ச்சையான இவரின் மூன்று காலகட்டங்களை மட்டுமே எடுத்துகொண்டு அதற்க்கு மிக தெளிவாக இவர் பக்கத்து நியாயங்களையும். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் அதிகபிரசிங்கி தனங்களையும். சஞ்சயின் வாக்குமூலம் மற்றும் தீர்ப்பின் முழு விவரங்கள் அனைத்தையும் RKH தனக்கே உரிய அதே சுவாரசியம் குறையாத பாணியில் முந்தைய படங்களை போலே வழங்கி உள்ளார். சஞ்சய்தத் காலத்திற்கும் கடமைபட்டிக்க வேண்டுமெனில் அது ரன்பீர் மற்றும் RKHக்கே..

TRAILER LINK:

https://www.youtube.com/watch?reload=9&v=rRr1qiJRsXk

Tuesday, December 18, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 140.

ROMA  (2018) – SPANISH – பேரனுபவம்.

அதிகமா வலுவான கதையும், அதிக வசனங்களும் கொண்ட படங்களை பார்த்து பழகிய நமக்கு. காட்சிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து பெருசா எந்த அதிரடி திருப்பங்களும் இல்லாத ஏதாவது ஒரு எளிய மனுசனோட வாழ்க்கையின் சில பக்கங்கள மட்டும் ஒரு படமாக்குவது இவர்களின் பாணி.. அவங்களோட நிதானமான கதை நகர்த்தும் யுக்தி காட்சிகளின் மேல அவங்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான். என்ன ஒரு மழையை, ஒரு பாத்திரம் நடந்து போவதை கூட ஒரே ஷாட்டில் ரொம்ப மெதுவா நீட்டி சொல்லிருப்பாங்க. எதனால இவ்ளோ DETAILING ஒவ்வொரு காட்சிக்கும். இது பார்வையாளருக்கு சலிப்பை ஏற்ப்படுத்தாதா? இல்ல அது நம்ம அந்த காட்சிகளோட ஒன்ற செய்ய யுக்திதான்.

 எப்படினா..!

இந்த படம் போலவே ஒரு வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை பற்றிய கதையில் நம்ம சினிமாவில் அந்த வீட்டோட முக்கிய பெண் பாத்திரம். இந்த பெண்ணோட தலையை ஆறுதலா தடவியபடி அவங்க வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் “இவளும் எங்க வீட்ல ஒருத்தி மாறிதானு” சொல்றபோல ஒரு காட்சி கண்டிப்பா வரும். அதுலயே நாம அந்த பாத்திரத்தோட தன்மை, குணாதிசியம்னு ரொம்ப எளிமையா புரிஞ்சிக்கலாம். ஆனா இதே இந்த படத்தோட ஒரு காட்சியில இரவு பணி முடிஞ்சி தன்னோட அறைக்கு அந்த பெண் போவாங்க அப்ப அந்த வீட்டோட லைட் எல்லாம் OFF பண்ணிட்டே போவாங்க. அதும் ஒரே ஷாட்டில் ஒரு நிமிஷம் வரை போகும். இது காட்சிவழியே அந்த பொண்ணோட வேலையின் சுமையை அவங்க அக்கறையை புரியவைக்கும் ஒரு யுக்திதான். அந்த காட்சிக்கு இடையே சில வினாடிகள் வரும் ஒரு காட்சியும் இருக்கும்.


இரவு வீட்டிற்கு வந்த அந்த வீட்டோட தலைவரு ரூம்ல மனைவிட்ட சத்தம் போட்டுட்டு இருப்பாரு. வீட்டுக்கு வெளில நம்ம நாய் நெறைய இடத்துல அசிங்கம் பண்ணி வெச்சிருக்கு. என்ன வேலை பாக்கறாங்க. இதெல்லாம் நீ கேக்கமாட்டியானு. இந்த பொண்ணு ஒவ்வொரு லைட்டா அமிச்சிட்டே வரும் சத்தம் கேட்டதும். அந்த பெண்மணி ரூமோட கதவ வேகமா சாத்துவாங்க அவளுக்கு கேட்டுடகூடாதுனு. இதெல்லாம் இயக்குனரோட அசாத்திய திறமைதான். அந்த ஒரு ஷாட்லையே அந்த பெண் எப்படி தன்னோட வேலைல கவனமா இருக்கறாங்கன்னு மட்டுமில்லாம. அந்த வீட்டோட தலைவி இவங்கமேல என்ன அபிப்பிராயதுல இருக்காங்கனும் தெரியபடுத்தி இருப்பாங்க. நம்ம அதிகமா வசனத்தை வெச்சி புரியவைக்க முயற்சிக்கறோம். இவங்க காட்சிவழியா இப்படி உணர்த்தறாங்க அவ்ளோதான்.

ரொம்ப சாதாரணமா ஆரமிச்சி போய்டே இருக்கற கதைல நாப்பதாவது நிமிசத்துல தான் நமக்கு ஒரு பிடிப்புவரும். அதாவது நமக்கு சினிமான்னா எதாவது திருப்பம் காட்சிகள்ல இருந்துட்டே இருக்கனும்ல. அப்படி கொஞ்சமா ஒரு குட்டி திருப்பம் அந்த வேலை பாக்கும் பொண்ணு தான் கர்ப்பமா இருக்கறத தெரிஞ்சி. அந்த வீட்டு தலைவிட்ட அத சொல்லவர காட்சி. அதுவரைக்கும் ரெண்டுபேருக்கும் பெருசா எந்த வசனமும் இருக்காது. ஆனா இதுக்குள்ளவே அந்த பொண்ணு இந்த வீட்டு குழந்தைங்கள்ல இருந்து அந்த வீட்டு நாய்வரை எவ்ளோ அந்நியோனியமா இருக்காங்கனு பல காட்சிகள்ல சொல்லியிருப்பாங்க.


அந்த பொண்ணு இந்த விசயத்த கொஞ்சம் பதட்டமாவே சொல்லி முடிச்சிட்டு. “என்ன வேலைய விட்டு தூக்கிடுவிங்களானு” கேக்கும். அப்படில்லாம் இல்லவே இல்லன்னு அதுவரை ஆறுதலா அந்த பொண்ணோட கையை மட்டும் நீவிவிட்டுடு இருந்த அந்த பெண்மணி அவங்களோட சேர்த்து அணைச்சி ஆறுதல் சொல்ற அந்த காட்சி அப்படியே நம்மள நெகிழவெச்சிடும். காரணம் என்னதான் நமக்கு அவங்க பாத்திரத்தோட தன்மைய பலகாட்சிகள் மூலமா நமக்கு புரியவெச்சாலும். இப்படியான நிகழ்வுகள் மூலமாதான அந்த பொண்ணு இதஉணரும். இங்கயும் முன்ன சொன்ன காட்சிபோலவே இயக்குனர் அவரோட ஒரு EXTRA BIT சேர்த்து இருப்பாரு. ஆனா அது நூல்அளவு கூட தெரியாது. அந்த வீட்டு பெண்மணி அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கும் போதே அவங்க சின்ன பையன் வரைஞ்ச படத்த அவங்க அம்மாகிட்ட கொண்டுவருவான்.

WHY IS CLEO CRYING?

SHE HAS A TUMMY ACHE. னு அந்த பெண்மணி சொன்னதும். அந்த குட்டி பையன் அந்த பொண்ணோட மடியில் அமர்ந்து. ஆறுதலா அவங்க தோள்ல சாஞ்சிகிட்டு. அவங்க வயிற்றை நீவியபடியே

PAIN PAIN GO AWAYனு பாடும்போது ஏற்கனவே கொஞ்சம் கலக்கமா இருந்த மனசு, இந்த சிலவிநாடி நிகழ்வு கண்கலங்க வெச்சிடுது. அப்படி யார்தான் இதனோட இயக்குனர்னு பார்த்தா நமக்கு ஏற்கனவே நல்ல அறிமுகமான GRAVITY, Y TU TAMBIEN படங்களோட இயக்குனர் ALFONSO CUARON.

என்ன இருந்தாலும் நம்ம பாணிதான் காட்சிவழி கதை சொல்றதவிட பலம்னு நெனச்சாலும். இதுல ஒரு பிரசவ காட்சி ஒன்னு இருக்கு. அது ஒன்னு போதும். அந்த சில நிமிட காட்சிக்கு கண்டிப்பா அவங்க சில வார உழைப்பை போட்டு இருப்பாங்க. நிறைய படங்கள் நம்மள கலங்க வெச்சி இருந்தாலும். ரொம்ப நேரம் கண்ணீர்விட்டு அழவைக்க இப்படியான சில அபூர்வ படைப்புகளாலதான் முடியும்.

TRALIER LINK:
https://www.youtube.com/watch?v=UspdGO-XBi8

Sunday, December 16, 2018






பார்த்ததில் மிகவும் ரசித்தது: 139.

அமானுஷ்ய கதைகளோட பெரிய பலமே முதல் பதினைந்து நிமிசம்தான். அந்த கொஞ்சநேரத்துல அவங்க ரசிகர்களோட நாடித்துடிப்பை வெறும் SOUND EFFECT ல மட்டுமில்லாம கதையில நடக்கபோற ஏதோ ஒரு சம்பவத்தின் மேல கொஞ்சம் எதிர்பார்பாவது ஏற்படுத்தனும். அந்த மாறி படங்கள்தான் நம்மை ஆரம்பம்ல இருந்து கதை மேல ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். 

பூர்த்தி தேவி அளவில்லா செல்வமும் தானியமும் கொண்டவள். இந்த பூமி அவளோட வயிற்றிலதான் அமைஞ்சி இருக்கு. இந்த பிரமாண்டம் உருவானப்பதான் தேவி இந்த வயிற்றில இருந்துதான் 16 கோடி தேவாதி தேவர்கள உருவாக்குனா. தேவிக்கு தன்னோட முதல் குழந்தை மேல அளவில்லா அன்பு இருந்தது. அவன் பேர் HASTAR. எந்த மதபுத்தகத்துல தேடினாலும் இந்த பெயர் உங்களுக்கு கிடைக்காது ‘’ஏன்னா?’ அவன் தேவியோட தங்கத்தையும், தானியத்தையும் அடைய நெனச்சான். தங்கம் மொத்தத்தையும் சொந்தமாக்கிட்டான். ஆனா தாணியத்த அடைய நெனச்சப்பதான் மத்த தேவர்கள்ளாம் அவன தாக்கினாங்க. தேவிதான் அவன காப்பாத்தினாங்க ஒரு நிபந்தனையோட. அதாவது இனி HASTAR யாரும் வணங்கமாட்டங்க. அவன எல்லோரும் மறந்துடுவாங்க. பல யூகங்கள் கடந்துச்சி. HASTAR தேவியோட வயத்துகுள்ளவே தூங்கிட்டு இருந்தான். இந்த நேரத்துலதான் நம்ம முன்னோர்கள் HASTAR பேர்ல ஒரு கோயில கட்டுனாங்க. அதிலிருந்தே மொத்த தேவர்களோட கோவமும் நம்ம ஊர் (அது தான் இந்த படத்தோட தலைப்பு) மேல திரும்பி மழையா பெய்ய ஆரமிச்சது. இப்ப நாம அவன எழுப்பனும். ஏன்னா அவனோட சாபம். நமக்கெல்லாம் வரம்.
‘’புரியலையே.
“உள்ள போனதும் புரிஞ்சிப்ப.’
“உள்ளனா? ‘எங்க’.
தேவியோட வயித்துகுள்ள’’.
படம் துவங்கிய முதல் ஷாட்டே ஒரு கையில் தானியமும் ஒரு கையில் தங்கமும் நிற்காமல் கொட்டிகொண்டே இருக்கும் சிற்பமும். அதன் பின்னே VOICE OVER ல வரும் வசனங்கள்தான் மேல சொன்னது. எந்த பெரிய ஆர்ப்பாட்டங்களும் இல்லாம வெறும் உரையாடல் மூலமே கதையோட ஆரம்பத்துல ஏற்படுத்துன இந்த எதிர்பார்ப்ப கடைசிவரை கொண்டுவந்து. CLIMAX ல எதிர்பார்ப்புக்கும் மேலயும் பூர்த்தி பண்ணி இருக்காங்க.

1918 களில் கதை ஆரமிக்குது. அதாவது மொத்த தேவர்களோட சாபத்தால எப்பவும் மழையோடே இருக்கும் TUMBBADங்கற அந்த கிராமத்துல. கிட்டத்தட்ட மொத்த பேருமே அந்த ஊர காலிபண்ணிட. தேவர்களோட சாபத்துக்கு காரணமானமானவங்களோட இந்த தலைமுறைய சேர்ந்த  ரெண்டு பசங்களும் அவங்களோட அம்மா + இன்னொன்னும் அந்த ஊர்ல இருக்கு.முதல் அந்த சில நிமிடங்களில் அவங்க கூட தங்கியிருக்கும் அந்த வயதான பாத்திரம் நமக்குள் நிச்சயமாக சிறு பயத்தையும் சிதிலமடைஞ்சி போன அந்த அரண்மனையின் உள்ளே ஒளிந்திருக்கும் பெரும் புதையல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திடுது.
“ஆனாலும் நீ ரொம்ப பேராசைகாரன்டா”
என்கிட்டே இருக்கறதுலையே எனக்கு ரொம்ப பிடிச்சதே இது ஒன்னுதான்.
அந்த புதையலை எடுக்க முயற்சி பண்ணி தன்னோட முன்னோர்கள் மொத்த பேரும் இறந்தாங்கங்கற வரலாறு தெரிஞ்ச அப்பறமா வரும் உரையாடல்தான் மேல சொன்னது. அந்த தங்க நாணயங்களை மொத்தமாக எடுக்க முடியாது. சில வழிமுறைபடி முயற்சி பண்ணா சில நாணயங்கள் கிடைக்கும். ஆனால் உயிருக்கு உத்திரவாதமில்லை. இப்படியே கிடைக்கும் சில நாணயங்களை கொண்டு தனது குடும்பத்தை நடத்தி வரும் நாயகன் .

தனது காலத்திற்கு பின்னாடியும் தன்னோட பையனும் அந்த நாணயங்கள எப்படி எடுக்கணும்னு அவனுக்கு வீட்டிலேயே பயிற்சி கொடுக்கறாரு. இந்த சூழல்ல இந்தியா சுதந்திரத்திற்கு பின்னால யாருமே இல்லாதே அந்த கிராமத்தை மாதிரி கிராமமாக்க சட்டம் கொண்டு வராங்க. திரும்ப முன்ன போல எப்பவேணா அந்த கிராமத்துக்கு போய் தங்ககாசு எடுக்கும் வாய்ப்பு. கிடைக்காம போகலாங்கற சூழ்நிலை உருவாகுது. ரொம்ப பேராசைகாரனாலதான் இத்தனை காலம் உயிரை பணயம் வெச்சி இப்படியான வேலைய செய்ய முடியும். இந்த சூழல்ல அவனோட பையன் அந்த தங்கத்த மொத்தமா எடுக்க ஒரு யோசனை சொல்றான். அந்த பையன் வர ஆரமிக்கும் காட்சிகள்ல இருந்துதான் படம் இன்னும் பெரிய பரபரப்பு கட்டத்துக்கு வருது. சில தங்கக்காசுகளை எடுக்கவே உயிரை பணயம் வெக்கும் சூழல்ல மொத்தமா எடுக்கும் யோசனையே வேணாம்னு சொல்ல முடியாத சூழல். அரசாங்கம் அவங்க திட்டத்த செயல்படுத்த ஆரமிச்சி திரும்ப அங்க போகவே முடியாத நிலை வந்துட்டா என்ன பண்றதுன்னு அவனும் பையனோட திட்டத்துக்கு சம்மதிக்கறாரு அந்த தேவியோட வயித்துக்கு உள்ள போற காட்சிகள் எல்லாமே நம்மள ரொம்ப படபடக்க வெச்சிடுது.


இது சாமி பூதம் கதை மாறி தெரிஞ்சாலும் கதைல எங்கேயும் பூஜை, விரதம் மாறி சமாச்சாரம்லாம் எதுமே இல்லாம ரொம்ப கவனமா திரைக்கதை பண்ணிருக்காங்க. PERIOD கதைகள்ள ரொம்ப முக்கியமான ART DEPT வேலைய ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க. அதும் அவன் சின்ன பையனா இருக்கும் துவக்க காட்சிகள்ல அவங்க தங்கியிருக்கும் வீடும் அந்த GASTHARட்ட சாபம் வாங்குன பாட்டி இருக்கும் அறையும் செம்ம. அந்த கால் ஊனமான சின்ன பையனோட தேவி வயித்துக்குள்ள போற இறுதிகாட்சிலாம் விவரிக்கவே முடியாது. 

Search This Blog