பார்த்ததில் மிகவும் ரசித்தது: 136.
இந்திய சினிமாக்களில் NATIONAL SECRET FORCE, SECRET
OPERATION இப்படியான MISSION IMPOSSIBLE வரையறா கதைகளில் அதே தேசத்தை காப்பது.
அதற்க்கு எதிராக செயல்படும் இயக்கத்தை அழிப்பது. இந்த SECRET OPERATIONல் ஏதேனும்
தவறு நடந்தால், அந்த இயக்கத்தின் மீது அரசாங்கமே நடவடிக்கை எடுத்து அனைவரையும்
கைது செய்வது என இவை ஒரே பாணி JAMESBOND கதைகளே. இதில் சுவாரசியம் இதன்
திரைகதையில் மட்டுமே ஒளிந்துள்ளது. இப்படியான கதைகளை இந்திய சினிமாக்களில்
முயற்சிப்பதில் பெரும் சிக்கலே அவை பல ஹாலிவுட் படங்களை நினைவூட்டும் படி
இருப்பதுவே.
இதும் அதே CBI ல் இணைந்து பணியாற்ற துடிக்கும்
நாயகன். அவனை அவர்கள் தேர்ந்தெடுத்து. பயிற்சி கொடுக்கும் விதம் பல படங்களை
நினைவூட்டினாலும் இந்த 3௦ நிமிட காட்சிகளை தவிர்த்து படத்தின் இறுதிவரை கதை
எங்கையும் வேறு படங்களை நினைவுபடுத்தாததே இப்படத்திற்கான வெற்றி. ஒரு ஹெட்.
மார்சியல் ஆர்ட் கற்றுதரும் பெண், கம்ப்யூட்டர் ஹக்கிங் பயிற்சிதரும் நபர் என
மொத்தம் மூன்றே நபர்கள் இந்த TRINETHRA எனும் இக்குழுவை வழிநடத்த. அனைவரும் பயிற்சி
முடித்து ஒவ்வொரு துறைக்கு செல்கிறார்கள். பயிற்சியின் போதே தீவிரவாத இயக்கம் இவர்களை
பின்தொடர. பயிற்சி முடித்த முதல் நாள்
நாயகன் TARGET செய்யபடுகிறான். அதும் சாதாரணமாக இல்லாமல் அவனுக்கும் அவன்
குழுவுக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்த அதன் நிறுவன தலைவரை தீர்த்துகட்டுதல்
வாயிலாக.
அதும் அவரை கொன்றது நாயகன்தான் எனும் பக்கா ஆதாரங்களுடன்
அக்கொலை அரங்கேறுகிறது. அவரை கொன்ற துப்பாக்கியில் நாயகனின் கைரேகை. கொன்றவர்கள்
செல்லும் வாகனம் நாயகனின் அப்பார்ட்மென்ட் வருகிறது. இந்த சம்பவம் நடக்கும் நாளில்
பாகிஸ்தானில் இருந்து அவனது வங்கி கணக்கிற்கு ருபாய் இரண்டு கோடி TRANSFER
செய்யபடுகிறது. இதும் போக இந்த விழாவிற்கு வரும் நாயகன் தனது CHIEF ற்க்கு
கொண்டுவரும் ஸ்காட்ச்ல் விஷம் கலக்கப்பட்டு அதை அருந்தி அவரும் உயிர் துறக்கிறார்.
நாயகன் இந்த கொலையை செய்யவில்லை என்பதற்கான ஒரே
ஆதாரம் அந்த தாக்குதல் அரங்கேற இருக்கும் கடைசி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன்
மொபைல் அழைப்பு ஒன்றே. அவர்களும் இறந்துவிட மொத்த தேசத்தின் பார்வைக்கும்
தீவிரவாதியாக அடையாளம் காட்டபடுகிறான். இதில் அந்த தாக்குதல் நடைபெறுவதை நாயகன்
இறுதி நிமிடத்தில் எவ்வாறு கணித்தான் என்பதற்கு படத்தின் துவக்கம் முதல் சிறு சிறு
காட்சிகளின் வாயிலாக க்ளு கிடைத்து கொண்டே வருவதும். தன் மீதும் தாக்குதல்
நடக்கும் இறுதி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன் தெரிவிக்க அழைப்பதும் கூடுதல்
சூவரசிய காட்சிகள்.
மேலும் இந்த துறையில் சேர எதற்காக இவ்வளவு வெறியாக
உள்ளான் என்பதை கதையின் துவக்கத்திலே வரும் கதையும். இறுதி காட்சியில் வரும்
திருப்பங்களும் இந்திய சினிமாவிற்காக என்றாலும், நிச்சயம் ரசிக்கும்படியான
காட்சிகளே. மேலும் நாயகன் அனைத்து விதங்களிலும் குற்றவாளியாக்கப்பட்டது முதல் ஒரு
மணிநேர படத்தில். அதற்க்கு பின்னான அதே குற்றவாளியை பின்தொடர்ந்து தான் நிரபராதி
என நிருபிக்கும் கதையில் பரபர திரைக்கதை மூலம் நம்மை அசத்தயுள்ளனர் என்றே சொல்ல
வேண்டும்.
தெலுங்கு சினிமாவை பற்றி துளியும் தெரியாததால் இதன்
TECHNICAL TEAM DIRECTOR பற்றி எந்த
வரலாறும் பதியபடவில்லை. மேலோட்டமான ஒரே காட்சியை பற்றிய பார்வையை பற்றி மட்டுமே
பதிவிட்டு உள்ளேன். இதனுள் பல கிளைகதைகள் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வேறு
சிந்திக்க விடாமல் முழு படத்தையும் ரசிக்க வைக்கும்.
TRALIER LINK:
https://www.youtube.com/watch?v=lysoF97MOMk
No comments:
Post a Comment