பார்த்ததில் மிகவும் ரசித்தது: 135.
பொதுவாக இப்படிபட்ட பொண்ணு கிடைச்ச இவன் உண்மையிலே
ரொம்ப அதிர்ஷ்டசாலிங்கற எண்ணத்தை தான் அதிக முறை உணர்ந்திருப்போம். அல்லது நண்பர்களிடம்
சொல்லிக்கூட இருப்போம். ஆனால் இப்படியான ஒரு பையன் கிடைச்ச இந்த பொண்ணுதான்ப்பா
ரொம்ப கொடுத்து வெச்சவனு சொல்லிகொள்ளும் படியான ஒரு பாத்திரப்படைப்பு பரியனுக்கு.
அதுதான் இந்த கதைக்கான சாராம்சமும். சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு பரஸ்பர
அறிமுகத்தில்
“உங்க பேரு..
அதான் அப்பவே சொன்னனே “ஜோதி மகாலக்ஷ்மி”
ஓ.. உங்களுக்கு ரெண்டு பேரா?
இல்ல.. மூணு பேரு. வீட்ல “ஜோ”/
ஜோ பாத்திரம் இத சொல்லிக்கொண்டே வகுப்பறையில் இருந்து
வெளியேறும் போது. பரியன் சொல்லுவான். ஏங்க ஜோவா, ஜோதிகா பேருங்க. குஷி 19 தடவ
பாத்திருக்கேன். ஜோதிகானா எனக்கு அவ்ளோ பிடிக்கும்னு அவன் சொல்லிமுடிக்கும் போது.
ஜோ முழுக்க வகுப்பறைய விட்டு வெளியேறி அவங்க தலைகூட மறைஞ்சிருக்கும். அவன் சொன்னதமட்டும்
மனசுல வாங்கிட்டே போனவங்க. தலைய மட்டும் உள்ள நீட்டி அதே புன்னகை முகத்துல கூடுதல்
பிரகாசத்த மட்டும் பரியன்கிட்ட காமிச்சிட்டு மீண்டும் நடக்க ஆரமிப்பங்க அவங்களோட
முழு வெக்கத்தையும் கொஞ்ச கொஞ்சமா முழுங்கிகொண்டே...
இதுவரை வெறும் பரியன் அப்படிங்கற ஒரே பாத்திரத்தை மட்டுமே
நம்பி போன அத்தனை பார்வையாளனையும் தன்னை கவனிக்க வெச்சிடும் இந்த ஜோ பாத்திரம். படம்
துவங்கிய முதல் பதினைந்தாவது நிமிடத்தில் வரும் இப்பாத்திரமே நம்மை எந்த
அசௌகர்யத்திற்கும் உட்படுத்தாமல் முதல்பாதி கதை முழுக்க மனநிறைவோடு கொண்டு
செல்லும். தான் சொல்லும் எல்லா கதைகளிலும் தனது சொந்த எண்ண ஓட்டத்தை புகுத்தாமல்.
தன் கதை அது செல்லும் பாதையின் உள்ள அனைத்து கீழ் சாதி துவேசங்களையும் துளியும்
மிச்சமில்லாமல் கதையின் வழியே நமக்கு குறியீடு போன்ற எந்த மேதாவிதனமும் இல்லாமல் மூலம்
வெகு இயல்பாகவும். அதே வலியுடனும் காண்பித்த இயக்குனருக்கு மிகப்பெரும்
வாழ்த்துக்கள்.
வீட்டுபாடம், டீச்சர், BABL மேல ஒரு கொடுன்னு அதே தன்
கிராமத்து பேச்சு வழக்கிலேயே ரொம்ப அப்பாவியான சட்டகல்லூரி மாணவன் பரியனனுக்கு. தன்
சாதி .குறித்த சீண்டல்களை மட்டும் பொறுத்து கொள்ளாமல் கோவப்படுவதற்கான அனைத்து
காரணங்களையும் கதையில் தேவைப்படும்
அனைத்து இடங்களிலும் ரொம்ப அழுத்தமாக சொல்லபட்டிருக்கும். அதுவே அவனின் ஆக்ரோஷத்தை
எந்த இடத்திலும் ஒரு பார்வையாளருக்கும் தவறாக நினைக்க தோன்றாது. ஜோ உள்ள பரியனின்
ஆவேச காட்சிகளில் ஜோவை எத்தனை சதவிகிதத்தினர் கவனித்தனர் என்று தெரியாது. ஆனால்
இயற்கையிலே அந்த பெரிய கண்களில் தோன்றும் கூடுதல் மிரட்சியும். அந்த ஒடிசல்
தேகத்தில் ஏற்படும் நடுக்கமும் அவனின் மேல் உள்ள பிரியத்தின் மொத்த சாட்சி.
முதல் முறை அவனது கோவத்தை பார்த்து, பின் அவனிடம் ரொம்ப
தயக்கமா.. ENGLISH சுத்தமா தெரியாம எப்படி 1௦, +2 லாம் பாஸ் பண்ணிங்கன்னு கேக்கும்
போது.. அந்த கதை FLASHBACK போகும். (அத அவ்ளோ
சுவாரசியமா பண்ணிருப்பாங்க) போது ஜோ அந்த கதைய ரொம்ப சரியா ஒரு குறிப்பிட்ட
இடத்துல பரியன DIVERT பண்ணி அடுத்த கதைக்கு கூட்டிபோய்டுவாங்க. அவனும் கதை சொல்ற
சுவாரசியத்தில் அடுத்தடுத்து சொல்லி முடிச்சதும். ப்பா... நான்லாம் ஸ்கூல் பாஸ்
பண்ணேன். அப்ப “லா” படிக்க சொன்னாரு படிக்கறேன் அவ்ளோதான். ஆனா உங்களுக்கு உள்ள
இவ்ளோ கதைகளானு கேப்பாங்க.
இப்படி வாழ்கையில் தனக்கான கதைகள் இல்லாத மனிதர்கள் நிரம்ப
அதிர்ஷடசாலிகள். அவர்களாலே வெறும் கதைகளோடு மட்டுமே அலையும் பரியன்களின் கதைகளை வெகு
ஆர்வமாக ரசிக்க இயலும். ரொம்ப கணக்கும் இதயத்தோடு இறுதி காட்சியில் நாம் கிளம்பும்
ஒரு 1.3௦ நிமிடங்களுக்கு முன்ன பரியன ஜோ அப்பா பாத்திரம் சந்திக்க வருவார்.
கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுக்க நாம ஜோவ மறந்தே போய் இருப்போம். பரியன் மட்டுமே ரொம்ப ஆழமா நமக்குள்ள இருப்பான்.
அந்த நேரத்துல அவங்க அப்பாவையும், பரியனையும் உக்கார வெச்ச்சிட்டு ஜோ ஏதாவது
வாங்கிவர CANTEEN போவாங்க. அப்ப அவங்க அப்பாகிட்ட ஏதாவது பேசசொல்லி சைகை
பண்ணுவாங்க. இந்த ஆனந்தி பொண்ணு இன்னும் இருவது வருஷம் இங்க இருந்தாலும் இப்படியான
ஒரு காட்சி திரும்ப கிடைக்காது. ஆனா அதுக்கு அப்பறமும் அது எல்லார் மனசிலையும்
நிக்கும்படி அந்த சில வினாடி காட்சிகளில் அவ்ளோ அட்டகாசபடுத்தி இருக்காங்க.
No comments:
Post a Comment