பார்த்ததில் மிகவும் ரசித்தது: 129.
நாயகன், கதை, திரைக்கதையை தாண்டி கொஞ்சம்
கதைகளங்கள்தான் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும். அப்படியான கதைகளங்களில் ஒன்றுதான் சிறைச்சாலையை
மையமாக கொண்ட படங்கள். அதும் அங்கமாலி டைரீஸ் போன்ற படைப்பாளியின் அசோசியேட்
டைரக்டரின் படைப்பு. ANTONY (அங்கமாலி நாயகன்) மற்றும் விநாயகன் தவிர்த்து
பெரும்பாலும் புதுமுகங்களை பயன்படுத்தி வெளிவரும் கதை. அதும் சிறைச்சாலையை மையமாக கொண்டதுனா? அந்த எதிர்பார்ப்பை
இவங்க பூர்த்தி செஞ்சாங்களா..
மலையாள படங்களில் பெரும்பாலும் ஸ்பெஷல் எபெக்ட்
சமாச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. காரணம் கதையும் களமும் (அவங்க)
எளிய மக்களை சார்ந்ததாகவே இருக்கும். இக்கதையும் அதைசார்ந்த களமும் அப்படியே. ஆனா
உருவாக்கலில் கதையின் உயிர் எங்கும் சிதையாமல் டெக்னிக்கல் பக்கம் செம்மையா
மிரட்டிருக்காங்க. டைட்டில் கார்டில் டெக்னிக்கல் டீம் பெயர்களை பார்த்தாலே தெரியும்.
குறிப்பா துவக்கத்தில் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு குழு எடுக்கும் முயற்சியை
சொல்லலாம்.
சிறைன்னு சொன்னதும் இந்தியாவின் மிகப்பெரும்
பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் சிறைச்சாலையும், ஆயிரக்கணக்கான கைதிகளும்
உள்ள மிகப்பெரும் பட்ஜெட் படங்களை நினைக்க வேணாம். ஒரு
நாப்பது – ஐம்பது கைதிகள் மட்டுமே உள்ள மத்திய நகரின் ஒரு கிளை சிறைச்சாலையை களமாக
கொண்ட கதையில் பிரமாண்ட கதைக்கு சமமான டெக்னிக்கல் சைடு வேலையை இதில் பயன்படுத்தியிருகாங்க.
இது போல சிறைச்சாலையை மையமாக கொண்ட கதைகளில் முக்கிய பாத்திரம் அங்கிருந்து தப்பி
செல்ல காரணம் ஒரு போர்ஷனா கதையில் வருவது வழக்கம். இதிலும் அவன் தப்பிசெல்ல
பெரும்பான்மையான கதைகளில் வரும் காரணமான காதல்தான். அந்த குட்டி போர்ஷன அவ்ளோ
இயல்பா கொண்டுபோனதுதான் இந்த கதையில அவங்க தப்பிக்க எடுக்கும் ஒவ்வொரு
முயற்சிக்கும் கண்டிப்பா அது நடந்தே ஆகணும்னு நம்மையும் நினக்க வெச்சிருக்கு.
இவனமாறியே இங்கிருந்து வெளிய போய்டனும்னு நெனப்புல
இருக்கும் யாரையும் முதல்ல அவனால அங்க பிடிக்கமுடியாம போகவும், அங்கிருக்கும்
தோதானவங்கள அவனே முளை சலவை பண்ணி அவங்கள இவன் இருக்கும் ரூமுக்கு மாத்த எடுக்கும்
முயற்சியில் நம்ம நிமிர வெச்சிடறாங்க. அந்த எதிர்பார்ப்ப கடைசி வரை எங்குமே
தோய்வில்லாம கொண்டுபோய்
முடிச்சிருக்காங்க. அந்த கதை முழுக்க இருக்கும் மழையின் ஈரத்தை, அந்த குளிரை
அப்படியே நமக்கும் கடத்திருக்காங்க. ஒவ்வொரு
முறை காலை உணவுக்கு கைதி அறைகளில் இருந்து இவர்கள் வெளியேறும் காட்சியின்
அடுத்தகட்டமாக இவர்கள் மூவ் என்னவாக இருக்குமென அனைவரையும் எதிர்பார்க்க
வைத்துள்ளார்கள்.
இவங்க படங்களை போலவே முக்கிய பாத்திரமான வினாயக்கும்
ரொம்ப சாதாரணமாதான் அறிமுகமாறாரு. ஆனா
கதையின் விறுவிறுப்பிற்கு இவரது பாத்திரம் மிகமுக்கிய பங்கு வகிக்குது.
இடைவேளையில் ஏற்படும் பெரிய திருப்பமும் இவர மையப்படுத்திதான் நகருது. பெரிய
கிளாஸ் படமாகூட இந்த படத்த உருவாக்கியிருக்கலாம். ஆனா இந்த ஒரு ஆள் இந்த
முழுபடத்தையும் பெரிய மாஸ் லுக்குக்கு கொண்டுபோறார். அதும் கிளைமாக்ஸ்க்கு முந்தின
காட்சில இவரோட என்ட்ரி செம்ம்ம்ம. இவரில்லாம வேற ரொம்ப முக்கிய பாத்திரமா
பெரும்பான்மையான கைதிகளின் கைகளிலும் வாயிலும் புகையும் பீடிகளே.
முக்கிய பாத்திரமா வரும் எல்லாரும் பீடிபிடிக்கறாங்க.
அதிலும் அவங்க அடுத்து என்ன பண்ணபோறாங்க, அவங்க மனநிலைய அவங்க புகைக்கும் லாவகத்த
வெச்சே யூகிக்க வெச்சிருக்காங்க. முழுக்க ஆண்கள் மட்டுமே நிரம்பிய கதைகளில், வரும்
ரெண்டே பெண் பாத்திரங்கள். அவர்களுக்காகவே இக்கதையில் நிகழும் அனைத்து
திருப்புமுனைகளும். அவங்க வரும் குட்டி காட்சிகளில் கூட அவங்கள எதும் பண்ணசொல்லாம,
அவங்க கண்களுக்கு மட்டும் பெரும்பான்மையான காட்சிகள் அமைத்ததே. கடைசிவரை இந்த மழை,
அழுக்கான சிறைச்சாலை, இத்தனை ஆண்கள் மற்றும் இவ்ளோ பீடி புகைக்கு நடுவிலும் நாம அவங்கள
மறக்காம இருக்க ரொம்ப முக்கிய காரணம். எடிட்டிங், காமெரா, BGM மூணும் கதையில
எங்கயும் இவங்க லைன தாண்டாமயே வரும். அதிலும் சிறைச்சாலையோட துவக்க காட்சில வரும்
ஆக்ஷன் ப்ளாக்ல இந்த மூணு டீமோட வொர்த் தெரியும்.
TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=_7tWbhAi4L8
No comments:
Post a Comment