பார்த்ததில் மிகவும் ரசித்தது: 120.
COMPETING BEST FOREIGN LANGUAGE FILM - HUNGARY - OSCARS #1
ON
BODY AND SOUL (2017) – HUNGARY - நம்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
ஒரு படம் எத்தனை தூரம் பார்வையாளர் மனங்களை கவரும் என்பதற்கு
மிகமுக்கிய பங்கு அக்கதை தேர்ந்தெடுக்கும் களத்திற்கும் உண்டு. வெறும் களங்களால்
மட்டுமே காலத்திற்கும் நின்ற சாதாரண கதைகளும் உண்டு. இரு பாத்திரங்களுகிடையேயான
நேசத்தை கதைப்படுத்த எத்தனையோ களங்களை கற்பனைகளில் பொருத்தி பார்க்கலாம். ஆனால் கதைபடுத்துதல்
எளிதல்ல. காரணம் அது மொத்த படத்தின் எந்த ஒரே ஒரு ஷாட்டிலும் தனித்து தெரியாமல்
கதையுடன் பொருந்தி போகவே வேண்டும். மேலும் அக்களம் அந்த கதையையும் அடுத்த
தளத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அப்படியான உருவாக்கமே அக்களத்திற்கு அந்த படைப்பாளி
கொடுக்ககூடிய அதிகபட்ச மரியாதை. தனிமையை துணையாக கொண்ட இரு பாத்திரங்களுக்கிடையேயான வெறும்
நேசம் கொண்ட சராசரி கதையை காலத்திற்கும் நிற்கும்படியான களத்தை பொருத்தி,
கதைப்படுத்தி, அதையே காட்சியும்படுத்தி பார்வையாளர்களை பரவசம் தாண்டிய வேறொரு
தளத்திற்கு அழைத்து சென்றது.!!
ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவுகளில் உயர்
பதவிவகிக்கும் தனக்கென யாருமற்ற ஆண் மற்றும் பெண் என்ற இந்த இரு பாத்திரங்களே
இக்கதையின் பிரதானம். இந்த எளிய கதையை மட்டுமே குறைந்தது நூறு சினிமாக்களில்
பல்வேறு தளங்களில், மொழிகளில் கண்டு ரசித்திருப்போம். நாம் இதற்க்கு முன் கண்டிராத
எந்த வகையான களம் தெளிந்த நீரோடை போன்ற இந்த எளிய கதையில் கலக்கப்பட்டுள்ளது
என்பதிலே இக்கதை கூடுதல் சிறப்பு பெறுகிறது.
ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு துறைகளில் பணியில்
இருப்பினும் மற்ற அனைவரிடமிருந்தும் தனித்து தெரியும் நாயகியின் பால் நாயகனுக்கு துவக்கம்
முதலே சிறு ஈர்ப்பு இருக்கும். பின் ஒரு கட்டத்தில் தங்கள் இருவரின் கனவுகளும்
(தூக்கத்தில் வருவது லட்சியமல்ல) ஒன்றே என தெரியவரும் கட்டத்தில் இவர்களுக்கிடையே
துவங்கும் பழக்கம் தங்களது முதல் நாள் கனவுகளை பகிர்ந்து கொள்ளும் கட்டத்தில்
சற்று நெருக்கம் ஏற்பட்டு அவர்களுள் அப்படின்னு எந்த வழக்கமான யூகங்களுக்கும்
நம்மை கொண்டு செல்லாமல் அவர்கள் உறவு அங்கேயே சிறு முன்னேற்றம் அல்லது பின்னடைவுடளுடன்
இருக்கும். அப்படினா படம் பூரா இவங்க மட்டுமே பேசி நம்மளை கொல்லபோறங்களா என்றால்
கிட்டத்தட்ட சரிதான். ஆனால் இந்த அனுபவம் நிச்சயம் நம்மில் பெரும்பாலோர் எந்த
திரைப்படங்களிலும் இதற்க்கு முன் அனுபவித்திடாதது.
தங்கள் கனவுகளை சோதித்து பார்க்க இருவரும் ஒரே
அறையில் தங்க முடிவெடுப்பது. அவை கைகூடாமல் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயல்வது.
இவ்வாறாக நம்மையும் அவர்களுடனே பயணப்பட வைத்து இறுதியில் இவர்கள் இருவரும் இணையும்
இரவிற்கு அடுத்த பகலில் தங்களது கனவும் அந்த இரவுடனே முடிந்ததாக அவர்கள்
அறிந்துகொள்ளும் நிமிடத்தில் நிறைவுறும் இந்த படம் சொல்லும் செய்தி என்ன.?
ஒரே கனவு இருவருக்கும் என்பதில் துவங்கும் நட்பின் அடுத்த
கட்டமாக நாம் இருவரும் ஒரே அறையில் தூங்கி பார்க்கலாம் என்ற இடம் இக்கதையின் மிகமுக்கிய
காட்சியாகும். அதுவரை தினமும் கனவு+உறக்கங்களுடன் இரவுகளை கழித்தவர்களுக்கு அன்று
சாலையில் செல்லும் வாகனங்களின் இரைச்சல்.அடுத்த வீட்டு தொலைக்காட்சி ஓசை என அதுவரை
இரவில் அவர்கள் உணர்ந்திடாத ஒலிகள். அவர்களை தூங்கவிடாமல் ஒரு அளவுக்கு மேல்
பொறுக்காத நாயகி வீட்டிற்க்கே திரும்ப முடிவெடுப்பாள்.
ஒரே கனவு இருவருக்கு சாத்தியம் இல்லை. அதை
இயக்குனரும் ஒரு காட்சியில் தெளிவுபடுத்தியிருப்பார். பின் இதில் கனவுகளாக
சித்தரிக்கபடுபவை? அவர்களின் உணர்ச்சிகளையே கனவுகளாக சித்தரிக்க படுவதாலே இருவரும்
ஒரே அறையில் ஒன்றான பின்னும் அங்கு நமது கனவுகளுக்கு இடமில்லாமல் போவது. இவ்வாறான
ஒரே உணர்ச்சிகளில் உந்தப்படுவோரின் நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக உள்ளதே இவர்கள்
இருவரும் தற்கொலை முடிவு ஒரே நேரத்தில் எடுப்பதும் என முழு படத்தின் எந்த ஒரே ஒரு
ஷாட்டும் இக்கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத வகையில் அமையபெற்றதே இவ்வாறான
உளவியல் சார்ந்த திரைப்படங்களை நம்மில் பெரும்பாலோர் துணிந்து முழுதும் ரசிக்கமுடியும்.
கூடல் ஒன்றே மையகருவாக கொண்ட கதையின் ஒரே ஒரு
காட்சியில் கூட நேரடியாக அது சம்பந்தமான எந்த ஒரு காட்சியும் இல்லாமல். கதையும்
அந்த மையகருவை தாண்டி செல்லாமல் ஒரு படம். நீலபடமொன்றை நாயகி தொலைகாட்சியில்
பார்க்கும் காட்சியில் அவள் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உணவருந்தி
கொண்டே ஏதோ செய்திகள் பார்ப்பது போன்ற நிலையில் அமர்ந்திருப்பதும். பின்னொரு
காட்சியில் ஒரு காதல் பாடலை கேட்க்க நேர்கையில் நிலை கொள்ளாமல் தவிப்பதும். காதல்
இல்லாத வெறும் கூடல் எந்த வகையிலும் நமக்கு நிறைவை தராது என்ற வகையில் அமையபெற்ற
காட்சி. இவ்வாறான முழு படமும் நம்மை இதேபோன்று ஏதோ ஒன்றுடன் பொருத்தி பார்க்க
செய்யும் வகையிலே அமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவர் மீது கொள்ளும் காதலே நாம் இறக்கும் தருணம் வரை
நம்முடன் வரும் கூடல் ஒரு வயதிற்கு பின்னாக அத்யாவசியமாகாது என்பதாலே தான் தற்கொலை
முடிவேடுத்தவள். அந்த காதல் பாடலை கேட்டுகொண்டே இறக்கலாம் என அப்பாடலை
ஒலிக்கவிடுகிறாள். தனது மணிக்கட்டை அறுத்துகொண்டு பாத்டப்பில் படுத்திருப்பவள்
முகத்தில் ஏற்ப்படும் மனநிறைவும். திடீரென ஏற்படும் கோளாறில் அப்பாடல் பாதியில்
நின்றுவிட அவள் முகத்தில் ஏற்படும் சஞ்சலங்களையும் முழுக்க எழுத்து வடிவமாக்க
சாத்தியமில்லை.
இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் எடிட்டிங்
மட்டுமே இக்கதையின் உயிர்நாடி. ஏனெனில் இப்படம் முழுக்க நிறைவுறும் வரையில் ஒரு
காட்சியில் கூட நாம் இந்த இசை மற்றும் எடிட்டிங்கை பற்றி நிச்சயம் தனித்து
உணரமாட்டோம். அவை காட்சிகளுடனே அவ்வளவு நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும்.
காதல் செய்வோம்.
No comments:
Post a Comment