பார்த்ததில் மிகவும் ரசித்தது – 178
ஹாரர் படங்களோட
வெற்றியே அவங்க நம்மை அந்த திகிலோடவே படம் துவக்கத்தில் இருந்து இறுதிவரை வெச்சி
இருக்காங்களா அப்படிங்கறது மட்டும்தான். லாஜிக் கதையோட ஓரளவு பொருந்தி வந்தாகூட
போதும். இங்க இந்த போஸ்டர்ல மணிக்கட்டோடு பைபரில் செய்யப்பட்ட அந்த கைதான் கதையோட
முக்கிய பாத்திரம்.
வீக்எண்ட்ல் நண்பர்கள்
ஒன்று கூடும் சந்தோஷ தருணங்களில் அவங்களோட முக்கிய விளையாட்டே இந்த கையை வெச்சிதான்.
ஒரு டேபிளில் அந்த கையை நிறுத்திவெச்சி எதிரில் அமர்ந்திருக்கும் நபர் இந்த கையோடு
அவரோட கையை பொருத்தி சொல்ல வேண்டியது “டாக் டூ மீ” மட்டுமே. பின்னால நடப்பது
எல்லாமே அதகளம்தான்.
ஒரு சில நிமிட அந்த
எக்ஸ்சைட்மெண்ட்டுகாக வரிசையா அந்த கேங்ல இருக்கும் எல்லோருமே விளையாட போக, இறுதியா
கதையோட முக்கிய பாத்திரத்தோட தம்பியை வெச்சி முயற்சி பண்றாங்க. அங்க அடுத்த
கட்டத்துக்கு போற கதை கடைசி வரை கொஞ்சம் திகில்லயே நம்மள வெச்சி இருக்காங்க. இதோட
முக்கிய விதியே அதிகபட்சம் 90 வினாடிகளுக்கு உள்ள அந்த கையை பிடிச்சி இருக்கறவங்களை விடுவிச்சிடனும்
அவ்ளோதான்.
ஏன்னா, அந்த கையை
பிடிச்சவங்க அவங்களா தானா அதை விடுவிக்க முடியாது. இந்த வகையறா கதைகள் நம்மை
கட்டிபோட பெரிய காரணமே படத்தோட டெக்னிகல் பக்கம்தான். ரொம்ப சரியா எதுமட்டும்
வேணுமோ அதுல ஒரு ப்ரேம் கூட அதிகமா இல்லாத எடிட்டிங். அப்பறம் சவுண்ட் டிசைன் பேசும்
தோணி அதுக்கான வால்யூம் முதல் பொருட்களோட அசைவுகள் வரை அட்டகாச அவுட்புட் கொடுத்து
இருக்காங்க.
No comments:
Post a Comment