Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, October 8, 2020

SERIOUS MEN 2020 - HINDI – ATTRACTIVE MAN

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 172


என் அப்பா பள்ளிக்கூடமே போனதில்ல. நான் பள்ளிக்கூடமும் போனேன் நல்லாவும் படிச்சேன். அப்ப நான் தெரிஞ்சிகிட்டது ஒன்னேஒண்ணுதான். இந்த உலகத்துல ரொம்ப முக்கியமானது படிப்பு மட்டும்தான். என்னோட பையனுக்கு முதல்ல நான் இததான் புரியவெப்பேன். அவனை எப்படியும் ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்த்தி படிக்கவைப்பேன். அவன் பையனுக்கு 20 வயசாகும் போது  எதுமே பண்ணனும்னு அவனுக்கு அவசியம் இருக்காது. இப்படி  சந்தோசமா இருக்கலாம். ஒருத்தன் சும்மா இருக்கணும்னா இங்க அதுக்காக 3 தலைமுறை உழைக்கவேண்டி இருக்கு.

இது மாசமா இருக்கும் தன்மனைவியோடு ஒரு நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை காட்டி நவாசுதின் சொல்லும் வசனம். இதுதான் இந்த படத்தோட சாரமும்கூட.  எதும் குழந்தைங்களோட கல்வி, எதிர்கால போட்டி உலகம்னு பாடம் நடத்தாம நவாசுதின் படங்கள்ல இருக்கவேண்டிய எல்லாமும் இருக்கும் படம். கண்டிப்பா இது குழந்தைகளுக்கான படம் இல்லை. இது முழுக்க பெற்றோர்களுக்கான படம்.

நம்ம என்ன ஆகணும்னு ஆசைபட்டோமோ, அதெல்லாம் நம்ம குழந்தைக்கு கிடைக்கனும்,   மெஹாஹிட் அடிச்ச Dangal படத்துக்கும் இதே சாரம்தான். இதுவேறமாறினு சொல்ல ஒரே காரணம். நம்ம பையனுக்கு  அதெல்லாம் கிடைக்க சுலபமா தெரியும் குறுக்குவழிகள் எதுலயும் செல்லும் தந்தையின் கதையிது. ரொம்ப சரியா தனக்கு வரும் எந்தமாறி கதைகளுக்கு உள்ளேயும் தன்னை ரொம்ப சரியா பொருத்திக்கறார். எப்பவும் தன்னை முன்னிலை படுத்திக்காம அந்த பாத்திரம் அந்த சூழ்நிலைல என்ன பண்ணுமோ அதை மட்டுமே பண்றதாலயும், அந்த கதையோட முக்கிய திருப்பம் பெரும்பாலும் இவரோட பாத்திரத்தை கொண்டே நகரும்படியான கதை தேர்வும்தான். இவர்மேல நமக்கு இருக்கும் ஈர்ப்புக்கு பெரிய காரணம்.

ஆனா ரொம்ப அதிசயமா அவர் படங்கள்ல அவரைதாண்டி வேற பாத்திரத்தின் மேல ஈர்ப்பு வந்தது இந்த படத்துலதான் நடந்தது அவரோட பையன் பாத்திரம். ரொம்ப சரியா உணர்ந்து பண்ணிருக்கான். அதும் அவன் அப்பாவும் இவனும் உரையாடும் காட்சிகள் எல்லாமே ரொம்ப யதார்த்தமா அமைய இந்த பையன் ரொம்ப பெரிய காரணம். நவாசுதினை பெருசா ரசிச்ச ஒரு இடம்.

தான் இருக்கும் சூழல், தன்னால் தன் பாஸ் (நாசர் சார்) நிலைக்கு போகமுடியாதுனு அவருக்கு நல்லாவே தெரியும். ஆனா அவர் தன்னோட பாஸ் ஒரு பிரஸ் காண்ப்ரண்ஸ் முடிச்சி எல்லோரும் கலைஞ்சி போனதும்.  அங்க அவரோட சீட்ல இவர் அமர்ந்து தனக்கு முன்னால இருக்கும் காலி இருக்கைகளை பார்க்கும் அந்த காட்சில லைட்டிங் வொர்க்கும் அட்டகாசபடுத்திருப்பாங்க.    

 suthir Mizra இயக்குனர். இவரோட Hazaaron Khwaishein Aaisi படத்துல KK மேனன் பாத்திரம் செம்மையா இருக்கும். அதே போல இந்த படத்தில் நவாசுதினும், அந்த பையனும். NETFLIXல் இருக்கு.    


2 comments:

  1. அருமை... மேலும், நான் கவனித்த வரையில், அந்த மூன்றாவது தலைமுறை சோம்பேறி ஆகி சொத்தை அழித்து விடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. அனுபவமின்மைதான் முக்கிய காரணமாக இருக்கும்.

      Delete

Search This Blog