Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, October 22, 2020

புத்தம் புது காலை (2020) – தமிழ் – ANTHOLOGY



பார்த்ததில் மிகவும் ரசித்தது – 173.

புத்தம் புது காலை (2020) – தமிழ் –  ANTHOLOGY

 1. இளமை இதோ இதோ – சுதா கொங்கரா – இளமை

மனைவியை இழந்து, மகளும் (காதல்) திருமணமாகி சென்றுவிட தனிமையில் வசிக்கிறார் ஜெயராம். அவரது கல்லூரி கால தோழி ஊர்வசியும் கணவனை இழந்தவர்.  இவர் ஜெயராம் வீட்டிற்கு வரும் காட்சியில் இருந்து இந்த கதை  துவங்குகிறது. பின் இந்த கதைக்கு இளமை இதோ இதோனு தலைப்பு எப்படி பொருந்தும். இவங்க இருவரையும் வெச்சி நல்ல ஹுமர் கதையைதானே பண்ணமுடியும்? இந்த கேள்விக்கு சுதா கொங்கரா தனது மேஜிக் இயக்கத்தில் பதிலளித்திருக்கிறார். ஒரே வீடு முழு கதையிலும் இந்த இரண்டே பாத்திரங்கள் மட்டும்.  

 

2.அவனும் நானும் அவளும் நானும் – கெளதம் மேனன் – முதிர்ச்சி

அவனை முதன் முறையா அந்த காலேஜ் கல்ச்சுரல்லதான் பாத்தேன். இப்படி ஆரமிக்கும் மீண்டும் ஒரு காதல் கதையை கெளதமிடம் எதிர்பார்த்து  பார்க்க ஆரமித்தால் நமக்கு ரொம்ப பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கார். ஆம், இது ஒரு தாத்தா, பேத்திக்கு இடையேயான அருமையான கதை. தனது மகள் காதல் திருமணம் புரிந்ததால், அவருடனான தொடர்பை முற்றிலும் தவிர்த்து தனிமையில் வசிக்கும் தாத்தாவாக MS பாஸ்கரும், lockdownல வெளியே எங்கும் தங்கவழி இல்லாமல், பெற்றோர் வற்புறுத்தலால் பல வருடங்களுக்கு பின் தனது தாத்தா வீட்டிற்கு செல்லும் பேத்தியாக ரித்துவர்மாவும். இந்த கதையும் இங்கிருந்தே துவங்க, இத்தனை வருடம் தனது தாயை அவர் ஒதுக்கியதற்கான காரணமும், தன் மனதில் தாத்தா பற்றி இருந்த பிம்பமும் இறுதியில் ஒரு தெளிவிற்கு வருவதுடன் கதை நிறைவடைகிறது. MS பாஸ்கர்க்கு ஒரே ஷாட்ல் அவர் பக்கத்து நியாயத்தை சொல்லும் காட்சி வழக்கம்போல. அட்டகாசபடுத்தி இருக்கார் வழக்கம்போலவே. நிறைய பார்வையாளர்களோட விருப்பபடம் இந்த முதல் ரெண்டு படங்களுக்குள்ளேதான் இருக்கும்.

 



3.COFFEE ANYONE? – SUHASHINI MANIRATNAM – அரைச்சமாவு

கெளதம்மேனன்கிட்ட இருந்து இப்படி ஒரு ஆச்சர்யம்னா. சுஹாசினி மணிரத்னம் இன்னும் என்னலாம் பண்ணிருப்பாங்கனு உடனே வழக்கம்போல நம்ம தமிழ் ரசிகமனசோடு பாத்தா. நிறைய படங்கள்ல டம்மியா ஒரு பேசமுடியாத பாத்திரம் கதைமுழுக்கவே வரும். அந்த கதையோட திருப்புமுனை காட்சில அந்த பாத்திரம் பேசி எல்லோரையும் ஆச்சர்யபடுத்தும். நம்மளும் அப்படியே உச்சி குளிர்ந்து அந்த காட்சிதான் இந்த படத்துக்கே திருப்புமுனைனு நம்பஆரமிப்போம்ல அப்படி ஒரு படம். கோமால இருக்கும் அம்மா. அவங்களுக்கு மூணு பொண்ணுங்க. வெளிநாடுகள்ல இருந்து அம்மாகூட இருக்க ரெண்டு பொண்ணுங்க வராங்க. மத்ததெல்லாம் நம்ம யூகிச்சபடிதான் நடக்குது. என்ன இருந்தாலும் செண்டிமெண்ட்தான் சினிமாக்கு முக்கியம்னு நினைப்பவங்க நெறையவே இந்த படத்தை ரசிக்க முடியும். இதில் பெரிய ஆறுதல் இல்லல ஆச்சர்யம் காத்தாடி ராமமூர்த்தியை பயன்படுத்திய விதம்.

 

4. ரீயூனியன்ராஜீவ்மேனன் ?

எடுத்ததும் மின்சாரகனவு நியாபகம் வரல, காரணம் இதுக்கு முன்னாள் பார்த்த படங்கள் எல்லாமே ராஜீவ்மேனன் படங்கள் போலவே அந்த ரிச் கலர்புல் லுக்ல இருந்ததுதான். என்ன அதெல்லாம் கொஞ்சம் ரசிக்கும்படியான கதைகளோடவே இருந்தது. இந்த படம் பார்த்து முடித்ததும் மின்சாரகனவு நியாபகம் வந்தது. அதே போலவே கதை தவிர்த்து மற்ற அனைத்தும் ரசிக்கும்படி அமைந்ததால்.

 

5. மிராகிள் – கார்த்திக் சுப்புராஜ் – NORMAL

வானமே எல்லை படத்தில் கதைமுழுக்க ஒரு டிரங் பெட்டி வருமே. முழுக்க பணகட்டுகளோடு. அந்த படத்தோட கிளைகதைல முக்கியமா நகைச்சுவைக்கு அந்த பெட்டியை KB  சார் பயன்படுத்தி இருப்பார். அனால் நமக்கு படம் போக போக முக்கிய கதையை விட இந்த டிரங் பெட்டிக்கு ஏதும் ஆகிடகூடாதே. யாரோ ஒருவருக்கு அது பயன்படனுமே. யாரவது அதை திறந்துபாருங்களேனு படபடப்பு நேரம் ஆக ஆக அதிகமாகிட்டே போகும். அப்படி ஒரு கான்செப்ட்தான் இந்த படம். கார்த்திக் சுப்புராஜ் இந்த கதையை அவரோட வழக்கமான பாணில எடுத்திருக்கார். அந்த டிரங் பெட்டிமாறி தேவையில்லாத நெறைய விஷயங்கள் பின்னால போய்தான் வாழ்க்கையை தொலச்சிட்றோம்னு சார்லி, கவிதாலயா கிருஷ்ணன் பாத்திரங்களை வெச்சி மெசேஜ் சொல்லிருப்பார் KB சார். இங்க அவ்ளோலாம் இல்லை. ஆனா ஓரளவு ரசிக்கும்படியே எடுத்து வெச்சிருக்கார்.

சிறுகதை, கவிதை  போட்டிக்கு தலைப்பு சொல்றபோல இந்த படங்களுக்கு LOCKDOWN னு தலைப்பு சொல்லிடாங்க போல. அதால எல்லா கதைலயும் lockdown வருது.  அதால ஒரே வீடு மட்டும்தான் எல்லா கதைகளிலும்  அதும் கெளதம்மேனன் படத்துக்கு PC ஸ்ரீராம் சார் வொர்க் பண்ணிருக்கார். சுதா கதைல GV பிரகாஷ் மியூசிக் பண்ணிருக்கார்.  வேறொவர் கதை பண்ணினதால் முதலில் பிழைத்தது கெளதம்மேனன் தான். எல்லா கதைகளிலும் technical டீம் strong ஆக இருக்கவும் சுமாரான படங்கள்கூட forward பண்ண தோணலை. AMAZON PRIME ல இருக்கு கண்டிப்பா பாக்கலாம்.


3 comments:

  1. முதல் கதை உண்மையாka காதலிப்பவர்கள் எவ்ளோ வருடம் ஆனாலும் ஒன்னு சேர்த்து விடுவர்கள் என்பதை கதை உணர்த்தி இருக்க

    ReplyDelete

Search This Blog