பார்த்ததில் மிகவும் ரசித்தது : 090.
உலகின் ZOMBIE வகை படங்களில் ஹிட்டடித்த
அனைத்து படங்களையும் ஓரம்கட்டி உலகின் தி பெஸ்ட் ZOMBIE மூவி என்ற இடத்தை
பிடிக்கப்போகும் திரைப்படம்.
கொரியன் சினிமா வரலாற்றில் அதிக மக்கள்
திரைஅரங்கில் பார்த்த படம். கொரியன் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம்.
கொரியன் சினிமா வரலாற்றில் அதிக நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம். ஆசியாவின்
முன்னணி சினிமா சந்தையான இந்தியாவின் உள்ளும் அவர்கள் படங்கள் முதன்முறை எட்டியுள்ளது.
நமக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பின்பே
சினிமா துறையில் நுழைந்வர்கள். இன்றும் நம்மை விட சரிபாதி எண்ணிக்கை படங்களை
மட்டுமே ஆண்டொன்றுக்கு வெளியீடு செய்பவர்கள். நாம் இந்த வகையறா படங்களில்
ஆரம்பகட்டத்தை கூட எட்ட முடியாத சூழலில், இவர்களால் எவ்வாறு இந்த உயரத்தை தொட
முடிந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும்
தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச்சரியாக பின்பற்றும் நாம் நம்மையும் அறியாமல் நமது நேட்டிவிட்டியை
மறந்து முழுக்க அதன் பின்னே சென்றதன் விளைவு இங்கேயே தேங்க வேண்டிய சூழல். இந்த
உலகமயமாக்கள் எனும் குறுக்கு வழியின் பின்னே சென்றால் உலகளாவிய இடத்தை எளிதில்
பிடித்து விடலாம் என்ற நமது எண்ணமும் பொய்த்துபோய் உள்ளது.
ஏன் அவர்கள் தொழில் நுட்பத்தையும்
உலகமயமாக்கலையும் பின்பற்றவில்லையா?..
அவர்களும் மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார்களே அன்றி அதை பின்பற்றவில்லை. எந்த தொழில்நுட்பத்திற்காகவும் அவர்கள் படம் இயக்கவில்லை. தங்கள் கதையின் சூழலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே அதை பயன்படுத்திகொண்டனர். அங்கு எந்த தொழில் நுட்ப வல்லுனர்களையும் கதாசிரியர்களுக்கு இணையாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை.
வரும்காலங்களில் நிச்சயம் மிகப்பெரும்
வணிகத்தை இந்திய சந்தையில் கொரியன் சினிமாக்கள் நிகழ்த்தப்போவது சர்வநிச்சயம்.
நாம் நினைத்த, நினைக்கும், நினைக்காத கொரியன் படங்களை நமது மொழியில்
கண்டுமகிழ்வோம்.
ஐயாயிரம் கிலோமீட்டர் தாண்டி நம்
திரைஅரங்கை அடையும் அளவு இந்த படத்தில் என்ன உள்ளது?..
உலகமயமாக்கலை பயன்படுத்திகொள்ளும்
வித்தையை தெரிந்துகொள்ள மட்டுமன்றி,
ஆங்கில படங்களுக்கு நிகரான மேக்கப் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பதை பயன்படுத்திய
விதம். இவை இரண்டும் தங்களது கதை மற்றும் திரைக்கதை துளியும் சேதப்படுத்தாமல்
தங்களது கலாச்சாரத்தை ஒட்டிய உலகளாவிய சினிமாவை வரவேற்ப்போம்.
இதுவரை இந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு
இல்லாதோர் நிச்சயம் திரைஅரங்கில் குடும்பத்துடன் காண முழுத்தகுதியும் உள்ள சினிமா.
No comments:
Post a Comment