Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Sunday, September 20, 2020

DOLLY KITTY AUR WHO CHAMAKTE SITARE – 2019

 



பார்த்ததில் மிகவும் ரசித்தது – 170


இது நம்ம ஆளு படத்துல ஷோபனா கூட கல்யாணம் ஆகி ஒண்ணா இருக்கமுடியாத சூழ்நிலைல. அவங்ககூட தனிவீட்ல இருக்கமுடியாதுனு பாக்யராஜ் மறுப்பாரு. அதுக்கு அவரோட அப்பா குமரிமுத்து பாத்திரம் சொல்ற வசனம்.


“டேய்.. சபரிமலைக்கு மாலை போட்டுட்டு தண்ணிஅடிக்காம இருக்கறது பெரிய விஷயம் இல்லடா. ஒயின் ஷாப்ல வேலை பாத்துட்டே தண்ணி போடாம இருக்கறதுதான் பெரிய விஷயம்னு. கிட்டத்தட்ட இதே நிலையில இந்த படத்துல ஒரு பாத்திரம் வரும்.


கிட்டி, அவங்களுக்கு முழு சுதந்திரமும், எல்லா வாய்ப்பும் இருந்தும் எந்த தப்புதண்டாவும் பண்ணாம இருக்கணும்னு இருப்பாங்க. இவங்க ஒரு சின்ன ஊர்ல இருந்து அவங்க அக்கா குடும்பம் இருக்கும் டெல்லிக்கு வேலை தேடி வருவாங்க. அக்கா வீட்ல தங்கி வேலைக்கு முயற்சிபண்ணுவாங்க. கூடவே வெளிய தங்கிக்கவும் முயற்சி பண்ணிட்டு இருப்பாங்க. இந்த “டோலி”ங்கற அக்காவும், அவங்க தங்கச்சி முறை பொண்ணு கிட்டியும்தான் இந்த படம்.


இந்த கிட்டிக்கு நேர்மாறான பாத்திரம் டோலிக்கு. அவங்க கணவருக்கு தெரியாம நிறைய சின்ன சின்ன பொய். வேலை செய்யும் இடத்துல பணம் கையாடல் பண்றது. வீட்லயே  யாருக்கும் தெரியாம தண்ணி அடிக்கறது, க்ளாமரா துணிங்கவாங்கி ஆபீஸ்க்கே துணிஞ்சி போட்டுட்டு போய் கூட வேலை பாக்கறவங்கள அதிர்ச்சியாக்கறதுனு கலக்கல் பாத்திரம் அவங்களுக்கு.    

 கிட்டிக்கு எந்த வேலையும் சரியா அமையல. இருக்கும் வேலைல கூட அவங்களால பெருசா ஈடுபாடு காட்டமுடியல. இந்த நிலையில அவங்களுக்கு நல்ல சம்பளத்துல ஒரு வேலை அமையுது. அதுகூடவே அவங்களுக்கு அமையும் நட்பும். ஆழமா ஒரு காதலும் கிடைக்குது. இது மூலமா அவங்க ஆரம்பத்துல இருந்த நிலைல இருந்து எப்படிலாம் மாறுறாங்கனும். அதே சமயத்துல அவங்க அக்கா டோலி அவங்க பண்ண சின்ன சின்ன தப்புகள்ல இருந்து எப்படிலாம் அவங்கள திருத்திகறாங்கனு கதை வரும்னு நம்ம யூகிப்போம்.


ஆனா அப்படி அவங்க தவறுகள்ல சுட்டிகாட்டும் படி படத்தோட இறுதிவரை எந்த நெருக்கடியும் வரமா திரைகதை பண்ணிருக்காங்க. கூடுதலா அவங்களுக்கும் இந்த கதைல ஒரு காதல் வருது. அக்கா, தங்கை ரெண்டு பேருக்கும் இந்த கதைல பொதுவா அமைஞ்ச விஷயம் இந்த காதல். அதை வெவ்வேறு குணாதிசயங்களோட இருக்கும் இந்த ரெண்டு பெரும் எப்படி கையாண்டாங்க. அதோட விளைவுகளை எப்படி எதிர்கொண்டாங்க இதுதான் இந்த படத்தோட முழுகதை.


அக்கா டோலியா Konkona Sen. முழுபடமும் நம்ம பாக்க இவங்க பாத்திரம் ரொம்ப முக்கிய காரணம். தங்கையா Bhumi Pednekar. Dum Laga Ke Haishaல கூட கதைக்காக உடம்பை ரொம்ப அதிகமா ஏத்தி aayushmaan Kurraanaக்கு மனைவியா வருவாங்களே அதே பொண்ணு. படத்தோட டைரக்டர் நம்ம Lipsstick Under my Burkha படத்தோட ரைட்டர். அதுல எவ்ளோ புதுப்புது சீன்ஸ்,  அத எவ்ளோ அழகா எமோஷனலா கொண்டுவந்து முடிச்சிருப்பாங்க.


இவங்க ரைட்டரா அந்த படத்துல பண்ண எல்லாமும் இதுலயும் இருக்கு, நல்லாவும் பண்ணிருக்காங்க. ஆனா அதுல இருந்த அந்த  எமோஷனல் டச் இதுல ரொம்ப கம்மி. டைரக்டரா அதை இந்த படத்துல தவறவிட்டுடாங்க. இல்ல இந்த கதை, இதுக்கு இந்த அளவுல மட்டும் இருந்தாவே போதும்னு விட்டாங்களா தெரியல. NETFLIXல் காணகிடைக்கிறது. 


2 comments:

  1. Nice... விமர்சனம் படிச்சா, அற்புதமான கதைக்களத்தில் எங்கயோ miss பண்ணிட்டாங்க'னு தோணுது...

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இது ரொம்ப மோசம் இல்ல. பாக்கலாம்.

      Delete

Search This Blog