PAATAL LOK –
SEASON 01 – EPISODES 09 – பாதாள உலகம்
தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்து அதில்
தனது முழுத்திறனையும் செலுத்தி வெற்றிபெறுபவர் குறைந்த சதவிகிதத்தில் உள்ள ஒரு வகையினர்.
தனக்கு கிடைத்த பணி அல்லது தனது வருமானத்திலேயே திருப்தி அடைந்து, வேறு எந்த புதிய
முயற்சியும் இல்லாமல் அதிலேயே காலம் தள்ளும் அதிக சதவிகிதத்தில் உள்ளோர். நாம்
திரைப்படங்களில் அதிகம் பார்ப்பது இந்த குறைந்த சதவிகித பாத்திரங்களையே. காரணம்
அவர்கள் வெற்றிபெற சந்தித்த சவால்கள். அதை எவ்வாறு எதிர்கொண்டு அவர்கள் வெற்றி
பெற்றார்கள் போன்ற அதிக சூவாரசிய பக்கங்கள் இருப்பதால் இருக்கலாம்.
இங்கு அதிகம் பேசப்படாத, நம்மில் பெரும்பான்மை சதவிகிதத்தினர், அதாவது தனக்கான
எந்த வருங்கால திட்டங்களும் இல்லாமல். தன் பணியில் எந்த புதிய வழிமுறைகளையும் சோதிக்காமல்.
மற்றவர்களுக்கு மட்டும் உபதேசங்கள் செய்தபடியே தனக்கு விதிக்கப்பட்டது இதுமட்டுமே
என்ற வகையை சார்ந்தவரே இந்த கதையின் மூலபாத்திரம்.
குடும்ப பஞ்சாயத்துக்களே அதிகம் நடைபெறும் பொருளாதார ரீதியில் மிகவும்
பின்தங்கிய மக்கள் வாழும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியம் அதிகாரி
இவர். ஒரு கொலைக்கு திட்டமிட்டு அதை செயல்படுத்த செல்லும் நால்வரை வழியிலேயே
மடக்கி CBI அதிகாரிகள் கைது செய்கின்றனர். அப்பகுதி இவரின் எல்லைக்கு உட்பட்டு
வருவதால். இவரே நேரடியாக சென்று அவர்களை காவல் நிலையம் அழைத்து வருகிறார்.
இவரின் கீழ் பணியில் சேர்ந்து இன்று இவருக்கு உயர்அதிகாரியாக இருப்பவரே,
இவருக்கு பதில் வேறு அதிகாரிகளை பரிந்துரைக்க. அதற்கான அவகாசம் இல்லாததால் இவரே
இந்த வழக்கை எடுத்துகொள்ள CBI நிர்பந்திக்கிறது. முதல் எபிசோடின் கால்பகுதிகளிலே இந்த
வழக்கு இவரின் கைக்கு வந்துவிடுகிறது.
வெறும் கொலை முயற்சியாக இல்லாமல் இவ்வழக்கு இவரின் மொத்த திறனையும்
வெளிக்கொண்டு வந்தாலும் அனைத்து பக்கங்களும் பெரும் மர்மங்கள் மட்டுமே நிறைந்தது
என தெரியாமல், இவர் பாணியில் முதல் கட்ட விசாரணையை துவக்குகிறார். ஆங்காங்கே
இவரால் யூகிக்கமுடிந்த வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்க. இதில் தொடர்புடைய
ஒருவனும் தப்பித்து விடுகிறான்.
அவனின் பிணத்தை கைப்பற்றிய பின்னே இவ்வழக்கின் கணமும். அதன் மர்மபின்னணி
குறித்தும் முதல்முறை லேசாக உணர துவங்குகிறார். தனக்கு கீழ் பணிபுரிந்து. இன்று அவருக்கு
உயரதிகாரியாக உள்ளவர்க்கு இவரின் மேல் உள்ள அலட்சிய மனோபாவம். தற்பொழுது இவரிடம்
பயிற்சி அதிகாரியாக இருப்பவர் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற்று. பணி நியமனத்திற்க்கு
காத்திருக்கிறார். இதுபோக இவரின் மகன்
மற்றும் இவரின் மனைவியிடமும் சமூகஉறவு இல்லாத இந்த சூழலில். தற்போது தனக்கு ஒரே பிடிமானமாக
உள்ள இந்த வழக்கில் எப்படியும் வென்றே தீரவேண்டிய சூழல்.
இது இந்த சீரீஸ்ன் முழுகதையல்ல கிட்டத்தட்ட இதுதான் இந்தகதையின் துவக்கம். இரண்டாம்
எபிசோடிலே இந்த கதை சூடுபிடிக்க துவங்கிடும். மேலே குறிப்பிட்ட பாத்திரங்களின் நடவடிக்கைகளும்.
கைதுசெய்யபட்ட அந்த நால்வரின் தனித்தனி முன்கதைகளும். அதை கண்டுபிடிக்க இந்த அதிகாரியின்
முயற்சிகளும். அதால் இவர் சந்திக்கும் சவால்கள் என இதன் எந்த பாகமும் நாம்
பாதியில் நிறுத்தி பின் தொடரலாம் என்ற உணர்வை இதன் இறுதிவரை தராது.
நடிகை அனுஷ்கா ஷர்மாவோட தயாரிப்பு. மும்பை மகாராஷ்டிரா சுத்தி கிட்டத்தட்ட 100+ நகரங்கள்ல படபிடிப்பு
நடத்திருக்காங்க. அதை நம்ம ஸ்க்ரீன்ல பாக்கும்போதே. அமேசான் ப்ரைம்ல காண
கிடைக்கிறது.