பார்த்ததில் மிகவும் ரசித்தது: 166.
2016 மும்பையில் ஒரு நடுத்தரவர்க்கத்திற்கான அடுக்குமாடி குடியிருப்பு. இந்த
கதைக்கான பிரதானகளம். அந்த பழைய கட்டிடத்தின் பாதிப்பு ஏதேனும் ஒரு வகையில்
அனைத்து வீடுகளிலும் இருக்கும். சீலிங்கில் நீர் கசிவது. பாத்திரம் துலக்கும் சிங்க்கில்
தண்ணீர் போகாமல் இருப்பது இந்தமாறி. இந்த கதைக்கான மொத்த பெரும்பான்மையான
பாத்திரங்களும் இந்த குடியிருப்பை சேர்ந்தவங்கதான்.
முக்கிய பாத்திரங்களான நாயகி
வங்கியில் கேஷியர். கான்வெண்ட்டில் படிக்கும் ஒரே மகன். அவர் கணவர் நிரந்தர வேலை
ஏதும் இல்லாமல் சில வேலைகள் செய்து வருகிறார். கிதார் வாசிப்பாளர் அது சம்பந்தமான பணிகளே
அவருக்கு பிரதானம். ஆதலால் வருமானம் பெரிதாக ஏதும் இல்லை. KINGDOM சீரீஸ்க்கு
பின்னால் காத்திருந்து நேற்று NETFLIXல் வந்ததும் பார்த்த திரைப்படம்.
இந்த கதையின் பிரதான திருப்பம்
இந்த பழைய குடியிருப்பின் மூலமே நிகழ்வதால், காட்சிகள் பெரும்பாலும் அதைசுற்றியே.
அதிலும் இவர்களுக்குள் வரும் வாதங்கள் அனைத்துக்கும் துவக்கபுள்ளி அந்த வீட்டிலுள்ள
குறைகளால்தான் இருக்கும். இப்படி அதிகம் காட்சிக்கும், விவாதத்துக்கும் உள்ளாகும் அந்த
திருப்பம். இதன் இயக்குனர் தவிர்த்து, ட்ரைலரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய
காட்சி.
குளியல்அறையில் நீர் வெளியேறும் குழாயில்
ஏதும் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க. சல்லடை போன்ற வட்டவடிவ சிறுதுளைகள் உள்ள ஒன்றை
பொருத்துவார்களே. அதை நீக்கினால் நீர் நேரடியாக அந்த குழாயில் செல்லும். இப்பொழுது
அந்த குழாயுக்குள் செல்லும்படியான நீண்ட கூண்டு போன்ற அமைப்பில், சிறு பாலிதீன்
பைகளில் சுற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் பதுக்கிவைக்கபடுகிறது. அந்த தளத்தின்
நேர்கீழே நாயகியின் வீடு. அவரின் வீட்டில் அடிக்கடி பாத்திரம் துலக்கும் சிங்கின்
குழாய் அடைத்துக்கொள்ளும்.
எதிர்பாராவிதமாக ஒரு அதிகாலை அந்த
குழாயின் வழியே அடைபட்ட நீர் பீறிட்டு இவரின் சமையலறையை நனைக்க. அதன்வழியே சில
பணம் சுற்றப்பட்ட சில பாலிதீன் பைகள் இவருக்கு கிடைக்கிறது. இவ்வாறே சிலமுறை
நிகழ்ந்து பல பைகள் இவர் வசமாகிறது.
இந்த சூழலில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற
அறிவிப்பு வருகிறது. இவரோ வங்கியில் கேஷியர். இப்படி அனைத்து சம்பவங்களும்
அடுத்தடுத்த பெரும் சூவாரசியங்களை உள்ளடக்கியவை. ஆனால் திரைக்கதை ஒரு நிதானத்தோடு
நகர்கிறது இக்கதையின் நாயகனை போன்றே.
தன் ஒருவரின் வருமானத்தில் பற்றாகுறையாக குடும்பம்
இருந்தும். தன்கணவரின் கடன்சுமையையும் தானே சுமக்கும் சூழலிலும், வீட்டு வேளைகளில்
எந்த சிறுஉதவியும் அவர் செய்யாதபோதும் பெரிதாக அலட்டி கொள்ளாதவள். அவனுடன் இந்த சிறுசிறு உரசல்கள்
மட்டுமின்றி, அவனது வேலையில்லாத, அவனால் எந்த உபகாரங்களும் இல்லாத குறையை என்றும்
சொல்லி காட்டாதவளாய் தன்வரும்படியில் குடும்பம் நடத்துபவள். தன் ஒரே குறையான பண பற்றாக்குறையை
தீர்க்கும் பணமும் கிடைத்ததும். இவளின் நடவடிக்ககளில் ஏற்படும் மாற்றம். இப்படி
முழுகதையும் இவங்களையும், அந்த குடியிருப்பையும் மட்டுமே சுத்தி நகரும்.
முழுகதையும் அவளை மட்டுமே
பிரதானமாக சுழலும் பாத்திரத்திற்கு பொருத்தமான அந்த பேசும் விழிகள். பாவங்களை அந்த
இதழின் வரிகளில் நாட்டியமாடவிடும் கனிந்த இதழ்கள். இப்படி எந்த வார்த்தைகளுக்குள் எவராலும்
பொருத்திடஇயலாதவள். முழுநேரம் அலுவலகத்திலும், இடைப்பட்ட வீட்டிலும் இவள் வெறுமனே
அமர்ந்திருக்கும்படியான ஒரே ஒரு ஷாட்கூட இருக்காது. முழுக்க வெறுமை மட்டுமே
சூழ்ந்த உலகம் இவளுடையது. இவளும் நமக்காக ஒப்பனையுடனும்,
சற்று கீழ்இறக்கிய சேலையும் அணிந்த காட்சி ஒன்று இந்த கதையில் உள்ளது. அதுவரை பகலில்
முழுக்க புடவையும், இரவில் பாதங்கள் கூட பார்வையில் படாத நைட்டி உடைகளில் மட்டுமே அவள்
எத்தனை அழகானவள் என நம்மை உணரவைக்கும் காட்சிஅது.
வேறு எந்த இயக்குனரும் இப்படியான
எந்த பெரும் வசீகரமும், ஒப்பனைகள் பொருந்தா
நாயகியை இந்த கதைக்கு தேர்வுசெய்ய வாய்ப்பே இல்லை. இந்த திரைகதையிலும் அவரின்
இயக்கமும், அவருடைய நிறைய ஷாட்ஸ் இந்த முழுகதையையும் நாம் எங்கும் பாதியில்
நிறுத்திடாமல் கொண்டுபோக மிகமுக்கிய காரணம். அதிலும் இரவு படுக்கையில் மகனின்
இருபுறமும் அமர்ந்து கணவன், மனைவிக்குள் நடக்கும் அந்த சிங்கள் டேக் விவாதம். இரவில்
பிரிட்ஜ்யை திறந்து தண்ணீர் கேனை எடுக்கும் காட்சியில் அவரின் கடந்த காலத்தோடு இணைப்பது.
ஒரு பொறுப்பில்லா தந்தை. அவரோட
முதல் காட்சி எழுந்து படுக்கையை கூட சரிசெய்யாமல் கையில் மொபைலுடன் வந்து பிஸ்கட்
பாக்ஸ் ஓப்பன் பண்ணி எடுத்திட்டு மூடாமலே, முகம்கழுவி துண்டையும் மகனின் மீது வீசி
சென்றிடுவார். கதையோடு பார்க்கையில் சில பாத்திரங்கள் மற்றும் சில சம்பாஷனைகளோடு
இருக்கும். அதனால் இவரின் செய்கைகள் மீது நம் கவனம் செல்லாது. இதற்கான அடுத்த
காட்சியில் இயக்குனர் அவரின் மகனை கொண்டு நமக்கு உணர்த்திட செய்வார்.
இதுபோக DEMONETIZATION இந்த கதையினுள்ளே
வருவதால் அரசை அசால்ட்டாக பல இடங்களிலும். கதையோடே சில இடங்களிலும் தொம்சம்
பண்ணிருக்கார். NETFLIXல் காணகிடைக்கிறது.
சூப்பர்...
ReplyDeleteNila again ... :-)
Delete