Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, July 13, 2019


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 147.

குடும்ப உறவுகளை மையபடுத்தி கதை சொல்லும் பாணி கருப்பு வெள்ளை காலத்திலேயே குறையதொடங்கி இருந்தாலும். அதற்க்கு  பின்னான ரஜினி, கமல் காலத்திலும் கூட கதையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு நூலிழை அளவேனும் அவர்களது குடும்ப உறவுகளை காரணமாக்கினர். உதாரணமாக தன் தந்தை முதல் காதலி வரை எதை இழந்தாலும் எந்தவகையிலும் நிதானத்தை இழக்காதவர். ஒரே நொடி நிதானத்தை இழந்ததால் சிறை செல்லும் சூழல். தன் அனைத்து மக்களின் கண்ணீருக்கு இடையில் கையில் விலங்குடன் சிறைசெல்ல அந்த சிறு கிராமத்தில் இருந்து ரயில் நிலையம் அழைத்து வரப்படுகிறார். தனது இந்த சூழலுக்காக சிறு கலக்கம் அவரிடம் இருந்தாலும். கதையின் முதல் முப்பது நிமிடம் அவரிடமிருந்த தெளிவு. இந்த இறுதி பத்து நிமிட காட்சிகளில் தென்படும். இந்த சூழலிலும் கம்பீரத்துடன் வரும் சக்திவேலை சில நொடி காட்சியென்றாலும் அசைத்து பார்த்தது கர்ப்பிணி பஞ்சவர்ணம். அதுவரை அந்த கிராம மக்களை போல் வெறும் வருத்தத்துடன் மட்டும் இருந்த மொத்த பார்வையாளனையும், தன் மனைவியின் கண்களை அவன் சந்திக்கும் நொடியில் கண்கலங்க வைக்கும். இதில் எங்கயும் தன் குடும்பத்தை இணைச்சு மேலதிக பரிதாபத்தை சம்பாதிக்க வேண்டிய சூழல் இல்லையென்றாலும் அந்த காட்சியோட நாம கொஞ்சம் கூடுதலா நம்ம ஒன்றவைக்க பயன்படுத்தி இருப்பாங்க.


இவங்க இத பயன்படுத்தி கொள்ளும் அளவுகோல் வேறுபட்டாலும் அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல பயன்படுத்தி இருக்காங்க. பயன்படுத்தறாங்க. இன்னுமொரு நூற்றாண்டு காலத்துக்கு பின்னும் குடும்ப உறவுகளை அடிப்படையாக கொண்ட கதைகளை இந்திய சினிமா பயன்படுத்தும். காரணம் நாயக்கரோட மரணத்தை விட அம்மாவோட சாவுக்கு நீங்கதான் காரணம்னு சொல்றாங்கனு அவர் பொண்ணு கேட்டதுதான் நமக்கு பெரிய பாதிப்ப கொடுக்கும்.
இப்ப இந்த JERSEY அப்படிங்கற இந்த தலைப்பே சொல்லிடும் இந்த படத்தோட கான்செப்ட்ட. உலகத்துல எந்த ZONAL கதையை எடுத்துகொண்டாலும் பொதுவான சில விசயங்களை தவிர்த்து மற்றதெல்லாம் புதுசா பண்ணுவாங்க அவங்க சாமர்த்தியத்தை பொறுத்து. ஆனா ஸ்போர்ட்ஸ் ZONAL படங்கள்ல மட்டும்தான் உலகம்பூரா ஒரே அடிப்படை. ரொம்ப ஏழ்மை பின்னணி. அவனது லட்சியத்திற்கு பெற்றோர் கூட ஆதரவா இல்லாமல் இருப்பது. நிச்சயம் அவன் காதலை கூட தன் லட்சியத்திற்காக தியாகம் பண்றதுன்னு இதுக்குள்ளவே மட்டும்தான் படம் பண்ணுவாங்க. கிட்டத்தட்ட இதே சாயல்ல சில வருசங்களுக்கு முன்ன வந்த 1983 மலையாள படத்துல மேல சொன்ன அத்தனையும் இருக்கும். இருந்தும் அது தனிச்சு தெரிஞ்சது. அவங்களுக்கே உண்டான அந்த யதார்த்த உருவாக்கள் மூலமா.


ஆனா இதுல வழக்காமான காட்சிகள் பூரா கூடுமானவரைக்கும் தவிர்த்து. புதுசானு சொல்லமுடியலனா கூட குட்டி குட்டியா நெறைய நெகிழ செய்யும் காட்சிகள் மூலமா கொஞ்சம் ஆழமாவே நம்மள திருப்திபடுத்தும் படம். இது நான் ஈ மூலம்தான் இவர் பெரும்பாலோருக்கு முதல் அறிமுகம். ஆனா இங்க TELUGUல AWE மாறி படங்களை கூட வெளியீடு பண்றஅளவு வளந்து இருக்கார். சில வருஷங்கள்ல எப்படி இந்த வளர்ச்சினு இந்த படத்த பாத்தா புரியும். முழுக்க இவர மட்டுமே சுத்தி சுழலும் கதை. அத ரொம்ப இயல்பா அசால்ட்டா பண்ணிருக்காரு. இந்த ஸ்போர்ட்ஸ் கதைகள்ல இறுதி காட்சியோட கடைசி ஷாட் வரைக்கும் வெறும் தோல்விகளை மட்டும்தான் நாயகன் பாத்து வந்திருப்பாங்க. முதல்ல இந்த அடிப்படைய ஓரளவு மீறிவந்த படம் இதுதான்.


நாணி, சாரதா ஸ்ரீநாத், அவங்க பையன் அப்பறம் அவரோட கிரிக்கெட் இதுதான் முழுபடமும். நானியையும், கிரிக்கெட்டையும் எடுத்துட்டா மீதம் இருக்கற ரெண்டுபேர்ல. அந்த பையன் அவன் எப்படி நடிச்சி இருந்தாலும் சின்ன பையங்கறதால அது நம்ம மனசு ஏத்துக்கும். மீதி இருக்கறது சாரதா ஸ்ரீநாத்தான். படத்தோட முதல் ஷாட்ல இருந்து கடைசி ஷாட்வரை நாயகனுக்கு சமமா இந்த கதையோட அத்தனை திருப்பத்துக்கும் முழு காரணகர்த்தாவா அவங்க பாத்திரத்த நானிக்கு சமமா கொண்டு போறவங்க இவங்கதான். சும்மா சொல்லகூடாது அடிச்சி விளையாண்டது இந்த கதைல இவங்கதான்.


ஜெர்சினு டைட்டில் கார்ட் வர அந்த ஷாட்லையே இவங்க மூணுபேரோட குடும்ப பின்னணிய புரியவெச்சி இருப்பாரு இயக்குனர். அந்த ஷாட்டே
சொல்லிடும் இது நாம பாக்க வேண்டிய படமா இல்லையான்னு. இயக்குனர் அப்பறம் TECHNICAL TEAMனு யாரையும் தெரியல. தெலுங்கு படம் அதிகம் அறிமுகமில்ல எனக்கு. ஆனா 1985, 1995, 2019 இந்த மூணு காலகட்டத்தையும் நமக்கு எந்த நெருடலும் வராம இவங்க PRESENT பன்னதுக்கே ரொம்ப பெருசா பாராட்டு தெரிவிக்கலாம்.

Friday, July 5, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 146.


த்ரில்லர் கதைகளின் சுவாரசியமே நடந்த சம்பவத்தின் மூலம் கிடைக்கும் துப்புகளை கொண்டு குற்றவாளியை எவ்வாறு நெருங்குகிறார்கள் என்பதில் ஒளிந்துள்ளது. மற்றொரு வகை குற்றவாளி தான் செய்த குற்றங்களில் இருந்து எந்தவகையில் சாமர்த்தியமாக தப்பிக்கிறான் என்பதில். பெரும்பாலான கதைகள் இந்த இருவகைகளுக்குள்ளே அடங்கும். சமீபமாக  இவ்வாறான படங்களில் வேறொரு கூடுதல் சுவாரசியத்தை கதைநெடுக பயணிக்க வைத்து. அதை முக்கிய இடங்களில் ஓப்பன் செய்து பார்வையாளரை மேலும் இந்த கதையுடனே ஒன்ற வைக்கும் யுக்தியை இத்தலைமுறை இயக்குனர்கள் கையாள்கின்றனர். இவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிலும் பெரும் மகிழ்ச்சி இவர் கன்னட இயக்குனர் என்பது.

நாற்பது வருடங்களுக்கு முன்பு இறந்த சடலங்களின் எலும்புகள் தற்போது கண்டெடுக்கபடுகிறது. இறந்தவர்களின் வயது, பாலினம், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். இதை மட்டுமே கொண்டு ரொம்ப விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கார். ரொம்ப பயங்கர சத்தமான பின்னணி இசை, இருட்டு வீட்டுக்குள்ள டார்ச் அடிச்சிட்டு போய் க்ளு ஏதாவது கிடைக்குமான்னு தேடும் காட்சிகள். இருட்டு உருவம் பின்தொடரும் காட்சிகள்னு. அதிகமா பார்வையாளன் பாத்து பாத்து புளித்துபோன எந்த காட்சியும் இதுல பயன்படுத்தாம ரொம்ப கவனமா தவிர்த்ததுக்கே ரொம்ப பாராட்டனும்.

பவன்குமார் (LUCIA, UTURN படங்களின் இயக்குனர்) புண்ணியத்துல கன்னடபடம் பாக்க ஆரமிச்சதுல பெரிய புண்ணியமே ஆனந் நாக் மாறி ஒரு அசாதாரண நடிகனோட சில படங்கள பாக்க முடிஞ்சதுதான். GODHI BANNA SADHARANA MYKATTU படத்துலகூட இதே சிலநாள் வெள்ளை தாடியும் வாராத தலைமுடியோட கண்ணுக்கு கீழ சுருக்கம்னு பாத்த உடனே பாவம் வயசானவர்னு சொல்ற தோற்றத்துல அவ்ளோ ஆச்சர்யபடுத்தினார். ஆனா இந்த படத்தோட களம், இவருக்கான பாத்திரம்னு எல்லாம் அப்படியே நேர்ரெதிர் இதுல. ஆனா கிட்டத்தட்ட அதே தோற்றத்துல அவ்ளோ ஈர்க்க வெச்சிடறார்.
அப்பறம் க்ரைம் போலீசா ஆகற கனவுல இருக்கும் டிராபிக் போலீஸ் வேடத்துல வரவர். இவர்தான் பெருசா யாருமே கண்டுக்காத இந்த அட்ரஸ் இல்லாத நாப்பது வருஷங்களுக்கு முந்தின எலும்பு கூடுகளுக்கு பின்னால இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கறார். நீங்க நெனச்சமாறியே UNOFFICIAL யாதான். அதும் எந்த க்ளுவும் இல்லாத வெறும் எலும்புகூடகளை வெச்சி கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு ரொம்ப சூவாரசியமா கொண்டு போறாரு இயக்குனர்.

அதிலும் இவர்  டிராபிக் போலீஸ் வேலைமேல சுத்தமா விருப்பமே இல்லாம இருக்கறவறா வருவார். ஒரு காட்சில சேர்ல உக்காந்து சாக்ஸ் & சூ போட்ற மாறி ஷாட். சும்மா ஒரு பத்து வினாடி வரும். அதுல குதிங்காலுக்கு மேல அளவு கம்மியான சூ போட்டா கடிக்குமே சரியா அந்த இடத்துல பிளாஸ்டர் ஒட்டிட்டு சாக்ஸ் போடுவாரு. அந்த வேலை அவருக்கு பொருந்தாம அந்த சூ மாறி கடிக்குதுன்னு சொல்றமாரி அந்த ஷாட் ரொம்ப ரசிச்சு பாத்தது. படம் முழுக்க இப்படியான ஷாட்ஸ் நெறைய நம்மள ஆச்சர்யபடுத்துது.


TECHNICAL பக்கம் ரொம்ப ரசிக்க வெச்சது முன்னமே சொன்ன மாறி வழக்கமா THRILLER கதைகள்ல பயன்படுத்துன எந்த காட்சிகளையும் ரொம்ப கவனமா தவிர்த்தது. நாப்பது வருஷங்களுக்கு முந்தின காட்சிகளுக்கு பழைய பிலிம் ரோல் டைப் கலர் லைட்டிங் பயன்படுத்தினது. இந்த நிகழ்கால காட்சிகளுக்கும் ரொம்ப அதிக வெளிச்சத்தை பயன்படுத்தினா எடிட்டிங்ல காட்சிகள் முன்ன பின்னமாறி வரும் போது ஆடியன்ஷுக்கு லைட்டிங் அதிகமா கதையோட ஒன்ற சிரமமா இருக்கும்னு தவிர்த்தது. இதெல்லாம் பயன்படுத்தணும்னு நெனக்கறதுக்கு முன்னமே எதெல்லாம் பயன்படுத்த கூடாதுன்னு யோசிச்சி இருப்பாங்கனு நினைக்கறேன். யாருக்கும் தவறவிட வேண்டிய படைப்பா நிச்சயம் இது இருக்காது. 

Trailer Link: 

https://www.youtube.com/watch?v=5w1vgMoPMRA

Search This Blog