பார்த்ததில் மிகவும் ரசித்தது: 130.
ஒரு படத்தை பார்க்க பலகாரணம் உண்டு. நமக்கு பிடித்த
நாயகன், நாயகி, இயக்குனர் இப்படி. அப்படியில்லாம ஒருசில படங்களை பார்க்க
குறிப்பிட்டு சொல்ல எந்த காரணமும் இருக்காது. இந்த படத்தை போல. முதலில் இதன்
தலைப்பு. நைஜீரியாவுக்கும் கேரளாவுக்கும் எப்படி சம்பந்தபடுத்துவார்கள். இதில்
நைஜீரியாவிலிருந்து திரும்பிய மலையாளியபத்தி இருக்கும்னா அப்படியில்லாம அந்த ஊர்
பையனே போஸ்டர்ஸ்ல இருக்கான். அவன் இங்க வர என்ன காரணமா இருக்கும். ட்ரைலர்ல
நைஜீரியாலாம் வருது இவ்ளோ செலவு பண்ற அளவுக்கு பெரிய நட்சத்திரங்களும் யாரும்
இல்ல. IMDB ல 8.5 STARS வேற.
கேரளால பெருசா எந்த வருமானமும் இல்லாம சொந்தமா ஒரு
FOOTBALL டீம நடத்திட்டு. சுத்து வட்டாரத்துல எங்க போட்டி நடந்தாலும் அதுல
கலந்துகிட்டு, எப்பவும் கையுக்கும், வாய்க்கும் சரியா போயிட்டு இருக்கற முக்கிய
பாத்திரம். சரியான எந்த வேலையும் இல்லாத பையனுக்கு எப்படி பொண்ணு அமையும்னு
வருத்ததுல இருக்கும் அம்மா. இவங்க ரெண்டு பேரோடவும் சுத்தமா ஒட்டாம எப்பவும்
ஒதுங்கியே இருக்கும் அப்பா பாத்திரம். இவங்க இல்லாம ரொம்ப முக்கிய பாத்திரத்துல
ஒரு நைஜீரியாவ சேந்த பையன். அதும்போக அக்கம்பக்கத்து ஜனங்க. இவங்க மொத்தமும்
சேந்து கொடுத்தது நிச்சயம் ஒரு நல்ல சினிமா.
எப்பவும் துணை பாத்திரத்துலயே வந்தாலும் பெரும்பாலும்
அதிக பேருக்கு அறிமுகமான சௌபின் ஷாகிர்தான் அந்த FOOTBALL டீம நடத்தும் முக்கிய
பாத்திரத்துல வராரு. ரொம்ப சாதரணமா இந்த இயல்பான கதைக்குள்ள இருக்கும் அத்தனை
நெளிவு சுளிவுக்குள்ளும் எந்த வித்யாசமும் நமக்கு துளிகூட உறுத்தல் தெரியாம பொருந்தி
போறாரு. அவரு மட்டுமில்லாம இதுல துணை பாத்திரங்களா வரும் அத்தனை பெரும் அப்படியே.
அதுதான் இவங்க படம் பெரும்பாலும் ரொம்ப இயல்பா தெரிய மிக முக்கிய காரணம்.
நைஜீரியால நல்ல FOOTBALL ப்ளேயரா இருந்து இந்தியா வந்து.
இங்க சௌபின் குழுவில் சேர்ந்து விளையாடி வராரு. அவரு நைஜீரியால இருந்து இங்க
வந்ததுக்கான காரணமும். சௌபின் ஷாகிர் அவரோட அப்பாவ எங்கயும் கண்டுக்காம போறதுக்கான காரணமும்... பெருசா
எதும் இல்ல கில்லில விஜயோட தங்கச்சி கடைசிவரை அவர்கூட சண்டையே போட்டுட்டு
இருக்கும். கடைசியா அவருக்காக அழுது நம்மளயும் கலங்கவைக்கும்ல அப்படியான அதே
தாத்தா காலத்து பழைய ட்ரிக்தான். ஆனாலும் ஓடி ஓடி உலக சினிமா பாத்தாலும் நம்மாள
இன்னும் மாயாண்டி குடும்பத்தார ஒதுக்க முடியல்ல. அப்படியான வகை கதையை இன்னும்
ரொம்ப யதார்த்தமா, எளிமை அழகியலோட கொடுத்து இருக்காங்க.
அந்த நைஜீரியா பையன நம்பித்தான் அந்த டீமோட பொழப்பு
ஓடிட்டு இருக்கு. ஒரு நாளு அவன் வழுக்கி விழுந்து கால்ல FRACTURE ஆகிடுது. அவன
நம்ம டீம் ஓனர் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கே கூட்டி வந்திடறார். ஏற்கனவே நிலையான
வருமானம் இல்லாத நிலையில, இவனுக்கும் அடிபட. கூடவே அவனோட மருத்துவ செலவுக்கும்
பணம் தேவைப்படும் சூழல்லதான் கதையோட மேலும் அதிகமா நாம் ஒன்றும் நிகழ்வுகள் வருது.
சரியான வருமானம் இல்லாம இருக்கும் மகனை கண்டிக்காம, அவனோட வழியிலே விட்டு சற்று
தொலைவில் இருந்து வருந்தும் அவனது அம்மாவின் பக்கங்களும். ஒரு பொருட்டாகவும் தனது
தந்தையை அவன் நினைக்காததற்க்கான காரணங்களும். இதற்க்கெல்லாம் மேலாக நடக்க இயலாமல்
தன் வீட்டிலுள்ள பையனுக்கும் அந்த குடும்பத்திற்குமான நெருக்கத்தை ரொம்ப
யதார்த்தமா கொடுத்த விதத்துல படம் நின்னுடுச்சி.
படத்துல தனியா இந்த ஷாட் கேமரா வொர்க் சூப்பர். அந்த
BGM அட்டகாசம். இடைவெளியின் போதான எடிட்டிங் ட்விஸ்ட் செம்மனு எதையும் பிரிச்சு
சொல்ல முடியாம அனைத்து டெக்னிக்கள் சைடும் கதையோட கதைக்குள்ளவே இருக்கு. படத்தோட
எந்த ஒரு ஷாட்லகூட வெளிய தெரியாம இருந்ததுதான் இந்த கதைக்கான மிகப்பெரிய பிளஸ். இவ்ளோ யதார்த்த கதைலயும் ரொம்ப தனியா தெரிஞ்சது
படத்தோட வசனம். பணத்தேவைக்கு ரொம்ப குழப்பத்துல இருக்கும் நாயகனிடம் அவரோட நண்பர்
சொல்லுவார்.
“இப்பவும் நம்ம டீமே விலைக்கு கொடுத்தா ஒரு ரெண்டரை டூ
மூன்றரை லட்சம் வரை கிடைக்கும்னு.
அதுக்கு அந்த குழப்பத்துலயும் ரொம்ப தெளிவா நாயகன்
பாத்திரம் சொல்ற வசனம்.
“ரொம்ப இக்கட்டான சூழல்ல நம்ம டீம் கண்டிப்பா
தோத்துடும்ற நிலையிலயும் நம்ம என்ன நினைக்கறோம். “எப்படியாது ஒரே ஒரு கோல போட்டு
மேட்ச டிரா பண்ணிடமாட்டாங்களானு. அந்த நிமிஷத்துக்குதான காத்துட்டு இருக்கோம்.
அப்படி இந்த பிரச்சனையில் இருந்தும் வெளிய வர முடியலைனாலும் டிரா பண்ணவாவது எதாவது
வழி இருக்கும்னு சொல்லுவாரு.
https://www.youtube.com/watch?v=EHyaTJGmN4k