பார்த்ததில் மிகவும் ரசித்தது: 123.
இப்படியான கொலையாளியை தேடும் கதைகளில் பிரதான இருவகைகள் உண்டு. ஒன்று கொலையாளியை நமக்கும் அறிமுகபடுத்தி, அவன் இவ்வாறு இறுதிவரை விசாரணை வளையத்திற்குள் வராமலே தந்திரமாக செயல்படுகிறான் என்பது. மற்றொன்று கொலையாளியை யாரென்பதை நமக்கும் அறிமுகப்படுத்தாமல் இறுதில் கண்டடைவது. முதல்வகையில் திரைக்கதை மிகச்சரியாக அமைந்தால் பார்வையாளனுக்கு மிகப்பெரும் சுவாரசிய திரைப்படமாக அமையும். காரணம் திரைக்கதையை எங்கும் வளைக்க இயலாது. நமக்கும் தெரிந்த கொலையாளியை சுற்றி மட்டுமே நகர்த்த இயலும். இதில் சூவாரசியமே கொலையாளி எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் தப்பித்து செல்கிறான் என்பதே.
இரண்டாம் வகையில் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்ல இயலும். கொலைக்கான காரணமாக ஒரு ஆவியை காரணம் காட்டியும் கதையை நிறைவு செய்ய இயலும். அல்லது அதுவரை கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவரை கொலைக்கு காரணகர்த்தாவாக்க இயலும். இப்படம் இரண்டாம் வகையை சேர்ந்ததாக இருப்பினும். திரைக்கதையில் முதல் வகையை சேர்ந்ததை போன்ற நேர்மையும். கதை துவக்கம் முதல் எங்கும் வளையாமல், பார்வையாளனை இறுதிவரை அந்த சம்பவத்திற்கு காரணகர்த்தா யார் என்ற ஒற்றை கேள்வியை நோக்கி மட்டுமே கொண்டுசென்று முடிவதுடன். பெரும் திருப்புமுனை என்ற பெயரில் கதைக்கு தொடர்பில்லாத எந்த பாத்திரங்களை கொண்டும் நிறைவு செய்யாமல் துவக்கம் முதல் கதையின் தொடர்பில் இருந்த பாத்திரத்தை கொண்டே முடித்ததும். அப்பாத்திரம் பார்வையாளன் யூகத்திற்க்குள் அதிக சதவிகிதம் வராதவகையில் கொண்ட திரைக்கதையும் இப்படத்திற்கான மிகபெரும் பலம்.
படம் துவங்கிய முதல் நிமிடத்திலேயே ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. இறந்த பெண் ஆயிஷா. அவர் வீட்டின் பணிப்பெண் ரெமி பெர்னாண்டர்ஸ். அப்பெண்ணின் பெற்றோர்களான சச்சின் மற்றும் ஆர்த்தி. அவர்களது வீட்டின் மற்றொரு பணியாளர் சேட்டன். இறந்த பெண்ணின் காதலன் மற்றும் சேட்டனின் சகோதரர் சுதாகர் மிஸ்ரா. என்ற சொற்ப பாத்திரங்களை மட்டுமே வைத்து ஒரு நல்ல விசாரணை கதையை வழங்கியுள்ளனர் என்பதற்கு உதாரணமே விசாரணை வளையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி இறுதியில் ஒரே ஒருவர் என கொலையாளியை நெறிக்கையில் மட்டுமே நம்மால் உணர முடியும் மிக சாதாரணமாக யூகிக்க கூடிய ஒருவரை நாம் யூகிக்க தவறியதாக. அதற்க்கு மிகப்பெரும் காரணம் இந்த திரைக்கதை நம்மை எங்கும் தனித்து சிந்திக்க சில நிமிடங்களை கூட வழங்காமல் அவர்கள் போக்கிலேயே நம்மை முழுக்க இழுத்து சென்றதே அவர்களின் வெற்றி.
முதல்கட்ட விசாரணையில் இறந்த பெண்ணின் தந்தையே கொலைக்கான காரணகர்த்தா என கைது செய்யபடுகிறார். ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருக்கும் சூழலில். இறந்த மாணவி கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கபடுகிறது. இதற்க்கு பின் நிகழ்பவை அனைத்தும் அவர்களின் பார்வையில் நாம் ஏதும் கணிக்கா வண்ணம். ஒவ்வொரு காட்சியின் இறுதியிலும் விசாரணை மேலும் மேலும் சுவாரசிமாகிகொண்டே செல்லும். சம்பவத்திற்கு பின்னே மாயமான புது பணியாள் சேட்டன் மற்றும் அவரது சகோதரன் சுதாகர்மிஸ்ரா வரும் காட்சிகள்யாவும் நம்மை பெரிதும் படபடக்க செய்யும்.
விசாரணையில் இப்பாத்திரங்கள் மட்டுமே இல்லாமல் புதிதாக சேரும் இறந்த பெண்ணின் தந்தையின் நண்பர் மற்றும் அவர் மனைவி பாத்திரங்களும் நம்மை எங்கும் சலிப்பாக்காமல் கதையின் சுவாரசியத்திற்கு பெரிதும் துணை நிற்கின்றனர். அவர்களும் இக்கொலைக்கு ஏதோ ஒரு வகையில் தொர்பிருக்கும் படியான விசாரணையின் யூகமும் அதற்க்கான காட்சிகளும் இறுதியில் அவர்கள் இந்த வளையத்தில் இருந்து விடுபடும் காட்சிகள் என இவர்களின் பங்கு இக்கதையை மேலும் சுவாரசியமாக்க மிகப்பெரியது.
அப்பெண்ணின் தந்தை பாத்திரத்தில் ஆசிக்வித்யார்த்தி மற்றும் பணிபென்னின் பாத்திரத்தில் வரும் அஸ்வினிகல்சேகர் மட்டுமின்றி விசாரணை அதிகாரியாக வருபவர் இந்த மூன்று பாத்திரங்களும் இந்த தேர்ந்த நடிகர்களின்றி இக்கதை இந்த பரபரப்பை அடைய வாய்ப்பில்லை. மொத்தத்தில் த்ரில் கதை விரும்பிகள் தவறவிட கூடாத படமிது.
No comments:
Post a Comment