WEB SERIES -001
MIRZAPUR (2020) – SEASON – 02- 10 EPISODES.
எப்ப அடுத்த
சீசன் வரும்னு முதல் சீசன் பார்த்த மொத்த பேரையும் எதிர்பார்க்க வெச்ச சீரீஸ். அதுக்கு
மிக முக்கிய காரணம் Kaleen Bhaiya மற்றும் அவர் மகனாக வரும் Munna இந்த ரெண்டு வில்லன்
பாத்திரங்கள். முதல் சீசனோட ஒன்பது எபிசோட்ஷும் பெரும்பான்மை காட்சிகள்ல இவங்க
ராஜ்ஜியம்தான். பாத்திரங்களோட
குணாதிசயங்களை ஒவ்வொரு சின்ன சின்ன காட்சிகளிலும் இவங்க ரெண்டு பாத்திரங்கள்லதான் அதிகமா
சொல்லிட்டே வந்திருப்பாங்க.
நாயகன் பாத்திரம் பண்ண Guddu, Bubbluவும் இவங்ககிட்ட
வேலை பாக்கறவங்களாதான் வருவாங்க. இந்த தொழிலிலுள்ள
நெளிவு சுளிவுகளை ரொம்ப சீக்கரம் இவங்க கைக்குள்ள கொண்டுவந்துடுவாங்க. அவங்க வியாபாரம் எங்கெல்லாம் தடைபடுது, அதை எப்படி சரி பண்ணனும் எல்லாமே சரிபண்ணி.
அவங்க வியாபாரத்தை ரொம்ப பெருசா பண்ணிடுவாங்க.
மொத்த DON படங்களோட கதைகளை போலவே. அப்பா, அவங்க (Guddu,
Bubblu)ளுக்கு கொடுக்கும் முக்கியதுவம் நமக்கு கொடுக்கலைனு நினைக்க ஆரமிக்கும் இடம்,
இந்த கதை உச்சபட்ச வேகம் எடுக்க ஆரமிக்கும். தன்னோட அப்பாவையே கொல்ல முடிவெடுத்து,
அதுக்கான வேலைகளையும் ஆரமிக்க. இங்க அப்பாவோ இந்த நாயக பாத்திரங்களை கொண்டு ரொம்ப
அழகா தன்னோட வியாபார எல்லையை விரிவுபடுத்திட்டு இருப்பாரு.
இந்த சூழல்ல ஆளும்கட்சி அமைச்சரோட ஒரு பொண்ணு விஷயத்துல தன்மகனால பகை ஒருபுறமும். தன்னை மீறி தன்னிடம் வேலைபார்க்கும் Guddu, Bubbluவின் வளர்ச்சியும். தன்மேல் நடத்தப்பட்ட கொலைமுயற்சிக்கு காரணகர்த்தா யார் என்ற குழப்பமும். தன் மகனே சமீபமாக தன்னை விட்டு விலகி நிற்பதால் ஏற்பட்ட மனசோர்வு என இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அந்த மாவட்டத்தின் (Mirzapur) ராஜா என்ற கம்பீரத்தையும், நிதானத்தையும் எந்த காட்சியிலும் விட்டுகொடுக்காமல் வளம்வருவார். இவரை மீறி இந்த இடத்துல ஒருத்தனும் ஒன்னும் பண்ணமுடியாதுனு நம்ம எல்லோரையுமே நினைக்கவெச்சிடுவார் Kaleen Bhaiya.
எந்த சின்ன விஷயமாக இருந்தாலும் ரொம்ப யோசிச்சு சரியான
வழிமுறைகளோட அதை செயல்படுத்த ஒருவனும், தங்கள் தொழிலுக்கு இடையூரா இருப்பவர் எத்தனை
பெரிய நபரா இருந்தாலும், அந்த நபரை சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் கொஞ்சமும்
தயங்காமல் தாக்குதலில் இறங்க ஒருத்தனும் என Guddu, Bubblu ரெண்டு பேரோட பாத்திர
வடிவமைப்பு அத்தனை சுவாரசியமா இருக்கும். இந்த நான்கு முக்கிய பாத்திரம் இல்லாமல்
துணை பாத்திரங்களா வரும் அத்தனை நபர்களுமே அவங்க பங்குக்கு இந்த கதையை அடுத்த
கட்டத்துக்கு கொண்டு போய்கிட்டே இருப்பாங்க.
ஒருகட்டத்தில் தன் அப்பாவுடைய அனுமதியோடே Munna ஒரு
திருமணநிகழ்வில் Bablu மற்றும் Gudduவுடைய காதலினு இவங்க நெருங்கிய வட்டத்தை
சேர்ந்த மொத்த நபர்களையும் ரொம்ப கொடூரமா கொலை பண்றதோட முதல் சீசன் நிறைவடையும். இப்ப எதைபத்தியும் யோசிக்காமல் உடனே களத்தில்
இறங்க துடிக்கும் Guddu மட்டும் ஒருபுறமும். Opiyum, Gun தொழிலில் அந்த மாநிலத்தின் பெரும் சாம்ராஜ்யமாக பரந்து
விரிந்து நிற்கும் Kaleen Bhaiya மற்றும் அவரது மகன் Munna மறுபுறமும்
என அடுத்த சீசன் தொடங்குகிறது.
முழுக்க இது வெறும் பழிவாங்கல் கதையை போல இருந்தாலும்,
இந்த கதையுடைய களம் மற்றும் திரைக்கதை பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும். முதல் சீசன்
தமிழிலேயே இருக்கு. இந்த சீசன் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில சப்டைட்டிலுடன்
கிடைக்கிறது amazon Primeல்.