பார்த்ததில் மிகவும் ரசித்தது – 171.
CARGO
(2019) – HINDI – SIMPLY WORTH
நம்ம இறந்த பின்னால நம்ம உயிர் அதாவது, நம்ம ஆன்மா என்ன ஆகும்? எங்கே போகும்?
உண்மையா அது மாறி ஏதாவது இருக்கா? இப்படியான ஆராய்ச்சிகள் உலகம் பூரா நடந்துகிட்டே
இருக்கு. இதையே களமா வெச்சி நிறைய நிறைய படங்களும் வந்துகிட்டேதான் இருக்கு. அப்படி
இறந்து போறவங்க ஆன்மாவையும், உடலையும் அவங்களோட
அடுத்த பிறவிக்கு தயார் செஞ்சி அனுப்பும் வேலையைதான் நாயகன் பண்றாரு. அதுக்காக பெரிய பூஜை, பரிகாரம், பெரிய சாமியாரா ஒருத்தர் இப்படி
எதுமே இல்லாம, குறிப்பா பேய், பூதம்னு எந்த சமாச்சாரமும் இல்லாம ரொம்ப நீட் &
க்ளீனா ஒரு படம்.
அதாவது ஒரு பெரிய ஸ்பேஸ் ஷிப். அதுல நாயகன் மட்டும்
இருக்கார். இறந்துபோறவங்க நேரா அங்க அனுப்பி வைக்கறாங்க. அவங்க உடல், மனம் ரெண்டையும்
தயார் செஞ்சி, அவங்களோட நினைவுகளை முழுக்க
அழிச்சி அவங்களோட அடுத்த பிறவிக்கு அனுப்பறார்.வருஷம் முழுக்க அந்த வேலையை அதிகாலையில்
இருந்து இரவு வரைக்கும் அவர் மட்டுமே பார்த்துவரார்.
அந்த ஸ்பேஸ் ஷிப்தான் கதைகளம், அதனால அங்கிருக்கும் சமாச்சாரம் எல்லாமே அவங்க கதைக்கு அந்த பொருள் எங்காவது பயன்படற மாறி பாத்து பாத்து பண்ணியிருக்காங்க. அவர் அதிகமா பயன்படுத்தும் சில முக்கிய உபகரணங்கள் அடிக்கடி மக்கர் பண்ண, இவர் மேல்இடத்துக்கு தகவல் சொல்லிட்டே இருக்கார். ரொம்ப வருஷமா இவர் மட்டுமே வேலை பாத்துவரார். நாளுக்குநாள் வேலையும் இவருக்கு அதிகம் ஆகிட்டே இருக்கு, அதனால இவருக்கு ஒரு ஆஸிஸ்டன்ட் அனுப்ப முடிவெடுக்கறாங்க.
இவர் இந்த உபகரணங்கள் மட்டும் சரிபண்ணி கொடுங்க தனக்கு ஆஸிஸ்டன்ட் தேவையில்லைனு சொல்லி பாக்கறார். ஆனா அவங்க இந்த வேலைக்கு நல்ல பயிற்சி பெற்ற ஒரு பொண்ணை அனுப்பறாங்க. இதுக்கு பின்னால நம்ம யூகிக்கும்படி எதுவும் இல்லாம ஆனா, சுவாரசியமா வேற என்ன நடந்தது, அதுதான் மீதி கதை.
எமதர்மன், எருமைமாடுனு எந்த வழக்கமான சமாச்சாரங்களும் இல்லாம. இறந்துபோறவங்களோட அந்த கடைசி நிமிச துடிப்பை எதும் நமக்குகாட்டி கஷ்டபடுத்தாம. அடுத்த கார்கோ எப்ப வரும்னு நம்மளையும் ஆவலா எதிர்பார்க்க வெச்சது. ஒரு கல்யாண கோஷ்டி பஸ் ஆக்ஸிடண்ட் ஆகி இவரோட ஸ்பேஸ் ஷிப்க்கு வர காட்சினு, நிறைய புது அனுபவங்கள் இந்த படத்துல இருக்கு. புராண கதைகளை இப்படி சயிண்ஸ் பிக்ஷனுக்குள் கொண்டு வர முயற்சி பண்ணதுகாகவே பாராட்டலாம். இனி இதை அடிப்படையா வெச்சே இன்னும் நிறைய கதைகள் எதிர்பார்க்கலாம். NETFLIXல் காண கிடைக்கிறது.