பார்த்ததில் மிகவும் ரசித்தது: 165.
1989 களில் அதுவரை இல்லாதவகையில் பெரும்மழைக்கு
முந்தைய கருமேகங்கள் மற்றும் இடி மின்னலும் சூழ்ந்த சிறுநகரம். கிடார் வாசிப்பதில்
ஆர்வமுள்ள ஒரு சிறுவன். ஒவ்வொரு முறையும்
தான் வாசிப்பதை வீடியோவாக பதிவு செய்து தொலைகாட்சியில் அதை கண்டுகளிப்பது அவனது
பிரதான பொழுதுபோக்கு. அப்படியான ஒரு நாளில் தனது பக்கத்து வீட்டிலிருந்து ஏதோ வழக்கத்துக்கு மாறான ஓசை கேட்க. அங்கு
செல்பவன், அந்த வீட்டு பெண்மணி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்கிறான். உடன் அவள்
கணவன் கையில் ஆயுதத்துடன் இருப்பதையும் கண்டு, அங்கிருந்து தப்பிசெல்ல விரைகிறான்.
அந்த வீட்டிலிருந்து வெளியேறி சட்டென சாலையை கடக்கையில் எதிர்பாராவிதமாக
வாகனத்தில் மோதி இறந்துவிடுகிறான்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு
பின் இப்படியான ஒரு அசாதாரண சூழல். 1989களுக்கு பின் இப்படியான
Strom மீண்டும் நம்நகரில் FM எங்கோ ஒலித்துகொண்டிருக்க. அதே இடி மின்னலுடன்
கருமேகம் சூழ்ந்த அந்த நகருக்கு குடிவந்த ஒரு தம்பதியர் தங்களது பொருட்களை
ஒழுங்குபடுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றனர். தங்களது பக்கத்து
குடித்தனகாரர்களை இரவு விருந்துக்கு அழைக்க. அவர்கள் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன் இவர்களது வீட்டில் குடியிருந்த சிறுவன் இறந்ததகவலை
அறிகின்றனர். அடுத்த நாளே அந்த சிறுவன் பயன்படுத்திய வீடியோ கேமரா மற்றும் அதே தொலைக்காட்சியும்
அந்த வீட்டிலிருந்து அப்பெண்ணிற்கு கிடைக்கிறது.
நாம் ஒரு படம் பார்த்துகொண்டிருக்கும் போதே, அட
யாருங்க இந்த இயக்குனர்னு தோணும்ல. அப்படி இவர் யாரென ஆராய்ந்ததில் Oriol Paulo. இவருடையதே
Invisible Guest, The Body, மற்றும் Juliyas Eyes படங்கள். வெவ்வேறு சூழல்களில்
இந்த படங்களை பார்த்து சிலாகித்து இருந்தாலும், தற்போது இந்த படங்களின் தனித்துவம்
மற்றும் ஒற்றுமைகளை ஒப்பிட்டு பார்க்க தோண்றுகிறது. இதில் இறுதி இரண்டு படங்களும்
இங்கு ரீமேக் செய்யபட்டு நல்ல வரவேற்பை பெற்றவையே. முதல் படம் தற்போதுவரை நிறைய
படங்கள் அல்லது சில காட்சிகள் இந்த படத்தின் பாதிப்பில் வெளிவந்துள்ளது.
இவரது படங்கள் மற்ற நல்ல த்ரில்லர் கதைகளை
போன்றே இருந்தாலும், அனைத்து கதைகளிலும் ஒரு
கூடுதல் சூவரசியத்தை காணமுடியும். The Body யில் தொலைந்து போன ஒரு பிரேதத்தை
தேடும் கதையில், அந்த பிரேதம் கிடைக்கவிடாமல் செய்யும் ஒரு கூடுதல் கதையும். Julias Eyes ல்
பார்வையற்ற ஒரு பெண்ணின் தற்கொலை வழக்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில். அதுகொலை
என விசாரிக்கதுவங்கும் இறந்தவளின் சகோதரி. அந்த கூடுதல் சுவாரசியம் இந்த பெண்ணும்
படிப்படியாக பார்வையை இழந்து வருபவள். அதாவது கொலையாளியை நெருங்க நெருங்க இவளின்
பார்வை திறனும் குறையதுவங்கும்.
Invisible Guest ல்
யாருமற்ற சாலையில் நிகழ்ந்த விபத்தை மறைக்கமுயலும் தம்பதியர். அந்த எக்ஸ்ட்ரா
சர்ப்ரைஸ் இறந்தவனின் தந்தை இந்த கதைக்குள் வருவது. அப்படியான கூடுதல் சுவாரசியம்
இந்த கதையிலும் உண்டு. 25 ஆண்டுகளுக்கு முன் இறந்த சிறுவனின் கேமரா &
தொலைக்காட்சியை கொண்டு அவனுக்கு நடந்த விபத்திலிருந்து அவனை காப்பற்றிவிடுகிறார்.
அடுத்த விடியலில் இருந்து அவனது வாழ்க்கை மற்றும் இறந்த அந்த பெண்மணி பற்றிய
கிளைக்கதை.