வாசித்ததில் வசீகரித்தவை - ௦௦2.
“குறள் கதைகள்”ங்கற தலைப்புல தினமும் ஒரு குரள் பத்தி
முகநூல்ல பதிவு வருதே கவனிச்சியானு?” நண்பர் ஒருவர் கேக்க. அதும் அவர் உனக்கு
MUTUAL FRIENDனு காட்டுதும் சொன்னார். கலைஞர்ல இருந்து பாப்பையா வரை பெரிய பெரிய
அறிஞர்கள் விளக்க உரைனு தனி புத்தகங்களே வெளியிட்டு இருக்காங்க.
அவங்களாம் சொல்லாத என்ன சூவாரசியத்த இவர் சொல்லி இருக்க போறார். அவர் யாருன்னு
தெரிஞ்சிக்கறத விட இதுதான் முதல்ல தோணின விஷயம். புத்தகம் வாசிப்பது மட்டும்தான்
அவரோட ஒரே பொழுதுபோக்கு, பிடிச்ச விஷயம் எல்லாமே. அப்படிப்பட்டவரே சொல்றாறேனு
ஆர்வமா பாத்தா அப்பத்தான் இவர் எழுத தொடங்கிய நேரம்.
முகநூல்ல நமக்கு பிடிச்ச துறைசார்ந்த பதிவிடறவங்கள நாம
விரும்பி நம்ம நட்பு பட்டியல்ல இணைத்து கொள்வோம் இல்லையா?. அப்படி ஆரம்பகாலத்திலே
இணைத்து கொண்டவரில் இவர் முக்கியமானவர். காரணம் இவர் ரசித்த சினிமா குறித்த
பதிவுகள். பின் இவரது BLOG அறிமுகம். அதிலுள்ள இவரது கதைகள் இவரின் மேல் பெரும் ஈர்ப்பை
ஏற்படுத்தியது. துரதிஷ்டவசமாக ஒருமுறை எங்களது சந்திப்பும் நிகழ்ந்தது தனிக்கதை.
நல்ல சிறுகதைகள் கிட்டத்தட்ட முப்பது கதைகளின் தொகுப்பு
இப்புத்தகம். அது நம்ம சிறுவர்மலரில் படிக்கும் நீதிகதைகளை போல நமக்கு அறிவுரை
மட்டுமே சொல்லாம. ஒரு நல்ல கதையாவும் இருந்ததுதான் இந்த பதிவுகள் புத்தகவடிவம் பெற
ரொம்ப முக்கிய காரணமா இருக்கும். அதும் இருவருக்கு இடையேயான உரையாடலாவே
பெரும்பாலான கதைகள் அமைஞ்சது நம்மாள ரொம்ப எளிமையா உள்வாங்கிக்கவும் முடிஞ்சது.
அந்த கதைகளை ரொம்ப சரியா அதோட முடிவுல ஒவ்வொரு
குறளுக்குள்ளயும் பொருத்தும் அந்த லாவகம் கண்டிப்பா வெறும் சிறந்த முகநூல்
பதிவர்கள் எல்லோருக்கும் கைகூடி வர விஷயம் இல்லைன்னு இதுல எந்த கதைய படிச்சாலும்
உங்களால உணரமுடியும். ரொம்ப எளிமையான உரையாடல் வடிவத்துல மட்டுமே இந்த கதைகள்
இருக்கறதால கண்டிப்பா ஒரு முறைல முழு புத்தகத்தையும் படிச்சு முடிச்சிட முடியும்.
வெறும் உரையாடல் வடிவ கதையா இருந்தாகூட அடுத்தடுத்த கதைகள்ள
முந்தின கதையோ. அந்த பாத்திரங்களின்
பாதிப்போ நம்மாள கண்டிப்பா உணரமுடியாது. அதிலும் சமகால அரசியல், சினிமா வரை தொட்டு
சென்றது உண்மையா இவரோட தனித்தன்மை. அதிலும் பலதரப்பட்ட மனிதர்களை கதையோட முதல்
வரியிலேயே பேச்சு வழக்குலையோ, குணாதிசியத்திலோ நமக்கு எந்த உறுத்தலும் இல்லாம
அவங்கள ஏத்துக்க வச்சிடறார். வெறும் நம்ம ஓய்வு நேரத்தை கழிக்க மட்டுமில்லாம
அர்த்தமா நாம மத்தவங்களுக்கு பரிந்துரைக்கும் புத்தகமாவும் இது கண்டிப்பா
இருக்கும்.
ஒரே அதிகாரம் சார்ந்த கதைகளே தொடர்ந்து வருவது
மட்டுமே சிறு குறை.
No comments:
Post a Comment