Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, August 12, 2019





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 148.


திரைப்படங்கள் பார்க்கும் போது பொதுவா எந்த இடையூறும் இல்லாமல் தனியறையில் இரவு நேரங்களில் பார்ப்பது வழக்கம். சில Crime, Horror வகையறா கதைகளில் சட்டென எனக்கு பின்புறமும் யாரோ நிற்ப்பது போலவும், அறையின் வாசலில் நின்று யாரோ கண்காணிப்பது போலவும்  துணுக்குற்று சட்டென பதறி அறையின்  விளக்குளை ஒளிர  செய்தும்பின் அனைத்து அறைகளின் விளக்குகளையும் சமையலரை வரை ஏற்றி தண்ணீர் குடித்து. பின் சிறிது நேரம் கழித்து அந்த படத்தை தொடர்வதும் நிகழும். அதிக பயத்தில் அந்த இரவில் சத்தமாக குரல்எழுப்புவதும் அவ்வப்போது நிகழும். ஆனால் ஒருபோதும் அந்த படத்தை தொடர்ந்து பார்ப்பது நிகழாமல் இருந்ததில்லை. போர்வையை ஒரு கண் மட்டும் தெரியும் அளவில் முழுக்க போர்த்தி கொண்டேனும் மீதி படத்தை பார்த்ததும் உண்டு. ஆனால்  முதல் முறை ஒரு படத்தை அந்த குறிப்பிட்ட காட்சிக்கு பின் பார்க்கும் சக்தியின்றி நிறுத்தியது இந்த படத்திற்கு மட்டுமே. இரண்டு நாட்களுக்கு பின் மீதம் கதையை பகலில் பார்த்த அதிசயம் நிகழ்ந்தது இந்த படத்திற்கு மட்டுமே.


இதே கதையம்சம் கொண்ட பல படங்கள் இதற்க்கு முன் பார்த்திருபோம். படத்தின் முழுகதையையும் ஒருவாறு யூகமும் செய்திருப்போம். இதும் அச்சு அசல் அதே கதைதான். வெறும் திரைக்கதை இல்லாமல் ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையை வெறும் வாய்ஸ் ஓவர்ல பாடம் எடுப்பதுபோல சொல்லாமல் கதையோட போக்கில் சொன்ன விதத்துலதான் பெரிய ஆச்சர்யத்த கொடுத்திருக்காங்க. நாயகி டாப்சீக்கு ஒரு முன்கதை  உண்டு. அதனாலதான் அவங்க இப்படி நடந்துக்கறாங்கனு மட்டும் நமக்கு தெரியும். ஆனா அந்த FLASHBACK என்னான்னு அதுக்கு தனியா ஒரு 30 நிமிசத்தை செலவுபண்ணி படத்தோட நீளத்தை அதிகபடுத்தாம. ரொம்ப சரியா ஒரு மணி நாப்பது நிமிசத்துல முழுபடமும் முடியுது.
ஆனாலும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே அவரின் முன்கதையை நமக்கு உணர வெச்ச விதத்திலேயே  Ashwin Saravanan தனித்துவமா தெரியறார். இதுக்கு முன்னால அவர் படம்மாயா வெச்சே பாத்தாகூட அது நமக்கு தெரியும். இருட்டுக்கு பயப்படும் ஒரு பாத்திரம். அதுக்கான சரியான காரணத்தோட, இயல்பு நிலைக்கு திரும்ப குடும்பத்தை விட்டு ஒரு வேலைக்கார பெண்மணியோட தனியா வாசிக்கறாங்க. இயல்புநிலைக்கு திரும்பறதுக்கு முன்னமே தற்கொலைக்கு முயற்சி பண்ணி ரெண்டு காலிலும் எலும்பு முறிவோட சக்கர நாற்காலில இருக்காங்க. என்ன ஏதுன்னு எந்த காரணமும் இல்லாம தனியாக வசிக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் பாத்திரம். அவனோட பார்வை இவங்க மேலவிழுது. இவங்க சந்திக்கும் புள்ளி சரியா பாதி படத்துல. அதும் அவங்க வீட்டுக்கு உள்ளே. மீதி கிட்டத்தட்ட நாற்பது நிமிச கதை அந்த வீட்டுக்கு உள்ளேயே.


இதே போல ஏற்கனவே குறிப்பிட்ட மாறி பலபடங்கள் இருக்கு. ஆனா அதெல்லாமும் விட சிறந்ததா இத நினைக்க காரணம். அந்த படங்கள் முழுக்கவே கொலைகாரன் நெறைய சித்ரவதை பண்ணி கொலை செய்பவனா இருக்கும். இல்லஇந்த கொலைகளை ரொம்ப கலைநயமா ரசிச்சு பண்றவனா இருக்கும். அதும் இல்லனா இவன் ஏன் இதுபோல மாறினானு நம்ம அவன்மேல பரிதாபடும்படியான முன்கதை சுருக்கம் இருக்கும். இது எதும் இல்லாம அவன பெரிய புத்திசாலியா மட்டும் காட்டியதில் தனிச்சு தெரியுது இந்த படம்அதும் அவனோட கொலையில் ஒன்னே ஒன்னு மட்டும்தான் அதும் Titlecard லயே வந்திடும். பெருசா ரொம்ப நேரம்லாம் எடுத்துக்காம சட்டுன்னு முடிச்சிடுவான். ஆனா, ரொம்ப அழுத்தமா அத மனசுல பதியவெச்சிடுவார் இயக்குனர். ஏன்னா அடுத்த கொலை கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு பின்னால நாயகிய கொல்ல வரும்போதுதான் அந்த பாத்திரமும் கதைக்குள்ள திரும்பவரும்.



ஆனாலும் ஆரம்ப சம்பவத்துல அவர்கொடுத்த அழுத்தம் நமக்கு அப்படியே இருக்கும். “மாயாமாறியே ஒரு அமானுஷ்ய கிளைகதையும் இந்த கதையோடவே பயணமாகும். ஆனா அந்த படம் அளவுக்கு இதுல முக்கியத்துவம் இருக்காது. அத ரொம்ப எளிமையா அவங்களோட Tatoo மூலமே நமக்கு புரியவெச்சிட்டாரு. இந்த  போல கதைகளுக்கு Sound Mixing, Editing & Camera எவ்ளோ முக்கியம் அப்படினு இந்த படத்துல ஒரு சாதாரண  பார்வையாளனும் அத Realize பண்ணிக்கற அளவு Technical பக்கம் அட்டகாசமா வொர்க் பண்ணிருக்காங்க. சின்ன சத்தங்கள் ஒரு சுமாரான திரையரங்கத்தில் பாக்கும் போதுகூட உணரும்படியா  இருந்தது. ரொம்ப பயங்கரமா ஆரமிக்கும் கதை எப்படியும் போக போக அந்த சுவாரசியம் எங்காவது தடையாகும். ஆனா கடைசிவரை அந்த திகிலோட மட்டுமில்லாம நெறைய சூவாரசியங்களோடவும் கொண்டு வந்து முடிச்சதில் ரொம்பவே கவனிக்கவெச்சிட்டார் Aswin Saravanan. சில இயக்குனர்களோட அடுத்த படம் எப்ப வரும்னு காத்திருப்போம்லஇனி அந்த பட்டியல்ல இவரோட பேரும் இருக்கும்.  

Search This Blog