பார்த்ததில் மிகவும் ரசித்தது: 144.
தன் கண்முன்னே அவனது தாய் கோரமாக கொல்லபடுகிறார். வேட்டையர்களில் ஒருவனால் இவனும் இவனது
சகோதரனும் உயிர் பிழைகின்றனர். நிராதரவாக அந்த அடர்ந்த வனத்தில் அவர்கள்
வளர்ந்துவரும் சூழலில், சில வருடங்களில் அவனது சகோதரனும் சில வேட்டையர்களால்
கொல்லப்படுகிறான். தனித்து விடப்பட்டவன் வெறிகொண்ட வேங்கையாக மாறி அந்த
வேட்டையர்களை எவ்வாறு பழிக்கு பழி வாங்கினான் என்பதே கதை. இதில் என்ன பெரிய
சுவாரசியம், இதேபோல் பல கதைகள் பார்த்தாயிற்றே என தோன்றுவோருக்கு. இக்கதையின் நாயகனே வேட்டையர்களை
காட்டிலும் அதிக தந்திரங்களை பயன்படுத்தி அவர்களிடமிருந்து தப்பித்து கொண்டிருக்கும்
அசல் புலி என்பதே.சுவாரசியம்.
1935-ல் தென்கொரியாவின் ராணுவத்தில் MAJOR போன்ற
உயர்பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவிகாலத்தில் எத்தனை புலிகளை வேட்டையாடி தங்கள்
அலுவகத்தில் அவற்றை பாடம் செய்து வைத்துள்ளார்கள். என்பதை கொண்டே அவர்களின்
மதிப்பு கணக்கில் எடுத்து கொள்ளபடுகிறது. எனவே தனக்கு முன்பிருந்தவர்களை
காட்டிலும் நமது காலத்தில் அதிக புலிகளை வேட்டையாட படவேண்டும் என்பதையே அங்கு
பதவிக்கு வரும் அனைத்து MAJOR GENERALகளின் விருப்பமாகவும் இருந்தது. எனவே அவர்கள்
புலிகளை வேட்டையாட அக்காடுகளில் உள்ள ஆதிவாசிகளில் சிலரை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது புதிதாக வந்த MAJOR வேட்டையை மேலும் கடுமையாக்குகிறார்.
முன்பிருந்தவர்கள் வேட்டையாடிய எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல். அந்த காட்டில்
உள்ள அனைத்து புலிகளையும் குட்டிகள் முதற்கொண்டு வேட்டையாட உத்தரவிடுகிறார்.
ஏற்கனவே புலிகளின் எண்ணிக்கை மிகசொற்ப்பமாக இருக்கும் சூழலில் இருக்கும்
சிலபுலிகளும் வேட்டையாடபடுகிறது ஒரு புலியை தவிர. வேட்டையர்களின் எந்த முயற்சியும்
பலன் அளிக்காத சூழலில். ராணுவ சிப்பாய்களுடன் இறுதி முயற்சியாக வேட்டைக்கு
செல்கின்றனர். இதற்க்கு முன் தாங்கள் பயிற்சி பெற்ற பல தங்கள் குரு CHUN MAN DUK
யை சந்திக்க செல்கின்றனர். அவருக்கும் அவரது 13 வயது மகனுக்கும் இடையேயான சிறு மனவேற்றுமையை
பயன்படுத்தி அவருக்கு தெரியாமலே அவனையும் வேட்டைக்கு அழைத்து செல்கிறான் தற்போதைய
வேட்டை குழுவின் தலைவன். அவர் இல்லாமல் பெரும் படையுடன் சென்றாலும் தங்களால்
அப்புலியை வேட்டையாட முடியாது என்பதை உணர்திருந்தான். அதனாலே அவர் தன்மகனை தேடி அங்கு
வருவார். அவரை வைத்து இந்த ஒற்றை புலியை வேட்டையாடிட திட்டமிடுகிறான்.
2.5 மணிநேர கதையில் மேலே குறிப்பிட்டது முதல் 3௦
நிமிட கதை மட்டுமே. இந்த முதல் 3௦ நிமிட கதை தெரிந்தே பார்த்தாலும் புலிகள் வேட்டையாடபடும் காட்சிகள் நமக்கு
திகிலூட்டும்படியே காட்சிபடுத்தி இருப்பர். அதிலும் அந்த குரு மற்றும் தற்போது
வேட்டையாடும் குழு அவர்களின் வேட்டைமுறையை கொண்டே இந்த இவர்களின் குணநலன்களை
மதிப்பிடும்படி. படத்தின் துவக்கத்திலே இவர்கள் வேட்டையாடும் முறை தனித்தனியே
காட்சிபடுத்தபட்டிருக்கும். மேலும் தன் காலம்முழுக்க பல புலிகளை வேட்டையாடிய குரு.
தன் மகனை கண்டிப்பாக அந்த ஒற்றை புலியை வேட்டையாட அனுமதிக்காததன் காரணம். வேட்டைக்கு
அவர்களுடன் சென்ற குரு மகனின் நிலை இந்த இரு இடங்களும் காட்சிகளாக விரியும்
பகுதியே இந்த மொத்த கதைக்கான பற்றுதல். அவை நமக்கு பெரும் பதைபதைப்பையும் மனதை
கூடுதல் இலகுவாக்கும் இடங்கள்.
கதைக்கு முக்கிய பாத்திரம் அந்த ஒற்றை புலி. கதையில்
முதல் இருபுலியை வேட்டையாடிய பின்னே இந்த புலியை பற்றிய பேச்சு துவங்கும். அதிலும்
அதன் இடது கண் கிடையாது என்ற தகவலுடன். அதிலிருந்து படம் முழுக்க இந்த ஒற்றை
புலியை வேட்டையாடுதல் என்பதை நோக்கியே கதை செல்லும். ஆனால் முழுதாக இதன் உருவம்
திரையில் காண்பிக்கப்படும் இடம் கிட்டத்தட்ட 75% படத்திற்கு பின்னே. அதுவரை அந்த
புலி காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் நாமும் அந்த காட்டில் மாட்டிகொண்ட
திகிலிலேயே இருக்கும். இது கிட்டத்தட்ட நம் விருப்ப நாயகர்களை திரையில் கண்டதும்
ரசிகனுக்குக்கு ஏற்படும் பரவசநிலையை. ஒவ்வொரு முறை அப்புலியை திரையில் பார்க்கும்
நமக்கும் ஏற்படும்படி அதன் இடபக்க முகம் சரியாக காட்டபடாமலே காட்சிபடுத்தபட்டிருக்கும்.
Trailer Link:
https://www.youtube.com/watch?v=uTYTKLVKXgc
No comments:
Post a Comment