பார்த்ததில் மிகவும் ரசித்தது: 138.
காட்சி: ௦3
ஒரு ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்களை மீட்டுவரும்
இருவிமானிகள். சீனியர் பைலட் எடை குறைந்த CARGO விமானத்தில் அதிக பயணிகளுடனும்.
எடை அதிகம் கொண்ட பயணிகள் விமானத்தில் சில பயணிகளுடனும் பறந்து செல்கின்றனர்.
பயணிகளை மீட்டுவரும் வரும் அவசரத்தில் அந்த விமானத்தை எந்தவித பரிசோதனைகளும்
இல்லாமல் கொண்டு வந்ததால் தாமதமாகவே அந்த CARGO விமானத்தில் எரிபொருள் குறைவாக
உள்ளது தெரியவருகிறது. அதும் அடுத்த சில நிமிடங்களுக்கு மட்டுமே விமானம் இயங்கும்
என தெரியவருகிறது. உடன் விமானி கட்டுபாட்டு அறைக்கு தகவல் தருகிறார். இந்த குறுகிய
நேரத்தில் மாற்றுவிமானமோ அல்லது அருகில் வேறு விமான நிலையங்களோ இல்லாததால்
செய்வதறியாது திகைகின்றனர்.
பின்னால் குறைவான பயணிகளுடன் வரும் விமானத்தின்
பயணியொருவரின் யோசனைபடி இருவிமானத்தையும் முடிந்தளவு குறைவான உயரத்திற்கு கொண்டு
சென்று அதில் உள்ள பயணிகளை இந்த விமானத்திற்கு மாற்றும் யோசனையே இந்த குறுகிய
நேரத்திற்கு உகந்ததாக எற்றுகொள்ளபடுகிறது. சரி எவ்வாறு அந்த விமானத்தில் இருந்து
இந்த விமானத்திற்க்கு கிட்டத்தட்ட 3௦௦௦ அடி உயரத்தில் பயணிகளை மாற்றுவது. சாலையில்
பழுதடைந்து நிற்கும் கார்களை “டோவ்” செய்து SERVICE CENTRE க்கு கொண்டுவரும்
முறையில் கார்கோ விமானத்தில் சரக்குகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பினால்
ஆன கயிற்றை கொண்டு முதலில் இருவிமானங்களையும் இணைக்கின்றனர். பின் டன் கணக்கில்
விமானங்களில் ஏற்றபடும் சரக்குகளை வைக்க ராட்சஷ வடிவிலான பெரிய அளவு மீன்பிடி
வலைகளை போன்ற பைகளில் 15-2௦ பயணிகள் வரை ஏறி இதிலிருந்து அந்த விமானத்திற்கு
மாற்றப்பட்டு கூடுமானவரை அனைவரும் காப்பாற்றபடுகின்றனர். கிட்டத்தட்ட முழு படமும்
முடிவுற்றதாக நினைக்கும் வினாடியில்தான் பயணிகள் விமான விமானிக்கு வேறொரு விஷயம்
நினைவுக்கு வருகிறது. அதாவது இந்த விமானத்தின் பின்புறம் உள்ள இரு சக்கரங்களில்
ஒன்று பழுதடைந்து உள்ளதும். தன்னிடம் அதிக பயணிகள் இல்லாததால் சமாளித்து
இறக்கிவிடலாம் என்று இருந்ததும். தற்போது அந்த விமானத்தின் மொத்த பயணிகளும்
இதற்க்கு வந்ததால் தரையிறக்கும் பொழுது கண்டிப்பாக இந்த விமானம் வெடித்து சிதறும்
நிலையை உணருகிறார். சரி இந்த புதிய பயணிகள் விமானத்தின் சக்கரங்கள் பழுதடைய
காரணமென்ன?..
காட்சி: ௦2
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய நகரத்தின்
விமானநிலையத்திற்கு செல்ல இந்த இரு விமானிகளும் பணிக்கபடுகின்றனர். அங்கு விமான
நிலையத்தில் தஞ்சம் புகுந்த மக்களை மீட்டுவர செல்கின்றனர். இப்பொழுது நம்
கற்பனையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த சிறு நகரமோ அல்லது சேதமடைந்த விமான
நிலையத்தையோ எந்த அளவில் கற்பனை செய்து வைத்து இருந்தாலும் இவர்கள் காட்சிகளில்
நிச்சயம் நம்மை ஆச்சர்யபடுத்தி விடுகின்றனர். பூகம்பத்தால் அவர்களே அறியாவண்ணம் பல
வருடங்களாக உறங்கிகிடந்த எரிமலை வெடிக்க ஆயுத்தமாக சாம்பலை காற்றில்
கசியவிடுகிறது. மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட அந்த விமானநிலையம் ஏற்கனவே
பூகம்பத்தால் சிதிலம் அடைந்து. மின்கசிவால் அங்குள்ள எரிபொருட்கள் அந்த பகுதியே
விழுங்கும் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க. இந்த விமானிகள் இருவரும்
மற்றுமொரு பெண் விமானியுடன் அங்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் அந்த மக்களை பார்த்ததும் உடனடியாக
அவர்களை மீட்டு செல்ல அனைவரும் ஆயுத்தமாகும் நிலையில் அந்த மக்களில் பாதிஅளவு
ஆட்கள் இந்த மலையின் பின்புறம் வாகன வசதிஇல்லாமல் தவித்து வருவதாகவும். இங்குள்ள ஏதேனும்
வாகனத்தில் சென்றால் உடனடியாக மீட்டு வரலாம் என பயணிகள் கூறுகின்றனர். CAPTAIN
சம்மதத்துடன் அவர்களை மீட்க மற்றுமோர் விமானி செல்கிறார். சேதமடைந்த இந்த
ஓடுதளத்தில் நிச்சயம் இந்த விமானத்தை TAKEOFF செய்ய இயலாது என CAPTAIN
கவலைகொள்ளும் நிலையில். அங்கு குறைவான எடை கொண்ட MINI CARGO விமானம் கண்ணில்படுகிறது.
இந்த ஓடுதளத்தில் இந்த விமானத்தால் மட்டுமே TAKEOFF செய்வது சாத்தியம் என்பதால்
அதை தயார் செய்கிறார். மக்களை மீட்டு வர சென்ற விமானியும் குறிப்பிட்ட
நேரத்திற்குள் திரும்பாததால் இந்த விமானத்தில் கிளம்புகிறார். அங்கு பயணிகளை
மீட்கயில் சரியாக எரிமலையும் நெருப்பு குழம்பை கக்க. நெருப்பு ஊற்றில் இருந்து
கிளம்பிய நீராக மலையில் இருந்து வழிய துவங்குகிறது. அந்த மலைபாதையில் கண்முன்னே
நெருப்பு இரையை விழுங்கிய பாம்பை போல மிகநிதானமாக வழியதுவங்குகிறது. இருக்கும் ஒரு
பாதையிலும் எரிமலை குழம்பு குறுக்கிட்டதால். வாகனத்தில் இருந்து நடைபயணமாக
அம்மக்களை அழைத்துகொண்டு விமானநிலையம் விரைகிறார்.
அங்கு அவர்களின் விமானம் தவிர்த்து அனைத்தும் எரிந்து
கொண்டிருக்க தன் சக விமானி மற்றும் அங்கிருந்த மக்களும் இல்லாததை கண்டு அதிர்கிறார்.
தற்பொழுது மூன்று பக்கமிருந்தும் எரிமலை குழம்பு மேலும் ஓடுதளத்தை
சேதபடுத்திகொண்டே இருக்க. குறைவான பயணிகள் என்பதாலும் உயிரை காத்துகொள்ள இந்த
நெருப்பு குழம்பின் வழியே ஓடுதளத்தை கடந்து பறக்கிறார். விமானம் TAKEOFF ஆனதும்
மூன்று சக்கரங்களும் தானாக விமானத்தின் உள்செல்லும். மீண்டும் தரைஇறங்கும் பொழுது
மட்டுமே வெளிவரும். இதில் நெருப்பில் சேதம்அடைந்ததால் வேலை செய்யாத ஒரு
சக்கரத்துடனும். தன்னால் காப்பாற்றப்பட்ட பயணிகளுடனும். இந்த சேதம்அடைந்த
ஓடுதளத்திலும் வெற்றிகரமாக விமானத்தை TAKEOFF செய்த மகிழ்வில் பறக்கிறார்.
மேற்கூறிய அனைத்தும் காட்சிவடிவில் நம்மை மேலும் ஆச்சர்யபடுத்தும்.
அதும் பயணிகளை விமானம் டூ விமானம் மாற்றும் கட்சிகள். பயணிகளை மீட்டுவருகையில்
அந்த வாகனத்தின் சாகசமும். அவ்வாகனத்தின் முகப்புகண்ணாடியில் வெடித்து கிளம்பும்
எரிமலையை காட்டபடுவதும். அந்த விமானநிலைய செட் மற்றும் விமானம், ஓடுதளம், கேப்டன்
அவரின் அதிகாரம் குறித்த பல தகவல்களும் நம்மை மென்மேலும் ஆச்சர்யபடுத்துபவை. இந்த
இரு காட்சிகள் மட்டுமின்றி காட்சி:௦1ல் இந்த இரு விமானிகளுடன் வந்த
பெண்விமானிக்கும் இவனுக்குமான குட்டி லவ். மற்றும் இரு விமானிகளின் முன்கதை
சுருக்கமும் நம்மை அசதிஆக்காது. ரொம்ப ஆர்வமா விரும்பி அனைவரும் பாக்கலாம்.
ADVENTURE, ACTION விரும்பிகளுக்கு SPECIAL TREAT இந்த ரஷ்யன் படம்.
TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=vTzlfO_zKsQ
No comments:
Post a Comment