பார்த்ததில் மிகவும் ரசித்தது: 134.
9௦ களில் GULF நாடுகளை நோக்கி படையெடுக்கும் கலாசாரம்
துவங்கிய காலகட்டமே இப்படத்திற்கான களம். கணவன் பிழைப்பிற்கு வெளிநாடு செல்ல, மும்பையில்
பெரும் இரைச்சல்களுக்கிடையே வெறும் தனிமையை மட்டுமே துணையாக கொண்டு வாழும் நடுத்தர
வர்க்கத்தை சேர்ந்த பெண். தன் ஆடைகளை தைய்க்கும் தையல்கார இளைஞன் மீது ஏற்படும்
ஈர்ப்பையும் தாண்டிய ஒரு உணர்வு. தன்னில் வயதிலும் தோற்றத்திலும் சற்று மூத்தவள். அதற்க்கான
இடைவெளியுடனும் படத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் வெறும் சம்பாசனைகள் இறுதிவரை
வெறும் சம்பாசனைகளாகவே இருந்தும், இவர்கள் ஒரு முழு காதல் கதையின் அனைத்து உணர்வுகளையும்
நம்முள் கடத்தியது எப்படி??..
வெறும் தனக்கான ஆடையை தைக்கும் விதம் குறித்த
பேச்சில் துவங்குகிறது இக்கதை. தனது வாடிக்கையாளர் மற்றும் நம் பகுதியில்
வசிக்கும் குடும்பத்தாருடன் பழக்கமான பெண். இந்த அளவுகோலிலே அவனது பேச்சும் இதனில்
அவளது சிறு தடுமாற்ற பார்வைகளும், சிறு தினரல்களுடன் அவளது பேச்சும் முதல்
நிமிடத்திலே துவங்கிவிட. அவனது பேச்சிலும் அந்த தடுமாற்றம் தொற்றி கொள்கிறது. பின்
அவளது நடுக்கத்திற்கு இடையே அரைகுறை புரிதலுடன் தேனீர் அருந்த சம்மதிக்கிறான். தேநீர்
தயாரிப்பிற்காக அவள் உள்ளே செல்ல அவள் அருகமையில் இருந்து விடுபட்டு தன்னை அந்த சில
நிமிடங்களில் ஆசுவாசபடுத்தி கொண்டவனின் அதன் பின்னான பேச்சில் துளியும் நடுக்கமோ,
தயக்கமோ இருக்காது.
தேநீரையும் ரசித்து குடித்தவன். தனது சகோதரன் அடுத்த
வாரங்களில் RIYADH செல்லவிருப்பதால் தங்கள் கணவருக்கு ஏதேனும் கொடுத்து
அனுப்புமாறும் தெரிவித்து விட்டு நகர்கிறான். அவனுக்கு பின்னே சென்று கதவடைத்தவள்.
மீண்டும் தன் தனிமை உலகத்திற்குள் நுழைகிறாள். தனது தடுமாற்றத்தை அவன் கண்கூடாக கண்டுகொண்டதை
உணர்கிறாள். எப்பொழுதும் சற்று வேகமாக எந்த பணியையும் செய்பவள். சிறு குழந்தையை
குளிப்பாட்டுவது போல அவன் தேநீர் அருந்திய கோப்பையை சுத்தம் செய்கிறாள். தன்
நிலையை தினமும் நடுநிசி வரை ஓயாமல் கேட்கும் இரைச்சல் இடையே நினைத்தபடியே தனது
தொழுகையை துவக்குகிறாள். பின்னணியில் மெலிதாக துவங்கும் வயலின் அவளின் தொழுகை நிறைவடையும்
பொழுதில், நம் மனம் முழுக்க அதனுள் லயிக்கும் நொடியில் அவளின் விசும்பல் பெரும்
அழுகையாக மாற நாம் அந்த பின்னணி வயலினை நிறுத்தி அவளை எப்படியேனும் காத்திட இயலாதா
என எண்ணவைக்கும். நம்மை லயிக்க செய்த அந்த இசை. நமக்கு இது நாம் வேறுவிதமாக நாம்
கணித்த கதையல்ல என்பதை ஆணித்தரமாக கூறி செல்லும்.
தன் கணவனுக்கானதை வாங்க கடைவீதிக்கு செல்பவள். அவன்
தன்னை பின் தொடர்வதை உறுதிபடுத்தி கொண்டு பதறி மீண்டும் கூடடைகிறாள். பின்னும்
அவன் பின்னே தொடர்கிறானா எனும் எதிர்பார்ப்பும், தன் நினைப்பை அவன் அறிந்திட
நேருமோ என்ற தயக்கமும். மிக மெலிதாக நம் நிலையை அவன் உணர்ந்திட மாட்டானா என்றும் எதிர்பார்கிறாள்..
தான் அவளை பின்தொடர்ந்ததும், தன்னை அவள் கண்டுகொண்டதையும் உணர்ந்தவன். அவனுக்கான
அடுத்த சந்திப்பிற்கு ஆயத்தமாகிறான். ஆம் அவளுக்காக ஆடையை மிக நேர்த்தியாக அப்பொழுதே
தைய்க்க துவங்குகிறான். ஒரு வாரத்திற்குள் கொடுக்க வேண்டிய ஆடையை ஒரே இரவில்
முடித்து அடுத்த நாள் விடியலில் அவளுக்கான காலை சிற்றுண்டியுடனும் ஆடையுடனும் அவளை
சந்திக்க இருக்கிறான். இந்த யோசனை ஏதுமின்றி அவள் அந்த இரவிலே கரைந்திருக்கிறாள்.
இது இப்படத்தின் முதல் பத்து நிமிடத்திற்கான காட்சி மட்டுமே.
முழுக்க இந்த இரு கதாபாத்திரங்களும், அந்த இரைச்சலான பம்பாய்
நகர வீதியும். இவர்களுடனே நம்மை பிடித்து வைத்திருக்கும் வயலின் மற்றும்
புல்லாங்குழலின் பிண்ணனியும். எந்த காதல் ரசம் பூசிய பாசாங்கில்லாத வெறும்
உரையாடல்கள் மட்டுமே. அதன் வழியே அவர்களின் எண்ண ஓட்டங்களை உணர்வுகளாக்கி நமக்கும்
கடத்தியது என சராசரியாக நாம் பார்த்த, ரசித்த கதைகளில் உணர்ந்த பல... இப்படத்தில்.
அதில் விசேஷம் அவற்றை எந்த அலங்காரங்களும் அழகிய நாயகிகள் அறிந்த முகங்கள் என
எதுமில்ல ஏதோ நாடக ஒத்திகை போன்ற இப்படத்தில் உணர்செய்தது ஒன்றே இப்படத்தை ரசிக்க
போதுமானதாகும்.
TANUJA CHANDRA இயக்குனர். DIL TO PAGAL HAI
படத்திக்கு திரைக்கதை இவர்தான். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படம். ஆனால் அதை
உணர செய்யாத முழு காதல் படம் பார்த்த உணர்வை கொடுக்கும் .