Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, October 12, 2017





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 119.

JULIAS EYES (2010) – உணர்தலின் மகத்துவம்

ஒரு சூத்திரமோ அல்லது ஒரு நிகழ்வோ அதை காண்பதற்கும், உணர்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. அப்படியான ஒரு சம்பவம் இக்கதையிலும் நடக்கிறது. அனைவரும் அதை கண்டு செல்கையில், அவள் மட்டும் புலம்பி தவிக்கிறாள். மன்றாடுகிறாள். இறுதியில் அவளையும் மதி அதேபோன்ற ஒரு சம்பவத்தை இவளை கொண்டே நிகழ்த்த விளைகிறது.


இரட்டை சகோதிரிகளில் ஒருவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அவளின் இறப்பிற்கு காரணம் ஏதும் இல்லை. அவளது பார்வை குறைபாடே அவளை இந்த நிலைக்கு கொண்டுவந்ததாக மற்றொரு சகோதிரியின் கணவனே விளக்கம்கொடுக்க, போலீஸ் வழக்கை நிறைவுற்றதாக முடிக்க விளைகிறது. ஆனால் மற்றொரு சகோதரி நிச்சயம் இது தற்கொலை அல்ல கொலை என மன்றாடுகிறார். ஆனால் இதை கொலை என கூற திடமான எந்த கூற்றும் அல்லது சுட்டிகாட்ட எந்த நபரும் அவள் வசம் இல்லை. ஆனால் அவளால் விளக்கி சொல்ல முடியாத யாரையும் குறிப்பிட்டு சொல்லவும் இயலாத சில விசயங்களை உணர்கிறாள். உடனே கதையின் தலைப்பை வைத்து இவள் கண்களுக்கு அவள் சகோதரிக்கு இறுதி நாட்களில் நிகழ்ந்த விஷயங்கள் தெரிவதாக கணக்கிட வேண்டாம். படத்தின் துவக்க காட்சியிலே நமக்கும் அவள் (தற்)கொலைக்கு காரணம் மற்றொரு நபர் என்றும் மேலும் இது பேய் கதை அல்ல என்றும் விளக்கமாக காட்டப்பட்டு விடுகிறது.


இப்படியான ஒரு கதை. இதுபோன்ற திடமான அறிமுக காட்சி ஒன்றே போதும் இப்படத்தை தாங்கள் இறுதிவரை தொடர்ந்து ரசிக்க. வழக்கமான ஒரு திர்ல்லர் அல்ல ஒரு ஒரு முடிச்சாக அவிழ்த்து இறுதில் கொலைகாரனை நெருங்க. அவளால் தன் சகோதிரியின் இறப்பிற்கு காரணமானவனை பலமான எந்த நிகழ்வுகளை சுட்டிகாட்டியும் கூறஇயலாத வகையில் காட்சிகள் வேண்டும். அக்காட்சிகள் மிக லேசாக பட்டும் படாமல் இருந்தாலும் பார்வையாளனுக்கு சலிப்பை ஏற்ப்படுத்தும். பலமாக இருந்தால் பின் இவளால் ஏன் இந்த நிகழ்வை விளக்க இயலவில்லை அல்லது அந்த நபரை ஏன் சுட்டிகாட்டவில்லை என்ற கேள்வி நம்மையும் நிச்சயம் கேட்க்க வைக்கும்.


பின் எப்படி காட்சிகள் வைத்துதான் இக்கதையை நகர்த்துவது?. அதற்கான விடையை துவக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சி ஏன் ஒவ்வொரு ஷாட்டிலும் வைத்து. மொத்த பார்வையாளனும் இருக்கையின் நுனியில் அமர்ந்தே முழுக்கதையையும் இறுதி நிமிடம் வரை நகர்த்தி ரசிக்கும் வண்ணம் கொண்டு செல்கின்றனர். உதாரணமாக இறந்த சகோதரி செல்லும் உணவகத்திற்கு செல்லும் கிட்டதட்ட ஒரே உருவம் உள்ள இவளுக்கு பேரர் மூலம் அவள் கடைசி முறை வந்தபொழுது கண்களில் கட்டுடன் வந்ததாகவும். அறுவைசிகிச்சை நடந்துள்ளதாகவும் அறிகிறாள். அறுவை சிகிச்சை மேற்கொண்டவள் பார்வை வரும் வேலையில் எதற்காக தற்கொலைக்கு முயலவேண்டும். அது கொலையே என வாதிக்க துவங்கயிலே அவள் கணவன் அவள் அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததாகவும், அதனாலே அவள் தற்கொலை செய்ததாக தெரிவிக்க. தங்களுக்கு இந்த விஷயங்கள் எவ்வாறு தெரியும் என கேட்க அவள் நினைக்கும் வேளையிலே. நேற்று அவள் மருத்துவரிடம் தான் பேசியதாகவும் தெரிவிக்கிறார்.


அன்றே ஒரு வயதானவர் இவளை சந்திக்க வருகிறார். தான் அந்த உணவகத்தில் பணிபுரிவதாகவும். உங்கள் சகோதரி தனியாக அங்கு வந்து தங்கவில்லை, உடன் ஒருவன் இருந்தான் எனவும் தாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்துகிறார். குழப்பமான அவள் பார்வைக்கு பதில் அளிப்பவர். அவன் பார்வையில் மிகுந்த குரோதம் இருந்தது. அவன் இயல்பிலே இல்லை. தங்கள் சகோதரிக்கு எந்த அசம்பாவிதம் நடந்திருந்தாலும், நிச்சயம் அவனது பங்கு சிறிதேனும் இல்லாமல் இருக்காது என்கிறார். முதல்முறை தனக்கு சற்று பலமான சாட்சியே கிடைத்த சந்தோசத்தில் தன் கணவனை CCTV புட்டேஜ் பார்க்கலாம் எனக்காக இறுதி முயற்சி. இதில் பலன் இல்லையேல் நான் மீண்டும் இந்த விசயத்தில் அக்கறை காட்டமாட்டேன் என்ற உறுதிஅளிக்க. புட்டேஜ் பார்க்க செல்லும் கணவன் மாயமாகிறான். அவனை தேடி செல்லும் பெண் மற்றும் செக்யூரிட்டி கண்முன்னே புட்டேஜ் HARDDISK மாயமாகிறது. கதை உச்சம் பெரும் வேலையில் ஹோட்டலுக்கு போலீஸ் விரைகிறது.


தன் சகோதரியுடன் ஒருவன் வந்ததற்கான கண்ணால் கண்ட சாட்சியே உள்ளதென அந்த வயதானவரை காட்ட அழைத்து செல்கிறாள். அங்கே??
இது போல எந்த படத்தின் காட்சியையும் விவரித்ததில்லை காரணம் இனி இப்படத்தை பார்ப்பவர்களின் சுவாரசியம் குறையக்கூடாது என்பதால். இக்காட்சியை விவரிக்க உண்மை காரணம். பலமான நிகழ்வுகள் இல்லாததால் எவ்வாறு தன் சகோதிரியின் கொலையை அவளால் நிரூபிக்க இயலவில்லையோ. அதேபோன்றே  நானும் உணர்ந்தே இறுதிவரை வந்ததால் அதை எந்த வழியிலும் விவரிக்க இயலவில்லை. மேற்கூறிய காட்சி சும்மா ஒரு 1௦ நிமிடம் நடுவுல வரும். இது எந்த வகையிலும் உங்களுக்கு இப்படத்தின் மீது ஆர்வகுறைவை ஏற்படுத்தாது.
விளக்கப்பட்டது ஒரு ரெண்டு சதவிகிதம் என வேண்டுமானால் வைத்துகொள்ளலாம். 

இக்கதையை மேலும் சுவாரசியமாக்க ஒரு சிறிய தகவல் தற்கொலை செய்து கொண்ட பெண் முழு பார்வை பறிபோனவள். இவளது கொலைக்கான காரணம் தேடி செல்லும் அவளது சகோதரி பார்வை குறைபாட்டில் உள்ளாள். சிறிது சிறிதாக குறைந்து கூடிய விரைவில் முழுதாக பறிபோக உள்ளாள். அடுக்கடுக்காக எளிதில் யூகிக்கவியலாத பல அடுக்குகளின் கோர்வை இப்படம்.


               
                 கண்தானம் செய்வோம் – நன்றி.

Search This Blog