பார்த்ததில் மிகவும் ரசித்தது: 143.
அக்கால மன்னர்கள் முதல் இக்கால அரசியல்தலைவர்கள் வரை
பலவகையான அதிகார பிரயோகங்களை மக்கள் மீது செலுத்தியே வந்துள்ளனர். மன்னர்கள்
மற்றும் ஜமீன்தார்கள் காலங்களில் அந்த அடக்குமுறைகள் மிக அதிகமாக பிரயோகிக்கபட்டதாகவும்.
தற்போது அரசியல் தலைவர்கள் காலங்களில் அவை ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்லது
அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் ஒரு சிலரின் மீது மட்டும் ஏவப்படுவதாக உணர்கிறோம்.
ஆனால் அக்காலம் முதல் தற்போது வரை இந்த அதிகார நபர்களிடம் பணிபுரியும் அதிகாரிகள்
பற்றியோ அவர்களின் நிலை குறித்தோ பெரிதாக சிந்தித்ததில்லை. அவர்களை குறிப்பிட்டு
சொல்ல காரணம் அவர்களும் நம்மில் ஒருவர்களே.
எந்த அரசு அதிகாரியும் அதிகாரம் படைத்த அன்றைய மன்னர்களுடனோ
இன்றைய அரசியல்வாதிகளுடனோவோ இருந்துவிடுவதில்லை. அவர்களும் அவர்களது குடும்பங்களும்
நம்முடனேதான் உள்ளது. சினிமாக்களில் கூட இவர்களையும் அந்த அதிகாரம் பொருந்தியவர்களுக்கு
இணையாகவே தான் பார்த்து வந்துள்ளோம். முதல்முறை போலீஸ் அதிகாரிகள் அந்த அதிகாரம்
படைத்தவர்களுக்கு வேறுவழியின்றி சமரசமாக, பாதிக்கபடும் மக்களுக்காக வருந்தும்
சூழலையும். அவர்களும் நம்மை போல் குடும்ப சிக்கல்களால் பெரும் மனஉளைசலில் .தம்
பணியில் கடமை தவறுவதையும் இந்த படத்தைவிட இந்த நுணுக்கத்தில் வேறு படங்களில்
பார்த்ததாக நினைவில்லை.
சோனி எனும் காவல்துறையின் கடைநிலை
பாத்திரம் ஒன்றும். அவரின் INSPECTOR கல்பனா இந்த இருவரின் அக மற்றும் புற எண்ண ஓட்டங்களே
இந்த படம். அதிகாரத்தால் தம் கடமையை கூட நிறைவேற்ற முடியாத சோனியும். அவளை அதிகாரத்தால்
இழக்க விரும்பாத கல்பனா பாத்திரங்களும் நமக்கு காவல்துறையினர் மீது மதிப்பை
ஏற்படுத்துவதை விட அவர்களின் மேல் பெரும் அனுதாபம் கொள்ள செய்கிறது. குறிப்பாக
இந்த இரண்டு முக்கிய பாத்திரங்களையும் பெண்களாக தேர்வு செய்ததும். அவர்களின்
குடும்ப சூழலில் அவர்களே அனைத்து பணியும் செய்து. வயதானவர்களுக்கு பணிவிடை செய்து.
குழந்தைகளை மேய்க்கும் எந்த சினிமாதன காட்சி அமைப்புகளும் இதில்இல்லை. குறிப்பாக
இந்த இரு பெண் பாத்திரங்களுக்கும் குழந்தைகள்கூட கிடையாது.
அதில் மிக குறிப்பாக இன்ஸ்பெக்டர்
கல்பனா. அவரின் கணவர் அதே துறையில் இவருக்கு உயரதிகாரியாக இருப்பார். தெரியாம ஒரே
ஒரு சீன்ல கூட இவர்களுக்குள்ளான தாம்பத்தியம் குடும்ப விஷயங்கள் மற்றும் தங்களது
எதிர்காலம் குறித்த எந்த சம்பாசனைகளுமே இருக்காது. ஒரு காட்சியில் அவர் மனைவியிடம்
கூறுவார். உன்கூட வேலை பார்க்கும் யாரிடமும் அட்டாச்மென்ட்டா இருக்காதேனு. அதை அவர்
சொன்ன இடமும். எந்த சூழல்ல இந்த கதைல அந்த காட்சிவரும்னு பார்த்தா அதுதான் இந்த
மொத்த படமும்.
முதல் காட்சியில் அந்த சோனி
மற்றும் இவரும் பணிமுடிந்து தங்கள் இல்லங்களுக்கு திரும்புகின்றனர். வீட்டின்
உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் கல்பனா பாத்திரம் அதுவரை பணியில் ஏற்பட்ட
குழப்பங்கள் மற்றும் முழு இரவுபணி முடிந்து வரும் சோர்வில் இருப்பவர். உள்ளே தனது
கணவனின் குரல் கேட்டதும். அந்த முகத்தில் சிறிதாக அரும்பிய அந்த நாண புன்னகையுடனே
உள்ளே நுழைவார். தொலைபேசியில் யாருடனோ பேசியவாறே அவர் இவர்பக்கம் திரும்பி ஒரு
சிறு புன்னகையை உதிர்த்ததும். அதுவரை இருந்த அந்த சிறு புன்னகையும் பெருவெளிச்சமாக
மாறி ஷோபாவில் அமர்ந்து தனது சூவை கழட்டியபடியே வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம்
சமையல் குறித்து பேசிகொண்டிருப்பார்.
ஆனால் அவர் பார்வை அவர் மீதிருந்து திரும்பாது. அதற்க்கு பின்னான சில வினாடி
காட்சிகள். இந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான காட்சியிலே இவரது குணாதிசியத்தை
தெரியபடுத்தி இருப்பர்.
இதைக்கொண்டே இவர் சோனியை எவ்வாறு
கையாளுவார். இவர்களுக்கிடையேயான குழப்பங்களுக்கு இதுதான் தீர்வாக இருக்கும் என்பதை
நம்மால் ரொம்ப சரியாக தீர்மானிக்க இயலும்.
படத்தின் தலைப்பே SONI தானே அதை
விடுத்து இந்த பெண்ணின் பாத்திரத்தை பற்றியே முழுக்க சொல்வதற்கு காரணம். வெறும்
இந்த பாத்திர அறிமுகம் மட்டுமல்ல. முக்கிய பாத்திரத்துடன் பயணிக்க போகும் இவருக்கே
இந்த DETAILING இருக்கும்போது. கதையின் முக்கிய பாத்திரத்திற்கான DETAILING எந்த
அளவில் இருக்கும் என்பதற்கே. வெறும் படமாக பார்க்கவும் எந்த தோய்வும் இல்லாமல்
உங்களை கூட்டி செல்லும். கூர்ந்து கவனிப்போருக்கு பாத்திரத்தன்மை முதல் அவர்கள்
உறவுகளை எளிதில் எவ்வாறு கையாள்கிறார்கள் வரை உங்களை அதிசியிக்க வைக்கும் சினிமா.
TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=ySTPKPTBE-o