WEB SERIES – 009.
HIGH (2020) – TAMIL DUB - SEASON 01 –
EPISODES 09 – விறுவிறுப்பு
ராஜேஷ்குமார் நாவல்களில் முதல் அத்தியாயம் ஒரு
கதையும், அதற்கு துளியும் சம்பந்தம் இல்லாத மற்றுமொரு கதை என அடுத்தடுத்த அத்தியாயங்கள்
வரும். இறுதி அல்லது அதற்கு முந்தைய அத்தியாயங்களில் இந்த இருவேறு கதைகளும் சேரும்.
இந்த வகை திரைக்கதைகள் கொண்ட படங்களோ, நெடுந்தொடரோ கூடுதல் சூவாரசியங்கள் கொண்டவை.
காரணம், இந்த இருவேறு கதைகளும் எந்த வகையில் சேரும் என்பதை அந்தந்த பாத்திரங்களை
கொண்டு கதையின் துவக்கத்தில் இருந்தே கணிக்க துவங்கிவிடுவோம். அதுவே அந்த கதையின்
மீது நமக்கு கூடுதல் ஈடுபாடு ஏற்பட முக்கிய காரணமாகிறது.
இந்த கதையும் அந்த வகையான திரைக்கதையை கொண்டதே. ஒவ்வொரு
அத்தியாத்தின் துவக்கத்திலும் 1970களில் காடுகளில் எதையோ தேடி அலையும் மருத்துவ
நண்பர்களின் கதையும், அதற்கு எந்த
சம்பந்தமும் இல்லாத இன்றைய மும்பையின் போதை மாஃபியா பற்றிய கதையும் வருகிறது. முதல்
இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் அந்த பழைய கதையும், அதற்கு பின்னே டைட்டில்
கார்ட் மற்றும் இன்றைய கதையும். முதல் இரண்டு அத்தியாயங்களிலே இந்த இருவேறு
கதைகளும் சம்பந்தபடும் முடிச்சு புலனாகிவிடுகிறது.
ஆனால், அந்த மைய
முடிச்சின் மர்மத்தின் பின்னே உள்ள கிளைகதைகள் அனைத்தும் வெகு சுவாரசியம் நிறைந்ததால்.
அந்த பாத்திரங்களுடனே எந்த தொய்வும் இல்லாமல் நம்மால் பயணப்படமுடிகிறது. அதிலும்
ஷிவ்மதூராக வரும் அந்த முதன்மை பாத்திரம், முழுக்க போதைக்கு அடிமை + அதிலிருந்து மீண்டுவந்த பின்னான அவரின்
தோற்றம், மீண்டுவந்ததற்கான காரணம், அவை 1970களில் வந்த முன்கதையுடனான தொடர்பு
என இந்த ஒரு பாத்திரத்தை சுற்றி மட்டுமே அடுக்கடுக்கான பல ஆச்சர்யங்கள் பின்னப்பட்டுள்ளது.
அதிலும் இந்த முதல் சீசனில் இவரின் முன்கதையும், காதல் அத்தியாயங்களும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக சொல்லப்பட்டதால், அடுத்த சீசனின் மீது இப்பொழுதே ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுவது மட்டுமின்றி. அதில் அறிமுகமாகும் மற்ற பாத்திரங்களை பற்றிய அறிமுகம் எப்படி என்பதும். காரணம் இந்த முதல் சீசனில் அறிமுகபடுத்திய அனைத்து கதாபாத்திரங்களின் அறிமுகமும் அமர்க்களம்.
எந்தவித அலட்டலும் இல்லாமல் மூலகதையை BREAKING BAD ல்
இருந்து எடுத்தாலும், அதற்கு பெரும்
சிரத்தையுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார்கள். MX PLAYER ல் காணகிடைக்கிறது.