குழந்தைகளை இதுவரை திரைப்படங்களில்
சற்று நாம் நம்பமறுக்கும் அல்லது நாம் ஏற்க தயங்கும் காட்சிகளில், நம்மை எளிதாக அந்த காட்சிகளோடு ஒன்ற செய்யவும், அந்த
பாத்திரங்களின் மீது ஒரு எதிர்பார்போ, பரிதாபமோ ஏற்படவே அவர்களை பெரும்பாலும்
பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கான சினிமா என குறிப்பிடப்பட்ட திரைப்படங்களில் கூட
அவர்களுடைய தேவைகளை, அவர்களின் அகஉலகை பெரும்பாலும் பேசியதில்லை.
ஒரு படத்தை பார்க்க தேர்ந்தெடுக்கும்
காரணிகளில் மிக முக்கியமானது. சினிமாதுறையில் தயாரிப்பாளர்கள் தவிர்த்து மற்ற துறைகளில்
இருந்து எவரேனும் பிரபல நாயகனோ இயக்குனரோ இல்லாத ஒரு படத்தை தயாரிக்கமுன்வருவது. அதற்கு
மிகமுக்கிய காரணமாக இருக்கபோவது அப்படத்தின் கதையை தவிர்த்து வேறெதுவும் இருக்காது.
அப்படியாகவே இந்த படமும் நாம் பார்க்கும்
படபட்டியலில் வந்து சேர்ந்தது. பிரியங்காசோப்ரா இவர்தான் இப்படத்தின்
தயாரிப்பாளர். உடன் சிக்கிம் அரசும், மத்திய அரசின் Children Film Soceity of India வும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள்.
ஒரு படம் அதன் மிக முக்கிய
அம்சம் அதாவது கோல்டன் மினிட்ஸ் அதிகபட்சம் முதல் 30 நிமிடங்களுக்குள் இதுதான் கதை என பார்வையாளர்களுக்கு
உணர்த்திவிடுவது. அந்த வகையில் இந்த படம் அதன் முதல்ஷாட்டே இந்த இப்படத்திற்கான கதையின் துவக்கபுள்ளியில் இருந்தே
ஆரமித்து. படத்தின் டைட்டில் கார்டுக்கு முன்பே இதுதான் இந்த படத்திற்கான கதை
எனவும் நமக்கு உணர்த்திவிடுகிறது.
மேகங்களில் இருந்து விலகி இயற்கையின்
அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு மலைகிராமத்தின் அருகில் கேமரா செல்ல செல்ல
தூரத்தில் ஒரு துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்கிறது. அங்கிருந்து துவங்கும் கதை கேமரா
அருகில் செல்ல செல்ல அந்த மலை கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான
அத்தியாவசிய பொருட்களை எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பஆயத்தமாகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் கேமரா
செல்ல அங்கு இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரும் உணவு பொருட்களை பரபரப்பாக
சேகரித்து கொண்டிருக்கின்றனர். ராணுவமோ, ஏதேனும் தீவிரவாத குழுவோ அல்லது
மாவோயிஸ்டுகளோ அந்த கிராமத்தினுள் நுழைந்து கொண்டிருகின்றனர். அவர்கள் யார்
என்பதும், எதற்காக இங்கு நுழைந்து சேதபடுத்துகின்றனர் என்பது இந்த கதைக்கு
தேவையல்லாதது என்பதால் அந்த துப்பாக்கி ஓசையோடே அவர்களை பற்றிய எந்த தகவலும்
கதைக்குள் வரவேயில்லை.
அந்த பரபரப்பில் இருந்த குடும்பம் தாங்கள்
சேகரித்த பொருட்களுடன் தங்கள் ஆண் மற்றும் பெண் குழந்தை மற்றும் உறங்கிகொண்டிருக்கும்
ஒரு கைக்குழந்தை என இந்த ஐவருடன் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி கிராம
மக்களுடன் அந்த கிராமத்தை ஒட்டிய காட்டினுள் நுழைகின்றனர். அங்கேயே தயங்கி நிற்கும்
அந்த குடும்பத்தின் தலைவன். அவன் மனைவியிடம் தான் அவர்கள் எந்த வழியாக திரும்பி
செல்கின்றனர் என்பதை பார்த்து வருவதாக கூறி இவர்களை மட்டும் அந்த கிராம மக்களுடன் அனுப்பிவிட்டு
வந்த வழியே செல்கிறான்.
அவன் சென்ற சில வினாடிகளிலேயே இரண்டாம்
முறை துப்பாக்கி ஒலிக்கும் ஓசை கேட்கிறது. அங்கு சென்றுகொண்டிருந்த குழுவில் அவனது
மனைவியும், மகளும் மட்டும் அதிர்ச்சியுடன் நிற்கின்றனர். அடுத்த சில வினாடிகளில் அம்மனைவி
தன் மகன் மற்றும் மகளிடம் கைகுழந்தையை ஒப்படைத்து தான் அப்பாவை அழைத்து
வருவதாகவும் அதுவரை இந்த குழுவை விட்டு எங்கும் சென்றிடவேண்டாம் என கூறி
செல்கிறாள்.
இந்த இடம் இருபக்கமும் அடர்ந்து
ஓங்கி உயர்ந்த பனிமலையும் அதில் அடர் மரங்கள் சூழ்ந்த வனமும். இதன் இடையே ஓடும்
ஆற்றின் பாலத்தின் நடுவில் அந்த பெண்மணி தனது இருகுழந்தைகள் மற்றும் ஒரு
கைக்குழந்தைகளை விட்டு செல்கிறார். இங்கிருந்து காமெரா ஜூம் அவுட் ஆக ஆக டைட்டில்
கார்ட் துவங்குகிறது. இது படம் துவங்கி இரண்டாம் நிமிடம் வரும் காட்சி. இங்கேயே
இந்த படத்தின் கதை இதுதான் என நமக்கு உணர்த்திவிடுகின்றனர்.
அந்த குழுவுடன் பயணிக்கும் அந்த
குழந்தைகள் இருவரும் அந்த கைகுழந்தையுடன் அடுத்த சில நிமிட காட்சிகளிலே அவர்களை
விட்டு பிரிந்து காட்டினுள் செல்ல முடிவேடுகின்றனர். எதனால்? பின் நடந்தது என்ன?..
NETFLIX ல் காணகிடைக்கிறது.