Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, April 1, 2019




WEB SERIES -002

நமக்கு பின்னால 15 வருஷம் கழிச்சுதான் சினிமாதுறைக்கு வந்து இருக்காங்க. இப்பவும் நம்மளவிட சரிபாதி எண்ணிக்கைக்கு கீழதான் இவங்க படங்கள் வெளியிடறாங்க. நம்மை போலவே ஆரம்பகட்டத்துல மட்டுமே இருக்கும் இந்த (ZOMBIE) வகை கதைகளில் (தொழில்நுட்பத்தில்) உச்சம் தொட இவங்களுக்கு மட்டும் சாத்தியமானது எப்படி? ஒவ்வொரு காலத்திலும் அறிமுகமாகுற தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கும் நாம, நம்மளயும் அறியாம நம்ம நேட்டிவிட்டியை மறந்து முழுக்க அது பின்னாளையே போறோமோ? ஏன்னா, இங்கயும் இந்த செலவுல இந்தமாறி கதைகள பண்றவங்க இருக்காங்க. ஆனா பிரதானமா இந்த ZOMBIE அதுக்கான MAKEUP, CG வொர்க், அதோட நடை, உடை, பாவனைனு முழு கவனத்தையும் செலுத்தி அட்டகாசமா ஒரு டீசர் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா படத்துல போய் பாத்தா ஆச்சர்யபட்ட விஷயம் மட்டும்தான் பிரதானமா இருக்கும். பிரதானமா இருக்கவேண்டிய திரைக்கதைல சொதப்பிடுவோம்.


ஏன்.. இவங்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தலையானு கேக்கலாம், பயன்படுத்தி இருக்காங்க. ஆனா, இந்த தொழில்நுட்பம் அவங்க கதையையும், திரைக்கதையையும் எங்கயும் சிதைக்காம எவ்ளோ அழகா ஸ்க்ரீன் ப்ரெசென்ட் பண்ணியிருக்காங்கன்னு பாத்திங்கனா தெரியும்.  இதுக்கும் கதை 1800 கள்ல நடக்குது. இப்ப மேக்கப் மட்டுமே தேவைப்படும் கம்மியளவு பாதிப்படஞ்ச ZOMBIE களுக்கு, வலுக்கட்டாயமா CG பயன்படுத்தினா அதுங்க (ZOMBIE) அதிகமா ஸ்க்ரீன்ல வரும்போது செயற்கைதனமா தெரியும். இவங்க ஒரு ஷாட்ல கூட அப்படியான அதிகப்படி வேலைங்க எதுமே பண்ணாம, ஆனா கதைக்கு தேவைப்படும் இடத்துல ரொம்ப சரியா அத பயன்படுத்தி இருக்காங்க.


ஒரு சீசன் மொத்தம் ஆறே எபிசோட்ஸ்தான். சரி ஆறு மணிநேரம் இருக்கேனு, இந்த         ZOMBIE ங்கள  அங்குட்டும் இங்குட்டும் சும்மாவே அலையைவிடாம அந்த கதை கேக்குற இடத்துல மட்டும் பயன்படுத்தின விதத்துலதான் ஆச்சர்யபடுத்தி இருக்காங்க. அதுங்க வரபோற காட்சிகள் எல்லாமே நமக்கும் மரணபீதிய கொடுத்து இருக்காங்க.
ரொம்ப பெரிய நிலபரப்ப ஆளும் ராஜா ZOMBIE வைரஸால பாதிக்கபடறாரு. அது வெளிய தெரியாம அவரோட (இரண்டாவது) மனைவி இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் அவங்க குடும்ப உறுப்பினர் உட்பட மறைச்சி அவருக்கு மருத்துவம் பாக்கறாங்க.   தன்னோட அப்பா விசயத்துல ஏதோ மர்மம் இருக்குனு சந்தேகபடும் அவரோட மகன். அப்பாவோட முன்னாள் ஆஸ்த்தான மருத்துவர தேடி போற பயணம்தான் இந்த முழு சீரீஸ்ம். அதுல இந்த வைரஸ் எப்படி முதல்ல ராஜாகிட்ட இருந்து அந்த மருத்துவர் மூலமா அவர் சொந்த கிராமத்துல நடத்திட்டு இருக்கற மருத்துவமனல இருக்கறவங்களுக்கு பரவுதுங்கற ஒரு புள்ளில துவங்குற பரபரப்ப இந்த ஆறு எபிசோட்ஸ்லயும் எங்கயுமே குறையாம, அடுத்த எபிசொட் எப்ப ரிலீஸ் பண்ணபோறாங்கனு ரொம்ப ஆர்வமா காக்க வெச்சிட்டாங்க.


ஒரு பக்கம் மருத்துவர தேடிபோற இளவரசன கொன்னுட்டு தனக்கு பிறக்க போற மகனை இளவரசனாக்க நினைக்கும் அவரின் இரண்டாவது மனைவி மற்றும் அவரின் தந்தை. இளவரசன் மருத்துவரோட சிதிலமடைஞ்ச வைத்தியசாலைய பாக்கும் சீன்ல உண்டாகற பரபரப்ப இந்த முழு சீசன்லயும் தக்க வெச்சிருக்காங்க. அந்த காட்சியும் முதல் எபிசோட்லையே வந்துடும். அதுலயும் த்ரில்லர் படங்கள் பாதில, நம்ம யூகிச்சி இருந்த விசயத்த வேறொரு மர்ம முடிச்சி கூட சேர்த்து கடைசியா அந்த மர்மத்த உடைக்கறமாறி. இந்த கதையோட பிரதானமா இருக்கும் ராஜாவோட கர்ப்பமா இருக்கும் இரண்டாம் மனைவி பத்தின மர்மத்த பெரிய முடிச்சா போட்டு முதல் சீசன முடிச்சிருக்காங்க.


ஒவ்வொரு எபிசோடும் சீன் பை சீனா நம்ம எழுதி அத படிச்சிட்டு பாத்தா கூட ஸ்க்ரீன்ல உங்களுக்கு அவ்ளோ ஆச்சர்யங்கள வெச்சிஇருக்காங்க. இதோட துணை கதைகளும் அதுல வரும் பாத்திரங்கள் கூட  நம்மள முழு சீசனும் பாக்க வெக்காம விடகூடாதுன்னு உழைச்சி இருக்காங்க. கண்டிப்பா ரொம்ப பெரிய ஆச்சர்யங்களும், பிரமிப்பையும் இந்த சீரீஸ் கொடுக்கும்.

Trailer Link:

https://www.youtube.com/watch?v=rIlDfChEqlc

Search This Blog