பார்த்ததில் மிகவும் ரசித்தது: 132.
எந்த படமும் பார்ப்பதற்கு முன் அந்த படத்தை பற்றிய
அபிப்பிராயம் நம் மனதில் பெரும்பாலும் இருக்கும். அதாவது இதன் கதை இவ்வாறே
இருக்கும் என்ற யூகம். அல்லது படம் துவங்கிய சில நிமிடங்களில் இந்த கதையை இவ்வாறே
நகர்த்தி செல்ல இயலும் என்பது போல அந்த படமும் அவ்வாறே அமையும் பட்சத்தில் கொஞ்சம்
தோய்வான திரைக்கதையோடே இருப்பினும் அவை நம் மனதுக்கு சற்று நெருக்கமானதாக உணர
செய்யும். மாறாக அப்படம் நம் யூகங்களுக்கு அப்பாற்பட்டு வேறொரு தளத்திற்கு கொண்டு
செல்லும் மாய விந்தைகள் நிகழ்த்தினாலும் அவை பார்வையானின் மனதிற்கு நெருக்கமாவது
சற்று கடினம். இக்கதையும் அவ்வாறே நம்யூகத்திலிருந்து வெளியேறி தலையில் நடந்து
காட்டும் பிரயாத்தனங்கள் ஏதும் பண்ணாமலே சட்டென நம் மனதிற்கு நெருக்கமானது.
வேறெந்த எதிர்பார்ப்பில் வரும் பார்வையாளனை விட காமம்
மேலோங்கிய கதையென வருபவனுக்கு ஒரு மூன்று காட்சிகளேனும் அவனுக்கானதாக இருந்தே
ஆகவேண்டும். அதைதவிர்த்து`எந்த குட்டி கரணமும் அங்கு செல்லுபடியாகாது. அவ்வாறான
பார்வையாளனாகவே இக்கதைக்குள் நானும் நுழைந்தேன். என்னுடைய எந்த யூகங்களையும் ஒரு
பத்து சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்யாத இக்கதை மனதிற்கு நெருக்கமானது
மட்டுமின்றி. மனதில் சம்மணமிட்டு அமர என்ன காரணம்.
சிறைச்சாலை நோக்கி விரையும் வாகனம். கைதிகளின் பெரும்
கூச்சளுக்கிடையே நீலத்தையே வெப்பமான வண்ணமாக்கிய (BLUE IS THE WARMEST COLOUR –
நாயகி) அந்த அரூப அழகி ADELE யின் அறிமுகம். அது பழைய நினைவுகளுடன் நம் யூகங்களை
மேலும் பலமடங்காக்குகிறது. அவ்வாகனம் ஒரு சிறைச்சாலைக்குள் விரைகிறது. அதே
வழக்கமான சம்பிரதாயங்களுடன் சோதனைக்கு பின் சீருடை வழங்கபடுவது. தனது அறையில்
சககைதிகளுடனான ஆரம்பகட்ட மோதல் பின்வரும் காட்சிகளில் அவர்களுடனான நட்பு. அந்த
சிறையில் உள்ள மோசமான கைதிகளுடனான கைகலப்பு. இதில் பெரும்பான்மையான எந்த
யூகங்களும் இல்லாமல் முழுகதையும் சிறைச்சாலை உள்ளேயே.
அச்சிறைசாலையின் கடைசி அறைக்கு அழைத்து
செல்லப்படுகிறாள். அவளுடனே பயணிக்கும் நமக்கும் அவ்வளாகத்தின் யதார்த்த சூழல் அனைத்து
இடங்களையும் நமக்கும் பரிச்சயமாக்குகிறது. அவ்வளாகம் மற்ற சிறைச்சாலையை போன்றே வடிவங்களை
கொண்டிருப்பினும், அங்குள்ள யதார்த்த சூழல் இப்படத்தை மற்ற வகையிலும் தரமான நல்ல
படைப்பாக்க விளைகிறது. நீண்ட இந்த துவக்க காட்சியே நமது யூகங்களை தாண்டிய வேறொரு
எதிர்பார்ப்பு இக்கதையின் மேல் ஏற்பட முதல் புள்ளி இடுகிறது. இப்படியான துவக்க
காட்சியிலேயே இதன் இயக்குனர் யார் என்ற கேள்விகள் நம்முன் எழவைத்ததும் அவரின்
வெற்றியே.
அவர் MR. NOBODY படத்தின் இயக்குனர் PIERRE GOFEAU
என்றதும். நம் யூகங்களை வேறொரு ரசனைக்கு நம்மை அறியாமல் மாறும் இரண்டாம் புள்ளி இது.
அவளுக்கு ஒதுக்கப்படும் சமையல் பணியில், எதிர்பாரா நொடியில் அவனை சந்திக்கிறாள்.
அவன் அச்சிறைசாலையின் முக்கிய அதிகாரி. கைதிகள் ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகள்
குறித்தி அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் பணியில் உள்ளவன். அவனிடம் தன் ஒரே உறவான
தாயால் அதிக தொலைவின் காரணமாக தன்னை சந்திப்பதில் உள்ள சிரமங்களை கூறி வேறு
சிறைக்கு மாற்ற கூறிவருகிறாள். அவனும் அதற்க்கான ஆவணம் செய்வதாக உறுதி
அளிக்கிறான்.
இதில் பார்த்ததும் வரும் காதல் கொள்ளும் காட்சிகளில்லை.
காமமும் உடனடியாக கசிந்தொலுகும் சூழல் இல்லை. இப்படியான நாயகியையும், சிறைச்சாலை
என்ற களத்தையும் கொண்டு வெகு எளிதாக பார்வையாளனை நிறைவடைய செய்திருக்க இயலும். ஆனால்
இக்கதைக்காகவும், இவர்களுக்கிடையேயான அந்த ஈர்ப்பை மிக யதார்த்தமாக வெளிக்கொண்டுவர
எடுத்து கொண்ட முக்கியத்துவமும். கைதி மற்றும் அதிகாரி என்ற நிலையில் இருந்து
எங்கும் விலகாமல், அவர்களின் முதல் கூடல் வரையான உருவாக்கல் தான். தனது யூகங்கள்
பொய்த்து போனாலும் இக்கதையின்பால் பார்வையாளன் ஆர்வமேற்ப்பட மிக முக்கிய
காரணியாகும்.
துவக்க காட்சி முதல் சிறிது சிறிதாக மாறிவரும்
இவர்களின் எண்ண ஓட்டத்தை மிக அழகாக நமக்கு கடத்திய பின்னணி இசையும். துவக்கத்தில்
அவனுடன் இணைந்து, பின் அடுத்த காட்சிகளிலே அவனது குடும்பம் குறித்து கோபத்துடன்
வினவும் இடங்களில், வீக்கென்ட் குடும்பத்துடன் செலவழிக்க செல்பவனை ஆத்திரத்துடன்
அணுகும் இடங்கள் மற்றும் இறுதியில் அவனுடன் விடுதியில் கழிக்கும் பொழுதுகள் என
அனைத்து காட்சிகளுக்குமான லைட்டிங்கை இவர்கள் இருவரின் மனநிலைக்கு ஏற்ப
அமைக்கபட்டிருக்கும். அவை நம்மையும் வெகு இயல்பாக அவர்களுடன் பயணிக்க செய்யும். இவை
அனைத்திற்கும் மேல் நாயகி ADELE முழுக்க இந்த ஒரு பாத்திரத்தின் மாற்றங்களை கொண்டே
கதை நகரும் என்ற சூழல் உணர்ந்த அவரின் பங்களிப்பே இக்கதைக்கான முக்கிய
புள்ளியாகும்.
http://www.distribfilmsus.com/our-movies/down-by-love-eperdument/