பார்த்ததில் மிகவும் ரசித்தது :113.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்கள் பெரும்பாலும்
அந்த சம்பவத்திற்கு முன்பும் பின்பும் அதற்க்கு காரணமானவர்களை சுற்றியே சுழலும்.
ஆனால் இக்கதை அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அதற்கு மிக
நெருக்கமாக அச்சு அசல் கொடுத்த வகையில் கவணிக்க வேண்டிய திரைப்படமாகிறது.
பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் 31 OCT
1984 அன்று
தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டது. மேலும் கொன்ற பாதுகாவலர் சீக்கியர் என்ற ஒரே காரணத்திற்க்காக
அவரது மரணத்திற்கு பின்னே சீக்கியர்கள் தேசமெங்கும் குறிவைத்து
வேட்டையாடப்பட்டனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. பாலிவுட்காரர்களுக்கு
மிகவிருப்பபான இந்த களத்தை கையில் எடுத்தது பஞ்சாபியர். ஆனால் ஹிந்தி படங்களுக்கு
இணையான பிரமாண்டத்தை காட்சிகளில் கொண்டுவரவில்லை எனினும், அதற்க்கு கொஞ்சமும் சளைத்ததல்ல
இவர்களது திரைக்கதையும் அதற்க்கு உண்மையான காட்சிகளும். பஞ்சாபி சினிமா நமக்கு பரிச்சயமில்லாததால் அவர்களை பற்றி...
193௦களின் துவக்கத்திலே அவர்களது
முதல் படம் வெளிவந்துள்ளது. நமது சுதந்திரத்திற்கு பின்னான இந்தியா பாகிஸ்தான்
பிரிவினையில் அவர் மாநிலத்தின் சரிபாதிக்கு மேல் பாகிஸ்தான் வசம் சென்றதால் பெரிதும்
தோய்வுற்றது இத்துறை. அதற்க்கு பின் 2000வரை ஆண்டுதோறும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலே அவர்கள் படம்
வெளிவந்து கொண்டிருந்தது. தேசமெங்கும் இளைஞர்களின் புதிய அலை சினிமா முயற்சியில்
அவர்கள் மாநில சினிமாத்துறையும் புத்துயிர் பெற்றுள்ளது. தற்போது ஆண்டுக்கு
கிட்டத்தட்ட நாற்பது படங்களுக்கு மேல் வெளிவருகிறது. இப்படம் 2௦15ல் வெளிவந்து மிகப்பெரும்
வெற்றிபெற்றதுடன், பல்வேறு விருதுகளையும் பெற்றது. இன்றும் இப்படத்தை பஞ்சாபி சினிமாதுறையினர்
தங்களின் கௌரவமாகவே கருதுகின்றனர். அப்படி
இந்த படத்தில் ஒளிந்துள்ள சமாச்சாரங்களை பற்றி...
முதலில் இப்படத்திற்கான கதை எழுதி
தயாரித்திருப்பவர் HARRYSACH DEVA பஞ்சாபியான இவர். சிறு வயதில் தான் பார்த்து
அனுபவித்த சம்பவங்களையே கதையாக அமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் SHIVAJI LOTAN
PATEL மராத்தி சினிமாவின் மிகமுக்கிய இயக்குனர். கடந்த வருடம் தேசிய விருது
பட்டியலில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த சிறார் சினிமா விருதுகளை பெற்ற DHANG திரைப்படத்தின்
இயக்குனர். RAMANI RANJAN DASS PK, 3 IDIOTS, MUNNABHAI படங்களின் CINEMATOGRAPHER. PARVEZKHAN
இவர் RA-ONE, KAI PO CHE, DEV D, VISWAROOPAM படங்களுக்கு சண்டை பயிற்சி செய்தவர்.
மேலோட்டமாக இயக்குனரை தெரிந்து கொள்ள பார்த்தால் பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள்
நமக்கு பரிச்சயமான மற்றும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்களே.
படத்தின் முதல் சில நிமிடங்களிலே
இந்திராஅம்மையாரின் படுகொலை நிகழ்ந்து விடுகிறது. அதற்க்கு முன் கதையில் மிகச்சில
காட்சிகளில் தோன்றிய பாத்திரங்களை கொண்டே ஒரு மிகப்பெரும் கலவர நிகழ்வின்
வீரியத்தை பயத்தை பார்வையார்களுக்கு கடத்திய உருவாக்கல் இப்படத்திற்கு மிகப்பெரும்
பலம். பொதுவாக இது போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைகளில், அந்த சம்பவத்திற்கு
கொடுக்கும் முக்கியத்துவம் அதற்கான காரணங்களை அலசுவதிலோ காட்சிபடுத்தலிலோ இருப்பதில்லை.
மாறாக இக்கதை நம்முடனே பணிபுரியும்
மற்றும் அருகில் வசிப்போரை ஒரே நிமிடத்தில் வெறுக்க கொலை செய்யும் அளவு துணிய
அம்மையாரின் படுகொலையை முன்வைத்தாலும் தேசம் முழுக்க பரவிய இந்த காட்டுதீ எரிய
துவங்குமிடமாக இவர்கள் வைத்த அந்த மூன்று காட்சிகளே போதும் இக்கதையை முழுமைக்கும்
ரசிக்க. மூன்று நாட்கள் நீடித்த இந்த கலவரத்தில் 2146 பேர் டெல்லியில், மொத்தமாக 9000 நபர்கள் தேசம் முழுக்க வீதிகளில்
எரித்தும், அடித்தும் கொல்லப்பட்டனர். இந்த பெரும் கலவரத்திற்கு காரணமானவர்கள் என
ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாதே இதில் மிகபெரும் வேதனையாக கருதப்படுகிறது.
இந்த கலவரத்தில் ஒரு சீக்கிய
குடும்பம் இரு குழந்தைகளுடன் எவ்வாறு தப்பி பிழைத்தார்கள் என்பது மட்டுமே கதை.
ஆனால் பார்வையாளர்கள் அனைவரையும் அவர்களுடனே ஒளிந்து, பயந்து படபடக்க செய்தது
மட்டுமின்றி அவர்களுடனே டெல்லிநகர் முழுக்க அந்த ஒரு நாளில் நடந்த அத்துணை
கொடூரங்களையும் நம்மையும் உணரசெய்ததே இக்கதைக்கான மிகப்பெரும் வெற்றி.
இப்படத்திற்கான ட்ரைலர் லிங்க்:
https://www.youtube.com/watch?v=9yuGao8d4nU