WEB SERIES – 008
சமீபமாக நிகழ்ந்த இந்த லாக்டவுன் முதல் அதிகம் பரிந்துரைக்கப்படும்
படங்கள் முதல் ஹிட் அடித்த தொடர்கள் வரை. பெரும்பாலும்
அவை ஒரு கொலை, அதை ஒட்டிய கதை இவ்வாறே அமைகின்றன. அந்த வரிசையில் மீண்டும் ஒரு
சீரீஸ். தொடர் கொலைகள், அதை ஒட்டிய விசாரணை, அந்த கொலையாளியை தேடல் என்ற அதே
பாணியில் அமைந்த ஒரு தொடர்.
அதே வழக்கமான கதையில் முதல் எபிசோடின் முதல்
பத்து நிமிடங்களுக்கு உள்ளேயே ஒரு கொலை நிகழ்கிறது அது போதுமானதாக இருந்தது நம்மை இந்த
தொடருடன் இணைத்துகொள்ள. கொலை செய்யப்படும் நபரிடம் எந்த வீண் வாதங்கள் மற்றும்
அவர்களின் அழுகுரல். அவை நமக்கு ஏற்படுத்தும் மனஉளைச்சல். இப்படி ஏதும் இல்லாமல் அந்த
நபர் சுதாரிப்பதற்குள் சட்டென ஒரு கொலை.
ஆனால் அதன் வீரியத்தை நமக்குள் ஆழமாக பதிக்கும்வண்ணம்
அடுத்து அவனின் செயல்கள். முடித்து அந்த சடலத்தை அவன் காவல்துறைக்கு display செய்தவிதம்.
இந்த தொடரை அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து பார்க்க மூலகாரணி. இந்த முழு தொடரின்
எட்டு அத்தியாயங்களை ஒரே இரவில் முடிக்க மிகபெரும் காரணம் முதல் அத்தியாயம்
முடித்த விதம்.
ராஜேஷ்குமார் நாவல்களில் பெரும்பாலும் ப்ரெசென்ட்
கதை ஒரு அத்தியாயமும், பாஸ்ட் அல்லது முதல் அத்தியாய கதை சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களுடன்
சம்பந்தம் அல்லாத வேறொரு கதை ஒரு அத்தியாயமாக வரும். அவ்விரண்டு கதைகளும் சேரும் அந்த
லீடுடன் அல்லது ஒரு அத்தியாயத்துடன் அக்கதை நிறைவுறும். அப்படியாக இதிலும் டைட்டிலுக்கு
முன் ஒரு நிமிட டீசர் போன்ற ஒரு பாஸ்ட் கதை சொல்லபடுகிறது.
துவக்கத்தில் நமக்கு காண்பிக்கப்படும் அந்த
கொலை, கதையில் நிகழும் மூன்றாவது கொலை ஆதலால் இந்த வழக்கு முன்பே சிபிஐ
விசாரணையில் இருக்கும். இவ்வழக்கை விசாரிக்கும் குழுவில் திறமையில் கிட்டத்தட்ட
சரிசமமான இருவர். உடன் அந்த இருவருக்குமான ஈகோ மோதல் போன்ற எந்த வளவளா
சமாச்சாரங்களும் இல்லாமல். ஒரே நூல் பிடித்தது போன்ற நேர்கோட்டில் செல்லும் கதை.
இப்படியான திரைக்கதையில் எந்த பெரிய ஓட்டையும்
இல்லாத கதைகள். நாம் எந்த மொழியில் பார்த்தாலும். அவை தமிழிலேயே பார்ப்பது போன்ற
ஒரு நெருக்கமான உணர்வை தரும். சமீபமாக PAATAL LOK. கிட்டத்தட்ட அதற்க்கு இணையான
ஒரு சீரீஸ் இது. ஆனால் அந்த நெருக்கம் இல்லாமல் வேற்றுமொழி படம் பார்க்கும் உணர்வை
தர முக்கிய காரணம். ஹிந்து mythology அடிப்படையாக கொண்டு இயங்குவது.
திரைக்கதைபடி இந்த முறை சரியென்றாலும். அவை புரியாத
பெரும்பாலோருக்கு இந்த கதையுடனான நெருக்கம் சற்று குறைவாகவே இருக்கும். முதல்
சீசன் முடிவில் அடுத்த சீசனுக்கான லீட் அட்டகாசமான
எதிர்பார்ப்புடன் நிறைவு செய்திருக்கிறார்கள். VOOT ஆப்பில் காண கிடைக்கிறது.


No comments:
Post a Comment