Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, April 1, 2019




WEB SERIES -002

நமக்கு பின்னால 15 வருஷம் கழிச்சுதான் சினிமாதுறைக்கு வந்து இருக்காங்க. இப்பவும் நம்மளவிட சரிபாதி எண்ணிக்கைக்கு கீழதான் இவங்க படங்கள் வெளியிடறாங்க. நம்மை போலவே ஆரம்பகட்டத்துல மட்டுமே இருக்கும் இந்த (ZOMBIE) வகை கதைகளில் (தொழில்நுட்பத்தில்) உச்சம் தொட இவங்களுக்கு மட்டும் சாத்தியமானது எப்படி? ஒவ்வொரு காலத்திலும் அறிமுகமாகுற தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கும் நாம, நம்மளயும் அறியாம நம்ம நேட்டிவிட்டியை மறந்து முழுக்க அது பின்னாளையே போறோமோ? ஏன்னா, இங்கயும் இந்த செலவுல இந்தமாறி கதைகள பண்றவங்க இருக்காங்க. ஆனா பிரதானமா இந்த ZOMBIE அதுக்கான MAKEUP, CG வொர்க், அதோட நடை, உடை, பாவனைனு முழு கவனத்தையும் செலுத்தி அட்டகாசமா ஒரு டீசர் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா படத்துல போய் பாத்தா ஆச்சர்யபட்ட விஷயம் மட்டும்தான் பிரதானமா இருக்கும். பிரதானமா இருக்கவேண்டிய திரைக்கதைல சொதப்பிடுவோம்.


ஏன்.. இவங்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தலையானு கேக்கலாம், பயன்படுத்தி இருக்காங்க. ஆனா, இந்த தொழில்நுட்பம் அவங்க கதையையும், திரைக்கதையையும் எங்கயும் சிதைக்காம எவ்ளோ அழகா ஸ்க்ரீன் ப்ரெசென்ட் பண்ணியிருக்காங்கன்னு பாத்திங்கனா தெரியும்.  இதுக்கும் கதை 1800 கள்ல நடக்குது. இப்ப மேக்கப் மட்டுமே தேவைப்படும் கம்மியளவு பாதிப்படஞ்ச ZOMBIE களுக்கு, வலுக்கட்டாயமா CG பயன்படுத்தினா அதுங்க (ZOMBIE) அதிகமா ஸ்க்ரீன்ல வரும்போது செயற்கைதனமா தெரியும். இவங்க ஒரு ஷாட்ல கூட அப்படியான அதிகப்படி வேலைங்க எதுமே பண்ணாம, ஆனா கதைக்கு தேவைப்படும் இடத்துல ரொம்ப சரியா அத பயன்படுத்தி இருக்காங்க.


ஒரு சீசன் மொத்தம் ஆறே எபிசோட்ஸ்தான். சரி ஆறு மணிநேரம் இருக்கேனு, இந்த         ZOMBIE ங்கள  அங்குட்டும் இங்குட்டும் சும்மாவே அலையைவிடாம அந்த கதை கேக்குற இடத்துல மட்டும் பயன்படுத்தின விதத்துலதான் ஆச்சர்யபடுத்தி இருக்காங்க. அதுங்க வரபோற காட்சிகள் எல்லாமே நமக்கும் மரணபீதிய கொடுத்து இருக்காங்க.
ரொம்ப பெரிய நிலபரப்ப ஆளும் ராஜா ZOMBIE வைரஸால பாதிக்கபடறாரு. அது வெளிய தெரியாம அவரோட (இரண்டாவது) மனைவி இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் அவங்க குடும்ப உறுப்பினர் உட்பட மறைச்சி அவருக்கு மருத்துவம் பாக்கறாங்க.   தன்னோட அப்பா விசயத்துல ஏதோ மர்மம் இருக்குனு சந்தேகபடும் அவரோட மகன். அப்பாவோட முன்னாள் ஆஸ்த்தான மருத்துவர தேடி போற பயணம்தான் இந்த முழு சீரீஸ்ம். அதுல இந்த வைரஸ் எப்படி முதல்ல ராஜாகிட்ட இருந்து அந்த மருத்துவர் மூலமா அவர் சொந்த கிராமத்துல நடத்திட்டு இருக்கற மருத்துவமனல இருக்கறவங்களுக்கு பரவுதுங்கற ஒரு புள்ளில துவங்குற பரபரப்ப இந்த ஆறு எபிசோட்ஸ்லயும் எங்கயுமே குறையாம, அடுத்த எபிசொட் எப்ப ரிலீஸ் பண்ணபோறாங்கனு ரொம்ப ஆர்வமா காக்க வெச்சிட்டாங்க.


ஒரு பக்கம் மருத்துவர தேடிபோற இளவரசன கொன்னுட்டு தனக்கு பிறக்க போற மகனை இளவரசனாக்க நினைக்கும் அவரின் இரண்டாவது மனைவி மற்றும் அவரின் தந்தை. இளவரசன் மருத்துவரோட சிதிலமடைஞ்ச வைத்தியசாலைய பாக்கும் சீன்ல உண்டாகற பரபரப்ப இந்த முழு சீசன்லயும் தக்க வெச்சிருக்காங்க. அந்த காட்சியும் முதல் எபிசோட்லையே வந்துடும். அதுலயும் த்ரில்லர் படங்கள் பாதில, நம்ம யூகிச்சி இருந்த விசயத்த வேறொரு மர்ம முடிச்சி கூட சேர்த்து கடைசியா அந்த மர்மத்த உடைக்கறமாறி. இந்த கதையோட பிரதானமா இருக்கும் ராஜாவோட கர்ப்பமா இருக்கும் இரண்டாம் மனைவி பத்தின மர்மத்த பெரிய முடிச்சா போட்டு முதல் சீசன முடிச்சிருக்காங்க.


ஒவ்வொரு எபிசோடும் சீன் பை சீனா நம்ம எழுதி அத படிச்சிட்டு பாத்தா கூட ஸ்க்ரீன்ல உங்களுக்கு அவ்ளோ ஆச்சர்யங்கள வெச்சிஇருக்காங்க. இதோட துணை கதைகளும் அதுல வரும் பாத்திரங்கள் கூட  நம்மள முழு சீசனும் பாக்க வெக்காம விடகூடாதுன்னு உழைச்சி இருக்காங்க. கண்டிப்பா ரொம்ப பெரிய ஆச்சர்யங்களும், பிரமிப்பையும் இந்த சீரீஸ் கொடுக்கும்.

Trailer Link:

https://www.youtube.com/watch?v=rIlDfChEqlc

Monday, February 25, 2019



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 145.


பள்ளி காலத்துல தமிழ் படங்களை தாண்டி ஆக்ஷன்ல நமக்கு பெரிய நிறைவை தந்ததுனா அது தெலுங்கு சினிமாக்கள்தான். முன்னணி நடிகர்களோட பெரும்பான்மையான படங்கள் இங்கு தமிழ் டப்பிங்கில் வெளியாகும். அது நம்ம பெரிய நடிகர்களோட படங்களுக்கு இணையாக வெற்றிகரமாகவும் ஓடும். 9௦களுக்கு பின்னான காலங்கள்ல கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களே பெரும்பாலும் இங்கு வெளியிட்டாங்க. . அதேசமயம் இங்க நமக்கு அதுக்கு மாற்றா அமைஞ்சது (ஷாருக் உச்சத்துக்கு போய்கிட்டு இருந்த சமயம்) நேரடி ஹிந்தி சினிமாக்கள். இந்த இணையத்தோட பயன்பாட்டுல பலமொழி படங்கள் பாக்கறது சாத்தியமானதும் முதல்ல நெனச்சது, இப்ப தெலுங்கு படம்லாம் எப்படி இருக்கும்னுதான். நண்பர்கள் பரிந்துரைத்த படங்களில் “மனம்” தவிர்த்து வேற படங்கள் பெருசா எந்த ஈர்ப்பும் ஏற்படுத்தல. அதில்லாம காதல் காட்சிகள்லகூட கணவன் மனைவி சண்டைல பேசற மாறி ரொம்ப வேகமா பேசறாங்க. ஓடி ஓடி சப்டைட்டில வேற படிக்கமுடியல.


இப்படியான சூழல்ல போன வருஷம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம இந்த படம் வெளியாகுது. நடிகர் நாணிதான் இந்த படத்த ரிலீஸ் பண்றாரு. பொதுவாவே சினிமால வேற துறைல குறிப்பா நடிகர்கள் தயாரிக்கற அல்லது வெளியிடும் படத்து மேல எப்பவும் எனக்கு ஒரு ஆர்வம். காரணம் அந்த படத்துல ஏதோ ஒன்னு இருக்கவும் தான, அவங்க சொந்த செலவுல அதவெளியிட்றாங்க அப்படின்னு. இத்தனவருசஷம் காத்திருந்ததுக்கும் சேத்துவெச்சி ஒரே படத்துல அவங்க நம்மளமாறியே, ஏன்! அதவிடவே முன்னால இருக்காங்கனு சொல்ற மாறி ஒருபடம்தான் இது.


இதுல ஆறு தனிதனி கதை. அந்த கதைங்க கடைசியா ஒரு புள்ளில முடியறமாறின்னு சராசரியா நெனச்சிடாதிங்க. இந்திய சினிமால இதுவரை யாரும் திரையில கொண்டுவர ரொம்ப யோசிக்கற, ஆனா நாம அத ரொம்ப பெருசா கொண்டாடற வகைய சேர்ந்த கதைங்க. எப்படினா?
ஒரு கணவன் மனைவி அவங்க பொண்ணு ஒரு ரெஸ்டாரென்ட்ல வெயிட் பண்றாங்க. அந்த பொண்ணு தான் காதலிக்கற நபர அவங்க பெத்தவங்களுக்கு அறிமுகபடுத்த அங்க வந்திருக்காங்க. அந்த நபர் இன்னும் வரல. அப்பாவேற ஒவ்வொரு கேள்வியா கேக்க ஆரமிக்கராரு. இவங்க பொத்தாம் பொதுவா பதில் சொல்லிட்டே, அந்த நபருக்கு மெசேஜ் பண்றாங்க. அவங்களும் டிராபிக்ல இருக்கறதாவும், வரேனும் சொல்றாங்க. இதுல அப்பாவோட தயக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டே, மௌன விரதம் இருக்கற அம்மா பேசாம கண்லயே எரிக்கற மாறி பாக்கறதலாம் சமாளிச்சுனு அந்த நபர் வரவரைக்குமான போர்ஷன் அவ்ளோ அழகா இருக்கும். இந்த பொண்ணு கொடுத்த பில்டப்ல கிட்டத்தட்ட அவங்க ரெண்டுபேருமே ஓகே சொல்லபோற நேரத்துலதான் மாப்பிள்ளை என்ட்ரி. சும்மா ஒரு டார்க் கலர் ஜீனும் ப்ளூ கலர் காட்டன் செக்ட் ஷர்ட்ல முதல் பட்டன் போடாம, கைல ஹெல்மெட்டோட செம்ம ஸ்டைலிஷா நம்ம ஹீரோ என்ட்ரி. யாருன்னு பாத்தா நம்ம “நித்யாமேனன்”. அந்த பொண்ணும் இவங்களதான் லவ் பண்றேன்னு சொல்லுது. இப்படி இதுல வர மிச்ச கதைகளும் நம்ம பெரும்பாலும் பாக்காத ஏதோ ஒரு சுவாரசியம் அந்த கதைகள்லயும் இருக்கறமாறியே பாத்து பண்ணதுதான் இந்த படத்தோட பெரிய வெற்றியே.



இப்படி ஒன்னுகொன்னு சம்பந்தம் இல்லாத கதைகளா அந்த ரெஸ்டாரெண்ட்ட சுத்தி நடக்குது. இதோட முடிவு இப்ப சமீபத்திய சினிமாக்கள்ல வரமாறி கடைசியா சம்பந்தமே இல்லாத ஒரு பாத்திரத்த அறிமுகப்படுத்தி இவங்கதான் இதுக்கு காரணம்னு சொல்றமாறி இல்லாம, படத்தோட துவக்கத்திலேயே இதோட முடிவு இதுதான்னு சொல்லிடுவாங்க. அதில்லாம ஒரு பாத்திரம் மட்டும் இந்த கதைல அதோட அடுத்தடுத்த மூவ்மெண்ட்ஸ் கிளைமாக்ஸ் நோக்கியே போகும். படத்தோட கதைகள் மாறியே டெக்னிகல் பக்கமும் ரொம்ப பெரிய உழைப்பை கொடுத்து இருக்காங்க. அதுலயும் எடிட்டிங்க்கும் காமெராவும் ஒரு பேய் வர போர்ஷன்ல அதகளமா இருக்கு. அந்த MAGICIAN வர கதைதான் இதுல என்னோட MOST FAVOURITE. நல்ல சினிமா விரும்பிகள் நிச்சயம் தவறவிட கூடாத படம்,

Trailer Link:
https://www.youtube.com/watch?v=YJeezU36l4M

Monday, February 18, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 144.

தன் கண்முன்னே அவனது தாய் கோரமாக கொல்லபடுகிறார்.    வேட்டையர்களில் ஒருவனால் இவனும் இவனது சகோதரனும் உயிர் பிழைகின்றனர். நிராதரவாக அந்த அடர்ந்த வனத்தில் அவர்கள் வளர்ந்துவரும் சூழலில், சில வருடங்களில் அவனது சகோதரனும் சில வேட்டையர்களால் கொல்லப்படுகிறான். தனித்து விடப்பட்டவன் வெறிகொண்ட வேங்கையாக மாறி அந்த வேட்டையர்களை எவ்வாறு பழிக்கு பழி வாங்கினான் என்பதே கதை. இதில் என்ன பெரிய சுவாரசியம், இதேபோல் பல கதைகள் பார்த்தாயிற்றே என தோன்றுவோருக்கு. இக்கதையின் நாயகனே வேட்டையர்களை காட்டிலும் அதிக தந்திரங்களை பயன்படுத்தி அவர்களிடமிருந்து தப்பித்து கொண்டிருக்கும் அசல் புலி என்பதே.சுவாரசியம்.


1935-ல் தென்கொரியாவின் ராணுவத்தில் MAJOR போன்ற உயர்பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவிகாலத்தில் எத்தனை புலிகளை வேட்டையாடி தங்கள் அலுவகத்தில் அவற்றை பாடம் செய்து வைத்துள்ளார்கள். என்பதை கொண்டே அவர்களின் மதிப்பு கணக்கில் எடுத்து கொள்ளபடுகிறது. எனவே தனக்கு முன்பிருந்தவர்களை காட்டிலும் நமது காலத்தில் அதிக புலிகளை வேட்டையாட படவேண்டும் என்பதையே அங்கு பதவிக்கு வரும் அனைத்து MAJOR GENERALகளின் விருப்பமாகவும் இருந்தது. எனவே அவர்கள் புலிகளை வேட்டையாட அக்காடுகளில் உள்ள ஆதிவாசிகளில் சிலரை பயன்படுத்தி வந்தனர்.


தற்போது புதிதாக வந்த MAJOR வேட்டையை மேலும் கடுமையாக்குகிறார். முன்பிருந்தவர்கள் வேட்டையாடிய எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல். அந்த காட்டில் உள்ள அனைத்து புலிகளையும் குட்டிகள் முதற்கொண்டு வேட்டையாட உத்தரவிடுகிறார். ஏற்கனவே புலிகளின் எண்ணிக்கை மிகசொற்ப்பமாக இருக்கும் சூழலில் இருக்கும் சிலபுலிகளும் வேட்டையாடபடுகிறது ஒரு புலியை தவிர. வேட்டையர்களின் எந்த முயற்சியும் பலன் அளிக்காத சூழலில். ராணுவ சிப்பாய்களுடன் இறுதி முயற்சியாக வேட்டைக்கு செல்கின்றனர். இதற்க்கு முன் தாங்கள் பயிற்சி பெற்ற பல தங்கள் குரு CHUN MAN DUK யை சந்திக்க செல்கின்றனர். அவருக்கும் அவரது 13 வயது மகனுக்கும் இடையேயான சிறு மனவேற்றுமையை பயன்படுத்தி அவருக்கு தெரியாமலே அவனையும் வேட்டைக்கு அழைத்து செல்கிறான் தற்போதைய வேட்டை குழுவின் தலைவன். அவர் இல்லாமல் பெரும் படையுடன் சென்றாலும் தங்களால் அப்புலியை வேட்டையாட முடியாது என்பதை உணர்திருந்தான். அதனாலே அவர் தன்மகனை தேடி அங்கு வருவார். அவரை வைத்து இந்த ஒற்றை புலியை வேட்டையாடிட திட்டமிடுகிறான்.


2.5 மணிநேர கதையில் மேலே குறிப்பிட்டது முதல் 3௦ நிமிட கதை மட்டுமே. இந்த முதல் 3௦ நிமிட கதை தெரிந்தே பார்த்தாலும் புலிகள் வேட்டையாடபடும் காட்சிகள் நமக்கு திகிலூட்டும்படியே காட்சிபடுத்தி இருப்பர். அதிலும் அந்த குரு மற்றும் தற்போது வேட்டையாடும் குழு அவர்களின் வேட்டைமுறையை கொண்டே இந்த இவர்களின் குணநலன்களை மதிப்பிடும்படி. படத்தின் துவக்கத்திலே இவர்கள் வேட்டையாடும் முறை தனித்தனியே காட்சிபடுத்தபட்டிருக்கும். மேலும் தன் காலம்முழுக்க பல புலிகளை வேட்டையாடிய குரு. தன் மகனை கண்டிப்பாக அந்த ஒற்றை புலியை வேட்டையாட அனுமதிக்காததன் காரணம். வேட்டைக்கு அவர்களுடன் சென்ற குரு மகனின் நிலை இந்த இரு இடங்களும் காட்சிகளாக விரியும் பகுதியே இந்த மொத்த கதைக்கான பற்றுதல். அவை நமக்கு பெரும் பதைபதைப்பையும் மனதை கூடுதல் இலகுவாக்கும் இடங்கள்.


கதைக்கு முக்கிய பாத்திரம் அந்த ஒற்றை புலி. கதையில் முதல் இருபுலியை வேட்டையாடிய பின்னே இந்த புலியை பற்றிய பேச்சு துவங்கும். அதிலும் அதன் இடது கண் கிடையாது என்ற தகவலுடன். அதிலிருந்து படம் முழுக்க இந்த ஒற்றை புலியை வேட்டையாடுதல் என்பதை நோக்கியே கதை செல்லும். ஆனால் முழுதாக இதன் உருவம் திரையில் காண்பிக்கப்படும் இடம் கிட்டத்தட்ட 75% படத்திற்கு பின்னே. அதுவரை அந்த புலி காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் நாமும் அந்த காட்டில் மாட்டிகொண்ட திகிலிலேயே இருக்கும். இது கிட்டத்தட்ட நம் விருப்ப நாயகர்களை திரையில் கண்டதும் ரசிகனுக்குக்கு ஏற்படும் பரவசநிலையை. ஒவ்வொரு முறை அப்புலியை திரையில் பார்க்கும் நமக்கும் ஏற்படும்படி அதன் இடபக்க முகம் சரியாக காட்டபடாமலே காட்சிபடுத்தபட்டிருக்கும்.


மேலும் குருவின் பாத்திரத்தில் வருபவர். இப்படத்தின் இயக்குனர். இதன் பின்னணி இசை. படத்தில் CG பயன்படுத்தப்பட்ட விதம் என இந்த படத்தை போலவே. அதன் உள்ளேயும் நிறைய சுவாரசியங்கள் புதைந்துள்ள படைப்பிது.

Trailer Link:
https://www.youtube.com/watch?v=uTYTKLVKXgc

Wednesday, January 30, 2019



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 143.

அக்கால மன்னர்கள் முதல் இக்கால அரசியல்தலைவர்கள் வரை பலவகையான அதிகார பிரயோகங்களை மக்கள் மீது செலுத்தியே வந்துள்ளனர். மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்கள் காலங்களில் அந்த அடக்குமுறைகள் மிக அதிகமாக பிரயோகிக்கபட்டதாகவும். தற்போது அரசியல் தலைவர்கள் காலங்களில் அவை ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்லது அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் ஒரு சிலரின் மீது மட்டும் ஏவப்படுவதாக உணர்கிறோம். ஆனால் அக்காலம் முதல் தற்போது வரை இந்த அதிகார நபர்களிடம் பணிபுரியும் அதிகாரிகள் பற்றியோ அவர்களின் நிலை குறித்தோ பெரிதாக சிந்தித்ததில்லை. அவர்களை குறிப்பிட்டு சொல்ல காரணம் அவர்களும் நம்மில் ஒருவர்களே.


எந்த அரசு அதிகாரியும் அதிகாரம் படைத்த அன்றைய மன்னர்களுடனோ இன்றைய அரசியல்வாதிகளுடனோவோ இருந்துவிடுவதில்லை. அவர்களும் அவர்களது குடும்பங்களும் நம்முடனேதான் உள்ளது. சினிமாக்களில் கூட இவர்களையும் அந்த அதிகாரம் பொருந்தியவர்களுக்கு இணையாகவே தான் பார்த்து வந்துள்ளோம். முதல்முறை போலீஸ் அதிகாரிகள் அந்த அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறுவழியின்றி சமரசமாக, பாதிக்கபடும் மக்களுக்காக வருந்தும் சூழலையும். அவர்களும் நம்மை போல் குடும்ப சிக்கல்களால் பெரும் மனஉளைசலில் .தம் பணியில் கடமை தவறுவதையும் இந்த படத்தைவிட இந்த நுணுக்கத்தில் வேறு படங்களில் பார்த்ததாக நினைவில்லை.


சோனி எனும் காவல்துறையின் கடைநிலை பாத்திரம் ஒன்றும். அவரின் INSPECTOR கல்பனா இந்த இருவரின் அக மற்றும் புற எண்ண ஓட்டங்களே இந்த படம். அதிகாரத்தால் தம் கடமையை கூட நிறைவேற்ற முடியாத சோனியும். அவளை அதிகாரத்தால் இழக்க விரும்பாத கல்பனா பாத்திரங்களும் நமக்கு காவல்துறையினர் மீது மதிப்பை ஏற்படுத்துவதை விட அவர்களின் மேல் பெரும் அனுதாபம் கொள்ள செய்கிறது. குறிப்பாக இந்த இரண்டு முக்கிய பாத்திரங்களையும் பெண்களாக தேர்வு செய்ததும். அவர்களின் குடும்ப சூழலில் அவர்களே அனைத்து பணியும் செய்து. வயதானவர்களுக்கு பணிவிடை செய்து. குழந்தைகளை மேய்க்கும் எந்த சினிமாதன காட்சி அமைப்புகளும் இதில்இல்லை. குறிப்பாக இந்த இரு பெண் பாத்திரங்களுக்கும் குழந்தைகள்கூட கிடையாது.


அதில் மிக குறிப்பாக இன்ஸ்பெக்டர் கல்பனா. அவரின் கணவர் அதே துறையில் இவருக்கு உயரதிகாரியாக இருப்பார். தெரியாம ஒரே ஒரு சீன்ல கூட இவர்களுக்குள்ளான தாம்பத்தியம் குடும்ப விஷயங்கள் மற்றும் தங்களது எதிர்காலம் குறித்த எந்த சம்பாசனைகளுமே இருக்காது. ஒரு காட்சியில் அவர் மனைவியிடம் கூறுவார். உன்கூட வேலை பார்க்கும் யாரிடமும் அட்டாச்மென்ட்டா இருக்காதேனு. அதை அவர் சொன்ன இடமும். எந்த சூழல்ல இந்த கதைல அந்த காட்சிவரும்னு பார்த்தா அதுதான் இந்த மொத்த படமும்.


முதல் காட்சியில் அந்த சோனி மற்றும் இவரும் பணிமுடிந்து தங்கள் இல்லங்களுக்கு திரும்புகின்றனர். வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் கல்பனா பாத்திரம் அதுவரை பணியில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் முழு இரவுபணி முடிந்து வரும் சோர்வில் இருப்பவர். உள்ளே தனது கணவனின் குரல் கேட்டதும். அந்த முகத்தில் சிறிதாக அரும்பிய அந்த நாண புன்னகையுடனே உள்ளே நுழைவார். தொலைபேசியில் யாருடனோ பேசியவாறே அவர் இவர்பக்கம் திரும்பி ஒரு சிறு புன்னகையை உதிர்த்ததும். அதுவரை இருந்த அந்த சிறு புன்னகையும் பெருவெளிச்சமாக மாறி ஷோபாவில் அமர்ந்து தனது சூவை கழட்டியபடியே வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம் சமையல் குறித்து   பேசிகொண்டிருப்பார். ஆனால் அவர் பார்வை அவர் மீதிருந்து திரும்பாது. அதற்க்கு பின்னான சில வினாடி காட்சிகள். இந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான காட்சியிலே இவரது குணாதிசியத்தை தெரியபடுத்தி இருப்பர். 
இதைக்கொண்டே இவர் சோனியை எவ்வாறு கையாளுவார். இவர்களுக்கிடையேயான குழப்பங்களுக்கு இதுதான் தீர்வாக இருக்கும் என்பதை நம்மால் ரொம்ப சரியாக தீர்மானிக்க இயலும்.



படத்தின் தலைப்பே SONI தானே அதை விடுத்து இந்த பெண்ணின் பாத்திரத்தை பற்றியே முழுக்க சொல்வதற்கு காரணம். வெறும் இந்த பாத்திர அறிமுகம் மட்டுமல்ல. முக்கிய பாத்திரத்துடன் பயணிக்க போகும் இவருக்கே இந்த DETAILING இருக்கும்போது. கதையின் முக்கிய பாத்திரத்திற்கான DETAILING எந்த அளவில் இருக்கும் என்பதற்கே. வெறும் படமாக பார்க்கவும் எந்த தோய்வும் இல்லாமல் உங்களை கூட்டி செல்லும். கூர்ந்து கவனிப்போருக்கு பாத்திரத்தன்மை முதல் அவர்கள் உறவுகளை எளிதில் எவ்வாறு கையாள்கிறார்கள் வரை உங்களை அதிசியிக்க வைக்கும் சினிமா.

TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=ySTPKPTBE-o

Saturday, January 26, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 142.

சில படங்கள் நம் மனதுக்கு மிக நெருக்கமாகி போனாலும். மிகஆழமாக நம்மை ஆட்கொண்டாலும் அவைபற்றி எழுதவோ நண்பர்களிடத்தில் பகிரவோ பெரிதும் ஆர்வமிருக்காது. அவை இந்த ANIMATION மற்றும் விலங்குகளை பிரதானமாக கொண்ட படங்கள். காரணம் இது குழந்தைகளுக்கான படைப்புகள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். முதல்முறை அவ்வகையை சார்ந்த ஒரு படத்தை பற்றி பகிர மிகமுக்கிய காரணம். இது குழந்தைகளை விட இப்படம் பேசும் சாரம் நம்மால் அதிகமாக உணரப்படும் என்பதாலே.

“BAILEY” எனும் இந்த நாயே இப்படத்தின் பிரதான பாத்திரம். மிகமுக்கியமானது இந்த BAILEY யின் பார்வையிலே முழுகதையும் நகரும். மேலும் BAiLEY மற்ற பாத்திரங்களுடன் சொல்லவோ, கேட்கவோ நினைப்பவை அதன் VOICE OVER ல் வரும். அது படத்தின் மற்ற பாத்திரங்களுக்கு கேட்க்காது. படத்தில் மிக அதிக வசனம் BAILEYக்கே. மேலும் இவ்வாறான கதைகளின் முடிவு நாம் பெரும்பாலும் பார்த்ததே. ஒன்று BAILEYயை அதன் உரிமையாளர் விரட்டிவிடுவர். அல்லது வயதாகி அவை கதையின் முடிவில் இறந்துவிடுவதாக முடிப்பர். அவை அக்கதையுடன் நெகிழ்ந்திருந்த நம்மை கலங்கவைத்திடும்.

ஆனால் இப்படத்தில் அவ்வாறான சங்கதிகள் இல்லை. எனினும் நம்மை நெகிழசெய்ய பல காட்சிகள் உண்டு. படம் முழுக்க BAILEYயின் VOICE OVER லே செல்வதால் மிக எளிதாக அதன் மேலே நம் கவனமும் செல்கிறது. ETHAN எனும் சிறுவன் அவனது குழந்தை பருவம் முதல் BAILEYயை  வளர்த்து வருகிறான். அவனும் சிறுவன் என்பதால் அவன் இதனுடன் பேசும் குழந்தைதன உரையாடல்களை BAILEY மிக அதிகமாக நம்மிடம் நக்கல் அடிக்கும். உதாரணமாக BAILEYக்கு துவக்கத்தில் ETHAN தான் சொல்லிதர நினைக்கும் விஷயங்கள்.
COME ON,  BAILEY.

BAILEY, SIT.

SIT.

ROLL OVER. ROLL OVER.

அம்மொழியும் ETHAN சொல்ல வரும் விஷயம் புரியாமல் BAILEY ஓடிகொண்டே இருக்க. ETHAN விடாமல் மேலும்
SHAKE YOUR PAW.
SHAKE YOUR PAW.
TURN AROUND. TURN AROUND.
அப்போது BAILEY இவ்வாறாக கூறும்
COME ON. WHAT HE SAYING? IT’S TOO MANY WORDS. COME ON OKAY? I AM DO THIS NOW. BUT ONE WORD GOT  SAID MORE THAN ANY OTHER. BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY . AFTER A WHILE,  I CAME TO UNDERSTAND  THE WORDS THAT MATTERED. I HAD A BOY, AND HIS NAME WAS ETHAN.  I GOT A NAME. MY NAME WAS  BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY.

இப்படியாக அதன் நையாண்டியும் வெகுளித்தனமும்  மட்டுமின்றி ETHAN மேற்படிப்பிற்கு வெளியூர் சென்று படிக்கும் ஒருகாட்சி வரும் அதில் BAILEY யின் வசனங்கள் நம்மை கலங்கடித்து விடும். அக்காட்சி நாம் நினைப்பது போல் கதையின் இறுதியில் வராது. நூறு நிமிட கதையில் அவை கிட்டத்தட்ட பாதியில் வரும். அதற்குள் ETHANனின் காதலியை அவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. அக்காதல் நிறைவேறாமல் அவனின் இறுதிகாலத்தில் அவனது காதலியை கண்டடைந்து அவனுடன் சேர்த்து வைப்பது என கதை முழுக்க BAILEYயின் ராஜ்ஜியம் மட்டுமே.

பொதுவாக நாயின் ஆயுட்காலம் மிக குறைவாயிற்றே அது இவ்வாறு அவனது இறுதிகாலம் வரை அவனுடன் இருந்தது போன்ற கேள்விகளை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். 

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=1jLOOCADTGs

Friday, December 28, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 141.
. 
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதும். படைப்பாளிகள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் சில நொடிகளேனும் இப்படத்தை பற்றிய ஏதேனும் சில நிகழ்வுகளை மனதிரையில் உருவகபடுத்தி இருப்போம். அவை பெரும்பாலும் சஞ்சயின் தீவிரவாத பக்கங்களை சார்ந்ததாகவே இருக்கும். காரணம் இந்த நடிகனின் கதையில் பெரும் சூவாரசியம் ஒளிந்திருக்கும் பக்கங்கள் அவை. இதற்க்கு முன் வந்த அனைத்து BIOGRAPHY கதைகளைகாட்டிலும் அதிக ஆர்வம் இந்த படத்தின் மீது ஏற்பட மிகமுக்கிய காரணம். இவரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு முன்பே பரிட்சயம் என்ற எண்ணமே. பெரும்பாலானோர் இப்படத்தை தவறவிட்டதற்கும் இதுவே மூலகாரணியாகும்.


இந்த கதையை எடுக்க இவர்கள் முன் இருந்த மிகபெரும் சவால் மொத்த பார்வையாளருக்கும் இப்படத்தின் கதை தெரியும் என்பதே. தெரிந்த கதையையே மீண்டும் திரையில் ஒருமுறை பார்க்க வேண்டுமா என்ற எண்ணமும் பெரும்பாலோருக்கு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. நாம் அனைவரும் இக்கதையை எந்தெந்த கோணத்தில் காட்சிபடுத்தி இருப்பார்கள் என்று கணித்திருந்தாலும். நம் அனைவரின் யூகங்களையும் பொய்யாக்கி SANTHOSHKUMAR HIRAANI இக்கதையை தொடுத்த விதமே இவரின் தனித்துவம். இவரின் முந்தைய எந்த கதைக்கும் தேவைபடாத அளவு எடிட்டிங் துறைக்கு பெரும்பங்கு பொறுப்பு கொடுக்கும் கதை. 


படத்தின் துவக்க நிமிடத்தில் இருந்து இறுதி ஷாட்வரை நம்மை அதே ஆர்வத்தில் சற்றே குழைந்து படம் நெடுகிலும் உருக வைக்க இப்படியான வெகுசில நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். நம் நினைத்ததும் சட்டென நம் நினைவில் வரும் சஞ்சயின் அந்த நான்கைந்து தோற்றங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்தது மட்டுமின்றி அந்த இடப்பக்கம் சற்றே திரும்பிய வாக்கிலே இருக்கும் அவரின் கழுத்தும். கால் பாகம் இடுங்கிய பார்வையையும். உடற்பயிற்சியின் காரணமாக அகன்ற தோள்களால் உடலோடு ஒட்டாமல் சற்றே விலகியேயிருக்கும் அவரின் கைகளும் மற்றும் தோள்கள் சற்றே சாய்ந்தபடியே நடக்கும் அந்த எகத்தாள நடையையும் இந்தஅளவு வேறு எந்த நடிகனாலும் உள்வாங்கி சாத்தியபடுத்தி இருக்க இயலுமா என்பது கேள்விக்குறி.


ஒருவேளை இவர்மீது பதிந்த அந்த தீவிரவாதி கரை உண்மையாக இருக்குமோ என முன்னாபாய் படத்தைகூட இன்றுவரை பார்க்காமல் தவிர்த்து வரும் என்னை போன்றவர்களுக்கு. இந்த படத்தின் மூலம் மிக தெளிவான ஒரு பார்வையை நம் மக்கள் உடனே ஏற்றுகொள்ளும் வகையில் மிக நெகிழ்ச்சியாகவே தொடுத்திருக்கிறார் இயக்குனர். அப்பா, அம்மா, காதலி, மற்றும் நண்பர் என மிக சில பாத்திரங்கள் மட்டுமே முழு கதையையும் ஆக்கரமித்திருப்பினும்  அவை நமக்கு முழு கதையிலும் பெரும் ஆர்வத்தை மட்டுமே ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை. அதிலும் சஞ்சயின் நண்பன் பாத்திரம் ஏற்றிருக்கும் MASAAN மற்றும் RAAZI புகழ் VICKYKAUSHAL படம் நெடுகிலும் நம்மை நெகிழ செய்ததில் பெரும்பங்கு.


இப்படியான கதையை எங்கிருந்து துவங்குவது என்பதில் துவங்கி பெரும் சர்ச்சையான இவரின் தீவிரவாத முகத்தை எவ்வாறு நியாயபடுத்த அல்லது எவ்வாறு கூறினால் அது நம்மை சமாதானபடுத்துமோ அந்த வகையில் வடிவமைத்த திரைக்கதை. இது PK படத்தின் திரைக்கதை உழைப்பிற்கு சற்றும் சளைத்ததல்ல. ரன்பீர் எனும் மஹா அசுரனின் பெரும் பாய்ச்சல் இப்படம். குழந்தையின் கண்களில் சட்டென அரும்பும் கண்ணீரில் அது செய்த தவறுகள் அனைத்தையும் மறந்து வாரியணைக்கும் தாயை போல். சஞ்சயின் அனைத்து தவறுகளையும் மறந்து மன்னித்தே ஆகவேண்டிய சூழலுக்கு நம்மை ஆட்படுத்திறார் ரன்பீர்.


1.இவரின் துவக்க காலம். அதிலேயே போதைக்கு அடிமையாகி   அதிலிருந்து மீண்டுவருவது.
2. 12 வருடங்களுக்கு மேல் முன்னணி நாயகர்களில் ஒருவராக வளம் வரும் பகுதி.
3. ஆயுதம் வைத்திருந்த சர்ச்சையில் முதன்முதலில் சிக்கியது.. 
4.  தீவிரவாதி பழியுடன் இறுதியில்சிறை சென்று மீண்டு வருவது



இதில் சர்ச்சையான இவரின் மூன்று காலகட்டங்களை மட்டுமே எடுத்துகொண்டு அதற்க்கு மிக தெளிவாக இவர் பக்கத்து நியாயங்களையும். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் அதிகபிரசிங்கி தனங்களையும். சஞ்சயின் வாக்குமூலம் மற்றும் தீர்ப்பின் முழு விவரங்கள் அனைத்தையும் RKH தனக்கே உரிய அதே சுவாரசியம் குறையாத பாணியில் முந்தைய படங்களை போலே வழங்கி உள்ளார். சஞ்சய்தத் காலத்திற்கும் கடமைபட்டிக்க வேண்டுமெனில் அது ரன்பீர் மற்றும் RKHக்கே..

TRAILER LINK:

https://www.youtube.com/watch?reload=9&v=rRr1qiJRsXk

Tuesday, December 18, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 140.

ROMA  (2018) – SPANISH – பேரனுபவம்.

அதிகமா வலுவான கதையும், அதிக வசனங்களும் கொண்ட படங்களை பார்த்து பழகிய நமக்கு. காட்சிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து பெருசா எந்த அதிரடி திருப்பங்களும் இல்லாத ஏதாவது ஒரு எளிய மனுசனோட வாழ்க்கையின் சில பக்கங்கள மட்டும் ஒரு படமாக்குவது இவர்களின் பாணி.. அவங்களோட நிதானமான கதை நகர்த்தும் யுக்தி காட்சிகளின் மேல அவங்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான். என்ன ஒரு மழையை, ஒரு பாத்திரம் நடந்து போவதை கூட ஒரே ஷாட்டில் ரொம்ப மெதுவா நீட்டி சொல்லிருப்பாங்க. எதனால இவ்ளோ DETAILING ஒவ்வொரு காட்சிக்கும். இது பார்வையாளருக்கு சலிப்பை ஏற்ப்படுத்தாதா? இல்ல அது நம்ம அந்த காட்சிகளோட ஒன்ற செய்ய யுக்திதான்.

 எப்படினா..!

இந்த படம் போலவே ஒரு வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை பற்றிய கதையில் நம்ம சினிமாவில் அந்த வீட்டோட முக்கிய பெண் பாத்திரம். இந்த பெண்ணோட தலையை ஆறுதலா தடவியபடி அவங்க வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் “இவளும் எங்க வீட்ல ஒருத்தி மாறிதானு” சொல்றபோல ஒரு காட்சி கண்டிப்பா வரும். அதுலயே நாம அந்த பாத்திரத்தோட தன்மை, குணாதிசியம்னு ரொம்ப எளிமையா புரிஞ்சிக்கலாம். ஆனா இதே இந்த படத்தோட ஒரு காட்சியில இரவு பணி முடிஞ்சி தன்னோட அறைக்கு அந்த பெண் போவாங்க அப்ப அந்த வீட்டோட லைட் எல்லாம் OFF பண்ணிட்டே போவாங்க. அதும் ஒரே ஷாட்டில் ஒரு நிமிஷம் வரை போகும். இது காட்சிவழியே அந்த பொண்ணோட வேலையின் சுமையை அவங்க அக்கறையை புரியவைக்கும் ஒரு யுக்திதான். அந்த காட்சிக்கு இடையே சில வினாடிகள் வரும் ஒரு காட்சியும் இருக்கும்.


இரவு வீட்டிற்கு வந்த அந்த வீட்டோட தலைவரு ரூம்ல மனைவிட்ட சத்தம் போட்டுட்டு இருப்பாரு. வீட்டுக்கு வெளில நம்ம நாய் நெறைய இடத்துல அசிங்கம் பண்ணி வெச்சிருக்கு. என்ன வேலை பாக்கறாங்க. இதெல்லாம் நீ கேக்கமாட்டியானு. இந்த பொண்ணு ஒவ்வொரு லைட்டா அமிச்சிட்டே வரும் சத்தம் கேட்டதும். அந்த பெண்மணி ரூமோட கதவ வேகமா சாத்துவாங்க அவளுக்கு கேட்டுடகூடாதுனு. இதெல்லாம் இயக்குனரோட அசாத்திய திறமைதான். அந்த ஒரு ஷாட்லையே அந்த பெண் எப்படி தன்னோட வேலைல கவனமா இருக்கறாங்கன்னு மட்டுமில்லாம. அந்த வீட்டோட தலைவி இவங்கமேல என்ன அபிப்பிராயதுல இருக்காங்கனும் தெரியபடுத்தி இருப்பாங்க. நம்ம அதிகமா வசனத்தை வெச்சி புரியவைக்க முயற்சிக்கறோம். இவங்க காட்சிவழியா இப்படி உணர்த்தறாங்க அவ்ளோதான்.

ரொம்ப சாதாரணமா ஆரமிச்சி போய்டே இருக்கற கதைல நாப்பதாவது நிமிசத்துல தான் நமக்கு ஒரு பிடிப்புவரும். அதாவது நமக்கு சினிமான்னா எதாவது திருப்பம் காட்சிகள்ல இருந்துட்டே இருக்கனும்ல. அப்படி கொஞ்சமா ஒரு குட்டி திருப்பம் அந்த வேலை பாக்கும் பொண்ணு தான் கர்ப்பமா இருக்கறத தெரிஞ்சி. அந்த வீட்டு தலைவிட்ட அத சொல்லவர காட்சி. அதுவரைக்கும் ரெண்டுபேருக்கும் பெருசா எந்த வசனமும் இருக்காது. ஆனா இதுக்குள்ளவே அந்த பொண்ணு இந்த வீட்டு குழந்தைங்கள்ல இருந்து அந்த வீட்டு நாய்வரை எவ்ளோ அந்நியோனியமா இருக்காங்கனு பல காட்சிகள்ல சொல்லியிருப்பாங்க.


அந்த பொண்ணு இந்த விசயத்த கொஞ்சம் பதட்டமாவே சொல்லி முடிச்சிட்டு. “என்ன வேலைய விட்டு தூக்கிடுவிங்களானு” கேக்கும். அப்படில்லாம் இல்லவே இல்லன்னு அதுவரை ஆறுதலா அந்த பொண்ணோட கையை மட்டும் நீவிவிட்டுடு இருந்த அந்த பெண்மணி அவங்களோட சேர்த்து அணைச்சி ஆறுதல் சொல்ற அந்த காட்சி அப்படியே நம்மள நெகிழவெச்சிடும். காரணம் என்னதான் நமக்கு அவங்க பாத்திரத்தோட தன்மைய பலகாட்சிகள் மூலமா நமக்கு புரியவெச்சாலும். இப்படியான நிகழ்வுகள் மூலமாதான அந்த பொண்ணு இதஉணரும். இங்கயும் முன்ன சொன்ன காட்சிபோலவே இயக்குனர் அவரோட ஒரு EXTRA BIT சேர்த்து இருப்பாரு. ஆனா அது நூல்அளவு கூட தெரியாது. அந்த வீட்டு பெண்மணி அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கும் போதே அவங்க சின்ன பையன் வரைஞ்ச படத்த அவங்க அம்மாகிட்ட கொண்டுவருவான்.

WHY IS CLEO CRYING?

SHE HAS A TUMMY ACHE. னு அந்த பெண்மணி சொன்னதும். அந்த குட்டி பையன் அந்த பொண்ணோட மடியில் அமர்ந்து. ஆறுதலா அவங்க தோள்ல சாஞ்சிகிட்டு. அவங்க வயிற்றை நீவியபடியே

PAIN PAIN GO AWAYனு பாடும்போது ஏற்கனவே கொஞ்சம் கலக்கமா இருந்த மனசு, இந்த சிலவிநாடி நிகழ்வு கண்கலங்க வெச்சிடுது. அப்படி யார்தான் இதனோட இயக்குனர்னு பார்த்தா நமக்கு ஏற்கனவே நல்ல அறிமுகமான GRAVITY, Y TU TAMBIEN படங்களோட இயக்குனர் ALFONSO CUARON.

என்ன இருந்தாலும் நம்ம பாணிதான் காட்சிவழி கதை சொல்றதவிட பலம்னு நெனச்சாலும். இதுல ஒரு பிரசவ காட்சி ஒன்னு இருக்கு. அது ஒன்னு போதும். அந்த சில நிமிட காட்சிக்கு கண்டிப்பா அவங்க சில வார உழைப்பை போட்டு இருப்பாங்க. நிறைய படங்கள் நம்மள கலங்க வெச்சி இருந்தாலும். ரொம்ப நேரம் கண்ணீர்விட்டு அழவைக்க இப்படியான சில அபூர்வ படைப்புகளாலதான் முடியும்.

TRALIER LINK:
https://www.youtube.com/watch?v=UspdGO-XBi8

Sunday, December 16, 2018






பார்த்ததில் மிகவும் ரசித்தது: 139.

அமானுஷ்ய கதைகளோட பெரிய பலமே முதல் பதினைந்து நிமிசம்தான். அந்த கொஞ்சநேரத்துல அவங்க ரசிகர்களோட நாடித்துடிப்பை வெறும் SOUND EFFECT ல மட்டுமில்லாம கதையில நடக்கபோற ஏதோ ஒரு சம்பவத்தின் மேல கொஞ்சம் எதிர்பார்பாவது ஏற்படுத்தனும். அந்த மாறி படங்கள்தான் நம்மை ஆரம்பம்ல இருந்து கதை மேல ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். 

பூர்த்தி தேவி அளவில்லா செல்வமும் தானியமும் கொண்டவள். இந்த பூமி அவளோட வயிற்றிலதான் அமைஞ்சி இருக்கு. இந்த பிரமாண்டம் உருவானப்பதான் தேவி இந்த வயிற்றில இருந்துதான் 16 கோடி தேவாதி தேவர்கள உருவாக்குனா. தேவிக்கு தன்னோட முதல் குழந்தை மேல அளவில்லா அன்பு இருந்தது. அவன் பேர் HASTAR. எந்த மதபுத்தகத்துல தேடினாலும் இந்த பெயர் உங்களுக்கு கிடைக்காது ‘’ஏன்னா?’ அவன் தேவியோட தங்கத்தையும், தானியத்தையும் அடைய நெனச்சான். தங்கம் மொத்தத்தையும் சொந்தமாக்கிட்டான். ஆனா தாணியத்த அடைய நெனச்சப்பதான் மத்த தேவர்கள்ளாம் அவன தாக்கினாங்க. தேவிதான் அவன காப்பாத்தினாங்க ஒரு நிபந்தனையோட. அதாவது இனி HASTAR யாரும் வணங்கமாட்டங்க. அவன எல்லோரும் மறந்துடுவாங்க. பல யூகங்கள் கடந்துச்சி. HASTAR தேவியோட வயத்துகுள்ளவே தூங்கிட்டு இருந்தான். இந்த நேரத்துலதான் நம்ம முன்னோர்கள் HASTAR பேர்ல ஒரு கோயில கட்டுனாங்க. அதிலிருந்தே மொத்த தேவர்களோட கோவமும் நம்ம ஊர் (அது தான் இந்த படத்தோட தலைப்பு) மேல திரும்பி மழையா பெய்ய ஆரமிச்சது. இப்ப நாம அவன எழுப்பனும். ஏன்னா அவனோட சாபம். நமக்கெல்லாம் வரம்.
‘’புரியலையே.
“உள்ள போனதும் புரிஞ்சிப்ப.’
“உள்ளனா? ‘எங்க’.
தேவியோட வயித்துகுள்ள’’.
படம் துவங்கிய முதல் ஷாட்டே ஒரு கையில் தானியமும் ஒரு கையில் தங்கமும் நிற்காமல் கொட்டிகொண்டே இருக்கும் சிற்பமும். அதன் பின்னே VOICE OVER ல வரும் வசனங்கள்தான் மேல சொன்னது. எந்த பெரிய ஆர்ப்பாட்டங்களும் இல்லாம வெறும் உரையாடல் மூலமே கதையோட ஆரம்பத்துல ஏற்படுத்துன இந்த எதிர்பார்ப்ப கடைசிவரை கொண்டுவந்து. CLIMAX ல எதிர்பார்ப்புக்கும் மேலயும் பூர்த்தி பண்ணி இருக்காங்க.

1918 களில் கதை ஆரமிக்குது. அதாவது மொத்த தேவர்களோட சாபத்தால எப்பவும் மழையோடே இருக்கும் TUMBBADங்கற அந்த கிராமத்துல. கிட்டத்தட்ட மொத்த பேருமே அந்த ஊர காலிபண்ணிட. தேவர்களோட சாபத்துக்கு காரணமானமானவங்களோட இந்த தலைமுறைய சேர்ந்த  ரெண்டு பசங்களும் அவங்களோட அம்மா + இன்னொன்னும் அந்த ஊர்ல இருக்கு.முதல் அந்த சில நிமிடங்களில் அவங்க கூட தங்கியிருக்கும் அந்த வயதான பாத்திரம் நமக்குள் நிச்சயமாக சிறு பயத்தையும் சிதிலமடைஞ்சி போன அந்த அரண்மனையின் உள்ளே ஒளிந்திருக்கும் பெரும் புதையல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திடுது.
“ஆனாலும் நீ ரொம்ப பேராசைகாரன்டா”
என்கிட்டே இருக்கறதுலையே எனக்கு ரொம்ப பிடிச்சதே இது ஒன்னுதான்.
அந்த புதையலை எடுக்க முயற்சி பண்ணி தன்னோட முன்னோர்கள் மொத்த பேரும் இறந்தாங்கங்கற வரலாறு தெரிஞ்ச அப்பறமா வரும் உரையாடல்தான் மேல சொன்னது. அந்த தங்க நாணயங்களை மொத்தமாக எடுக்க முடியாது. சில வழிமுறைபடி முயற்சி பண்ணா சில நாணயங்கள் கிடைக்கும். ஆனால் உயிருக்கு உத்திரவாதமில்லை. இப்படியே கிடைக்கும் சில நாணயங்களை கொண்டு தனது குடும்பத்தை நடத்தி வரும் நாயகன் .

தனது காலத்திற்கு பின்னாடியும் தன்னோட பையனும் அந்த நாணயங்கள எப்படி எடுக்கணும்னு அவனுக்கு வீட்டிலேயே பயிற்சி கொடுக்கறாரு. இந்த சூழல்ல இந்தியா சுதந்திரத்திற்கு பின்னால யாருமே இல்லாதே அந்த கிராமத்தை மாதிரி கிராமமாக்க சட்டம் கொண்டு வராங்க. திரும்ப முன்ன போல எப்பவேணா அந்த கிராமத்துக்கு போய் தங்ககாசு எடுக்கும் வாய்ப்பு. கிடைக்காம போகலாங்கற சூழ்நிலை உருவாகுது. ரொம்ப பேராசைகாரனாலதான் இத்தனை காலம் உயிரை பணயம் வெச்சி இப்படியான வேலைய செய்ய முடியும். இந்த சூழல்ல அவனோட பையன் அந்த தங்கத்த மொத்தமா எடுக்க ஒரு யோசனை சொல்றான். அந்த பையன் வர ஆரமிக்கும் காட்சிகள்ல இருந்துதான் படம் இன்னும் பெரிய பரபரப்பு கட்டத்துக்கு வருது. சில தங்கக்காசுகளை எடுக்கவே உயிரை பணயம் வெக்கும் சூழல்ல மொத்தமா எடுக்கும் யோசனையே வேணாம்னு சொல்ல முடியாத சூழல். அரசாங்கம் அவங்க திட்டத்த செயல்படுத்த ஆரமிச்சி திரும்ப அங்க போகவே முடியாத நிலை வந்துட்டா என்ன பண்றதுன்னு அவனும் பையனோட திட்டத்துக்கு சம்மதிக்கறாரு அந்த தேவியோட வயித்துக்கு உள்ள போற காட்சிகள் எல்லாமே நம்மள ரொம்ப படபடக்க வெச்சிடுது.


இது சாமி பூதம் கதை மாறி தெரிஞ்சாலும் கதைல எங்கேயும் பூஜை, விரதம் மாறி சமாச்சாரம்லாம் எதுமே இல்லாம ரொம்ப கவனமா திரைக்கதை பண்ணிருக்காங்க. PERIOD கதைகள்ள ரொம்ப முக்கியமான ART DEPT வேலைய ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க. அதும் அவன் சின்ன பையனா இருக்கும் துவக்க காட்சிகள்ல அவங்க தங்கியிருக்கும் வீடும் அந்த GASTHARட்ட சாபம் வாங்குன பாட்டி இருக்கும் அறையும் செம்ம. அந்த கால் ஊனமான சின்ன பையனோட தேவி வயித்துக்குள்ள போற இறுதிகாட்சிலாம் விவரிக்கவே முடியாது. 

Monday, November 26, 2018






WEB SERIES -001


MIRZABUR (2018) – SESSION – 1 - 09 EPISODES.

மூன்று மணிநேர திரைப்படங்களே அரிதாகி போன காலகட்டத்தில் WEB SERIES கள் ஹிட் அடிக்க முக்கிய காரணங்களாக இருப்பவை. கதையின் அனைத்து முக்கிய பாத்திரங்களுக்கும் அவர்களின் பின்புலங்களை சொல்லும் கிளைகதைகள். மிக தெளிவான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை. அதிக பாத்திரங்கள் உள்ள கதைகளிலும் அவர்களின் பின்புல கதைகள் தொடர்களின் நீளத்திற்கு மட்டுமல்லாது  அப்பாத்திரங்களை நாம் நினைவில் வைத்துகொள்ளவும் உதவுகிறது. ஏனெனில் ஒரு SEASON குறைந்தது 1௦ EPISODE வைத்து கொண்டாலும் ஒரு EPISODEக்கு ஒரு மணிநேரம் எனில் இந்த ஒரு SEASON 1௦ மணிநேரத்தை முடிக்க குறைந்தது ஒரு வாரம் தேவைபடலாம். இதில் சில பாத்திரங்கள் அவர்கள் யார் என நம் நினைவில் வரவில்லை எனில் அவர்கள் மூலம் கதைகளில் நிகழும் முக்கிய திருப்பங்களும் நமக்கு பெரிய சூவாரசியத்தை கொடுக்காது. இந்த கதையின் மிக முக்கிய தகுதியாக நினைப்பதே நீட்டி முழக்கும் எந்த பின்புல கதைகளும் யாருக்கும் இல்லாததே. அவை தேவையும் படல. மிக குறைந்த பாத்திரங்களை கொண்டு அதிவேக திரைக்கதை மூலம் சரியான ACTION விருந்து படைத்துள்ளது MIRZAPUR குழு.  

மத்திய பிரதேசத்தில் MIRZAPUR எனும் நகரே இக்கதைக்கான களம். தன் சகோதரன் மற்றும் தங்கையுடன் ஒரே கல்லூரியில் பயிலும் அண்ணன் பாத்திரம். நேர்மையான வக்கீலாக அவர்களின் தந்தை மற்றும் அம்மா என மிக அழகான நடுத்தர குடும்பம். (அழகான குடும்பம்னு சொன்னாலே அது ஏழைகளும், நடுத்தர வர்கத்தினர் மட்டும்தான்னு ஆரம்பம் முதலே பழக்கி வெச்சிருக்காங்களே.) அவர்கள் நகரில் ஆயுதம் முதல் போதை வஸ்துக்கள் மட்டுமின்றி அரசியல் முதல் காவல்துறை வரை தனது கட்டுபாட்டில் இயக்கிகொண்டிருப்பவனின் மகன் MUNNABHAI அக்கல்லுரியிலே பயில்கிறார். அந்த அண்ணன் பாத்திரம் முன்னா போன்று வாழக்கைக்கு ஆசைபடுகிறார். இனி உங்கள் யுகத்தில் தோன்றும் காட்சிகளே பெரும்பாலும் இக்கதைகளில் வரும். பொல்லாதவன் செல்வம், ரவி போன்றே இதில் முன்னாபாய் மற்றும் அவரின் தந்தை (DON) KAALEEN BHAI பாத்திரங்கள் வடிவமைக்கபட்டிருக்கும். RGV ன் பல GANGSTER கதைகளிலும் இம்மாரியான பாத்திரங்கள் நிச்சயம் இருக்கும். அதே கதை பழக்கபட்ட பாத்திர வடிவமைப்புகள் இருந்தும் இந்த முதல் SEASON லில் 9 EPISODEலும் ஒரு இடத்திலும் நம் கவனம் முழுதையும் இக்கதையில் மட்டுமே இருக்க மிகபெரும் காரணம். விறுவிறுப்பான திரைக்கதை மட்டுமன்று. கதைக்கு தேவைப்படாத ஒரு பாத்திரத்தை கூட இந்த முழு SEASON லும் பார்க்க முடியாது. மிக குறைந்த பாத்திரங்களை கொண்டே அடுத்தடுத்த EPISODE யை பார்க்க தூண்டும் ஆவலை பெரும் மெனக்கெடல் மூலம் சாத்தியபடுத்தி உள்ளது இக்குழு.

ஒரு பகல் அல்லது ஒரு இரவு உங்களுக்கானதாக வாய்க்கபெற்றால் கண்டிப்பாக இத்தொடரை பார்க்கலாம். பெரும்பாலானோர் இதை ஒரே SITTING ல் வாய்தா இல்லாமல் பார்த்து முடிக்கவே வாய்ப்புகள் அதிகம். மிகமுக்கிய காரணம் இத்தொடர் HINDI மட்டுமல்லாது TAMIL மற்றும் TELUGU லும் உள்ளது. வேறுமொழி SERIES பார்க்கும் நினைவே தோன்றாமல் தமிழில் வந்த ஒரு SERIES பார்க்கும்படியான நேர்த்தியான DUBBING.


ஒரு பத்தாயிரம் புல்லெட் முதல் சீசன் முழுக்க வெடிச்சி ஒரு ஆயிரம் பேர கொன்னிருப்பாங்க. அந்த கொலைகளை விறுவிறுப்பாக்க பெரிய காரணம் TECHNICAL SIDE EDITINGங்கும், CG ம்தான் ரொம்ப மெனக்கெட்டு இருக்காங்க. அதும் முதல் மூணு EPISODE ல EDITING தான் ஒரே நாள்ல இந்த முழு SEASON ம் பாக்க முழு காரணமே. ஒவ்வொரு எபிசொடும் எப்படி ஆரம்பம் ஆகுதோ முடிவும் அதே போல. அப்பவே அடுத்தத பாக்க வெக்குது. ACTION விரும்பிகளுக்கு ரொம்ப பெரிய விருந்து இந்த SERIES. இத பார்த்து கண்டிப்பா ரெண்டாவது சீசனுக்கு ரொம்ப ஆவலா காத்திருக்க வாழ்த்துக்கள்.

TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=ZNeGF-PvRHY

Friday, November 2, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 138.

காட்சி: ௦3
ஒரு ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்களை மீட்டுவரும் இருவிமானிகள். சீனியர் பைலட் எடை குறைந்த CARGO விமானத்தில் அதிக பயணிகளுடனும். எடை அதிகம் கொண்ட பயணிகள் விமானத்தில் சில பயணிகளுடனும் பறந்து செல்கின்றனர். பயணிகளை மீட்டுவரும் வரும் அவசரத்தில் அந்த விமானத்தை எந்தவித பரிசோதனைகளும் இல்லாமல் கொண்டு வந்ததால் தாமதமாகவே அந்த CARGO விமானத்தில் எரிபொருள் குறைவாக உள்ளது தெரியவருகிறது. அதும் அடுத்த சில நிமிடங்களுக்கு மட்டுமே விமானம் இயங்கும் என தெரியவருகிறது. உடன் விமானி கட்டுபாட்டு அறைக்கு தகவல் தருகிறார். இந்த குறுகிய நேரத்தில் மாற்றுவிமானமோ அல்லது அருகில் வேறு விமான நிலையங்களோ இல்லாததால் செய்வதறியாது திகைகின்றனர்.

பின்னால் குறைவான பயணிகளுடன் வரும் விமானத்தின் பயணியொருவரின் யோசனைபடி இருவிமானத்தையும் முடிந்தளவு குறைவான உயரத்திற்கு கொண்டு சென்று அதில் உள்ள பயணிகளை இந்த விமானத்திற்கு மாற்றும் யோசனையே இந்த குறுகிய நேரத்திற்கு உகந்ததாக எற்றுகொள்ளபடுகிறது. சரி எவ்வாறு அந்த விமானத்தில் இருந்து இந்த விமானத்திற்க்கு கிட்டத்தட்ட 3௦௦௦ அடி உயரத்தில் பயணிகளை மாற்றுவது. சாலையில் பழுதடைந்து நிற்கும் கார்களை “டோவ்” செய்து SERVICE CENTRE க்கு கொண்டுவரும் முறையில் கார்கோ விமானத்தில் சரக்குகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பினால் ஆன கயிற்றை கொண்டு முதலில் இருவிமானங்களையும் இணைக்கின்றனர். பின் டன் கணக்கில் விமானங்களில் ஏற்றபடும் சரக்குகளை வைக்க ராட்சஷ வடிவிலான பெரிய அளவு மீன்பிடி வலைகளை போன்ற பைகளில் 15-2௦ பயணிகள் வரை ஏறி இதிலிருந்து அந்த விமானத்திற்கு மாற்றப்பட்டு கூடுமானவரை அனைவரும் காப்பாற்றபடுகின்றனர். கிட்டத்தட்ட முழு படமும் முடிவுற்றதாக நினைக்கும் வினாடியில்தான் பயணிகள் விமான விமானிக்கு வேறொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அதாவது இந்த விமானத்தின் பின்புறம் உள்ள இரு சக்கரங்களில் ஒன்று பழுதடைந்து உள்ளதும். தன்னிடம் அதிக பயணிகள் இல்லாததால் சமாளித்து இறக்கிவிடலாம் என்று இருந்ததும். தற்போது அந்த விமானத்தின் மொத்த பயணிகளும் இதற்க்கு வந்ததால் தரையிறக்கும் பொழுது கண்டிப்பாக இந்த விமானம் வெடித்து சிதறும் நிலையை உணருகிறார். சரி இந்த புதிய பயணிகள் விமானத்தின் சக்கரங்கள் பழுதடைய காரணமென்ன?..

காட்சி: ௦2
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய நகரத்தின் விமானநிலையத்திற்கு செல்ல இந்த இரு விமானிகளும் பணிக்கபடுகின்றனர். அங்கு விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்த மக்களை மீட்டுவர செல்கின்றனர். இப்பொழுது நம் கற்பனையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த சிறு நகரமோ அல்லது சேதமடைந்த விமான நிலையத்தையோ எந்த அளவில் கற்பனை செய்து வைத்து இருந்தாலும் இவர்கள் காட்சிகளில் நிச்சயம் நம்மை ஆச்சர்யபடுத்தி விடுகின்றனர். பூகம்பத்தால் அவர்களே அறியாவண்ணம் பல வருடங்களாக உறங்கிகிடந்த எரிமலை வெடிக்க ஆயுத்தமாக சாம்பலை காற்றில் கசியவிடுகிறது. மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட அந்த விமானநிலையம் ஏற்கனவே பூகம்பத்தால் சிதிலம் அடைந்து. மின்கசிவால் அங்குள்ள எரிபொருட்கள் அந்த பகுதியே விழுங்கும் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க. இந்த விமானிகள் இருவரும் மற்றுமொரு பெண் விமானியுடன் அங்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் அந்த மக்களை பார்த்ததும் உடனடியாக அவர்களை மீட்டு செல்ல அனைவரும் ஆயுத்தமாகும் நிலையில் அந்த மக்களில் பாதிஅளவு ஆட்கள் இந்த மலையின் பின்புறம் வாகன வசதிஇல்லாமல் தவித்து வருவதாகவும். இங்குள்ள ஏதேனும் வாகனத்தில் சென்றால் உடனடியாக மீட்டு வரலாம் என பயணிகள் கூறுகின்றனர். CAPTAIN சம்மதத்துடன் அவர்களை மீட்க மற்றுமோர் விமானி செல்கிறார். சேதமடைந்த இந்த ஓடுதளத்தில் நிச்சயம் இந்த விமானத்தை TAKEOFF செய்ய இயலாது என CAPTAIN கவலைகொள்ளும் நிலையில். அங்கு குறைவான எடை கொண்ட MINI CARGO விமானம் கண்ணில்படுகிறது. இந்த ஓடுதளத்தில் இந்த விமானத்தால் மட்டுமே TAKEOFF செய்வது சாத்தியம் என்பதால் அதை தயார் செய்கிறார். மக்களை மீட்டு வர சென்ற விமானியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பாததால் இந்த விமானத்தில் கிளம்புகிறார். அங்கு பயணிகளை மீட்கயில் சரியாக எரிமலையும் நெருப்பு குழம்பை கக்க. நெருப்பு ஊற்றில் இருந்து கிளம்பிய நீராக மலையில் இருந்து வழிய துவங்குகிறது. அந்த மலைபாதையில் கண்முன்னே நெருப்பு இரையை விழுங்கிய பாம்பை போல மிகநிதானமாக வழியதுவங்குகிறது. இருக்கும் ஒரு பாதையிலும் எரிமலை குழம்பு குறுக்கிட்டதால். வாகனத்தில் இருந்து நடைபயணமாக அம்மக்களை அழைத்துகொண்டு விமானநிலையம் விரைகிறார்.
அங்கு அவர்களின் விமானம் தவிர்த்து அனைத்தும் எரிந்து கொண்டிருக்க தன் சக விமானி மற்றும் அங்கிருந்த மக்களும் இல்லாததை கண்டு அதிர்கிறார். தற்பொழுது மூன்று பக்கமிருந்தும் எரிமலை குழம்பு மேலும் ஓடுதளத்தை சேதபடுத்திகொண்டே இருக்க. குறைவான பயணிகள் என்பதாலும் உயிரை காத்துகொள்ள இந்த நெருப்பு குழம்பின் வழியே ஓடுதளத்தை கடந்து பறக்கிறார். விமானம் TAKEOFF ஆனதும் மூன்று சக்கரங்களும் தானாக விமானத்தின் உள்செல்லும். மீண்டும் தரைஇறங்கும் பொழுது மட்டுமே வெளிவரும். இதில் நெருப்பில் சேதம்அடைந்ததால் வேலை செய்யாத ஒரு சக்கரத்துடனும். தன்னால் காப்பாற்றப்பட்ட பயணிகளுடனும். இந்த சேதம்அடைந்த ஓடுதளத்திலும் வெற்றிகரமாக விமானத்தை TAKEOFF செய்த மகிழ்வில் பறக்கிறார்.


மேற்கூறிய அனைத்தும் காட்சிவடிவில் நம்மை மேலும் ஆச்சர்யபடுத்தும். அதும் பயணிகளை விமானம் டூ விமானம் மாற்றும் கட்சிகள். பயணிகளை மீட்டுவருகையில் அந்த வாகனத்தின் சாகசமும். அவ்வாகனத்தின் முகப்புகண்ணாடியில் வெடித்து கிளம்பும் எரிமலையை காட்டபடுவதும். அந்த விமானநிலைய செட் மற்றும் விமானம், ஓடுதளம், கேப்டன் அவரின் அதிகாரம் குறித்த பல தகவல்களும் நம்மை மென்மேலும் ஆச்சர்யபடுத்துபவை. இந்த இரு காட்சிகள் மட்டுமின்றி காட்சி:௦1ல் இந்த இரு விமானிகளுடன் வந்த பெண்விமானிக்கும் இவனுக்குமான குட்டி லவ். மற்றும் இரு விமானிகளின் முன்கதை சுருக்கமும் நம்மை அசதிஆக்காது. ரொம்ப ஆர்வமா விரும்பி அனைவரும் பாக்கலாம். ADVENTURE, ACTION விரும்பிகளுக்கு SPECIAL TREAT இந்த ரஷ்யன் படம்.

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=vTzlfO_zKsQ

Search This Blog